“நீ விண்ணப்பம் பண்ணினதினாலே”
நீங்கள் உங்கள் கவலைகளைக் குறித்து என்ன செய்வீர்கள்? அவற்றை உங்களுடைய உள்ளத்திற்குள் ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது பரத்துக்கு நேராக திருப்புவீர்களா?
சனகெரிப் எனும் கொடிய அசீரியா தேசத்து ராஜா, எருசலேம் பட்டணத்தை அழித்துப் போடும்படி ஆயத்தம் பண்ணுகையில் எசேக்கியா ராஜாவுக்கு, செய்தி அனுப்பி, பிற தேசங்களைக் கைப்பற்றினது போலவே யூதாவையும் கைப்பற்றுவேன் என்று அறிவித்தான். எசேக்கியா ராஜா, அச்செய்தி அடங்கிய ஓலையை எடுத்துக்கொண்டு, எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய், “கர்த்தருக்கு முன்பாக அதை விரித்து” (ஏசா. 37:14), கர்த்தரை நோக்கி தங்களை இரட்சிக்கும்படி விண்ணப்பம் பண்ணினான்.…
உண்மையான விடுதலை
ஒலௌடா யூக்கியானோ (1745–1796) 11 வயதாக இருந்தபொழுது கடத்தப்பட்டு அடிமையாக விற்கப்பட்டான். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கும், வெர்ஜினியா காலனிக்கும், அங்கிருந்து இங்கிலாந்துக்குமான பயங்கரமான வேதனை நிறைந்த பயணத்தை மேற்கொண்டான். அவனது 20வது வயதில் பணம் கொடுத்து, அவன் தன் விடுதலையை வாங்கினான். மனிதாபிமானமற்ற முறையில் அவன் நடத்தப்பட்டிருந்ததினால் அவன் இன்னமும் உணர்ச்சிபூர்வமான, சரீரப்பிரகாரமான தழும்புகளை தாங்கிக் கொண்டிருந்தான்.
அவனுடன் சேர்ந்த மற்ற மக்கள் இன்னமும் அடிமைத்தனத்தில் இருந்ததால் அவன் பெற்ற விடுதலையின் நிமித்தம் அவன் மகிழ்ச்சியடைய இயலாமல், இங்கிலாந்தில் அடிமைத்தனத்தை ஒழிக்கும் இயக்கத்தில்…
சாந்தத்தோடு தாக்கத்தை ஏற்படுத்துதல்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் 26வது ஜனாதிபதியாக தியோடர் ரூஸ்வெல்ட் (1901–1909) ஆவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மூத்தமகன் தியோடர் ஜுனியருக்கு உடல்நலமில்லை என்பதைக் கேள்விப்பட்டார். அவரது மகனுடைய நோய் சுகம் அடையக்கூடியதாக இருந்தாலும், டெட்டின் சுகவீனத்திற்காக கூறப்பட்ட காரணம் ரூஸ்வெல்ட்டை மிக அதிகம் பாதித்தது. அவரது மகனின் நோய்க்கு அவர்தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ரூஸ்வெல்ட் அவரது பெலவீனமான குழந்தைப் பருவத்தில் “சண்டை” வீரனாக வேண்டும் என்ற எண்ணம் அவரது வாழ்க்கையில் செயல்படாததால், அவரது மகன் சிறந்த சண்டை வீரனாக வேண்டுமென்று…
சிறந்த சாலைப் பயணம்
மடகாஸ்கரின் தேசிய சாலை எண் 5ல் செல்லும்பொழுது, அழகிய வெண்மணல் பரப்பிய கடற்கரை, தென்னந்தோப்புகள், இந்து மகாசமுத்திரம் என்ற பல அழகிய காட்சிகளைக் காணலாம். 125 மைல் நீளமுள்ள அந்த இருவழிச் சாலை பாறைகள், மணல், களிமண்ணால் நிறைந்து காணப்படும். உலகிலுள்ள மோசமான சாலைகளில் ஒன்றாக இந்த சாலையும் பெயர் பெற்றுள்ளது. பேரழுகு வாய்ந்த காட்சிகளைக் காண இந்த சாலை வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் நான்கு சக்கரங்களையும் தனித்தனியே இயக்கக் கூடிய சக்தி வாய்ந்த (Four Wheel Driver) வாகனத்தில் தான் செல்ல…
தேவனுக்குப் பெயரிடுதல்
கிறிஸ்டோபர் ரெட் எழுதிய ‘நான் புரிந்து கொள்ள இயலாத கடவுள்’ என்ற புத்தகத்தில், எதிர்பாராத நபர்தான் முதல்முதலாக தேவனுக்கு பெயர் சூட்டியுள்ளார். அதுதான் ஆகார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகாரின் கதை மனித வரலாற்றைப் பற்றி மிக உண்மையான பார்வையைத் தருகிறது. தேவன், ஆபிராம், சாராயிடம் அவர்களுக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்று சொல்லி ஆண்டுகள் பல கடந்து விட்டன. சாராய் வயது முதிர்ந்தவளாகி பொறுமையை இழந்து விட்டாள். தேவனுக்கு “உதவி செய்யத்தக்கதாக”, அக்காலத்து வழக்கத்தின்படி மோசமான ஒரு காரியத்தைச் செய்தாள். அவளது அடிமைப் பெண்ணாகிய…
தேவனின் வார்த்தைகளை வெளிப்படுத்தும் நபர்
ரேடியோவில் நடக்கவிருந்த பேட்டிக்காக வர இருந்த தொலைபேசியின் அழைப்பிற்காக என் நரம்புகள் படபடக்கக் காத்திருந்தேன். அந்த பேட்டியின் காட்சி அமைப்பாளர், என்ன கேள்விகள் கேட்கப் போகிறாரோவென்றும், நான் அதற்கு என்ன விதமாக பதிலளிக்கப்போவது என்றும் சிந்தித்தேன். “கர்த்தாவே, எழுதுவதில் நான் திறமையுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் மோசேயைப் போல பேசுவதற்கு தயக்கப்படுகிறேன். பேசுவதற்கான வார்த்தைகளை நீரே தரவேண்டுமென்று நம்புகிறேன்” என்று நான் ஜெபித்தேன்.
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவனுடைய ஜனங்களை மீட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் சென்ற மோசேயோடு நான் என்னை ஒப்பிடவில்லை. இஸ்ரவேல் ஜனங்களை…
மதிப்பிற்குரிய வாழ்க்கை
மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு சொற்பொழிவில், ஒரு அரசியல்வாதியும், மதிப்பிற்குரிய தலைவருமானவர், அவரது தேசத்தின் மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் பலர் நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று அறிவித்ததின் மூலம் தேசத்தின் கவனத்தை ஈர்த்தார். லஞ்ச ஊழலுக்கு உட்பட்ட ஒழுக்கக் கேடான, பகட்டான வாழ்க்கை முறை, வெறுப்பூட்டுகிற வார்த்தைகள் மற்றும் பல கேடுபாடுகளுடன் அவர்கள் வாழ்கிறார்களென்று பாராளுமன்ற உறுப்பினர்களை அவர் கடிந்துகொண்டு, அவர்கள் சீரான வாழ்க்கை வாழ வேண்டுமென்று அவர் அறிவுறுத்தினார். எதிர்பார்த்ததுபோல அவருடைய கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு-கண்டனம் தெரிவித்தார்கள்.
நாம் பொதுவாழ்க்கையில் உள்ள அதிகாரியாகவோ, தலைவராகவோ…
ஞாபகத்தில் வைத்திருத்தல்
வயது முதிர்ச்சி அடையும் பொழுதுள்ள கஷ்டங்களில் ஒன்று நினைவாற்றலை இழப்பதும், சமீபகால நிகழ்வுகளை மறப்பதும் ஆகும். ஆனால், மறதி வியாதியான அல்ஷைமர் பற்றி ஆராய்ச்சி செய்த நிபுணரான டாக்டர் பென்ஜமின் மாஸ்ட், அவ்வியாதியைப் பற்றி நம்பிக்கை அளிக்கக்கூடிய சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அல்ஷைமர் வியாதியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளை பொதுவாக முற்றிலும் சோர்வுற்றதாகவும், பழக்கப்படுத்திக் கொண்டவைகளை நினைவில் கொண்டதாகவும் இருக்கும். அவர்கள் அறிந்துள்ள பழைய பாடலை கேட்கவும், வரிவிடாமல் பாடவும் அவர்களால் கூடும். ஆவிக்கேற்ற ஒழுக்கங்களான வேதாகமத்தை வாசித்தல், ஜெபித்தல், பாடல்களை பாடுதல் போன்ற…
விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்
என்னுடைய அறையிலுள்ள ஜன்னலிலிருந்து சிரோ டெல் போரிகோ அல்லது “ஆடுகளின் மலை” என்ற 1700 மீட்டர் உயரமுள்ள மலையைப் பார்க்கலாம். 1862ல் பிரஞ்சு படை மெக்ஸிக்கோ மீது படையெடுத்தது. எதிரிகள் ஒரிசாபா என்ற பரந்த வெளியில் முகாமிட்டிருந்தார்கள். மெக்ஸிக்கோ படை மலை உச்சியின் மேல் முகாமிட்டிருந்தது. ஆயினும் மெக்ஸிக்கோ தளபதி, மலை உச்சிக்கு வரக்கூடிய வழியை காவல் பண்ணுவதில் கவனம் இல்லாமல் இருந்துவிட்டார். மெக்ஸிக்கோ படையினர் உறங்கிக் கொண்டிருந்தபொழுது, பிரஞ்சு படை மேலே வந்து அவர்களைத் தாக்கி 2000 படை வீரர்களை கொன்று போட்டது.
இந்த…