ரேடியோவில் நடக்கவிருந்த பேட்டிக்காக வர இருந்த தொலைபேசியின் அழைப்பிற்காக என் நரம்புகள் படபடக்கக் காத்திருந்தேன். அந்த பேட்டியின் காட்சி அமைப்பாளர், என்ன கேள்விகள் கேட்கப் போகிறாரோவென்றும், நான் அதற்கு என்ன விதமாக பதிலளிக்கப்போவது என்றும் சிந்தித்தேன். “கர்த்தாவே, எழுதுவதில் நான் திறமையுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் மோசேயைப் போல பேசுவதற்கு தயக்கப்படுகிறேன். பேசுவதற்கான வார்த்தைகளை நீரே தரவேண்டுமென்று நம்புகிறேன்” என்று நான் ஜெபித்தேன்.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவனுடைய ஜனங்களை மீட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் சென்ற மோசேயோடு நான் என்னை ஒப்பிடவில்லை. இஸ்ரவேல் ஜனங்களை தலைமை தாங்கி நடத்திச் செல்ல மிகவும் தயக்கமடைந்த மோசேக்கு, இஸ்ரவேல் ஜனங்கள் அவனுக்குச் செவிகொடுப்பார்கள் என்ற நிச்சயத்தை தேவன் உறுதிப்படுத்தத் தேவை இருந்தது. மேய்ப்பனின் கோலை பாம்பாக்கினது போல அநேக அடையாளங்களை தேவன் அவனுக்கு வெளிப்படுத்தினார் (யாத். 4:3). ஆயினும், அவன் திக்குவாயனும், மந்தநாவு உடையவன் என்று கூறி அந்த தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மோசே தயங்கினான். ஆகவே தேவன், அவர் கர்த்தர் என்றும், அவன் பேசுவதற்கு அவர் உதவிசெய்ய வல்லவரென்றும் நினைவுபடுத்தினார். அவனது “வாயோடுகூட இருப்பேன்” என்று கூறினார்.

பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்தாவியானவர் அருளப்பட்டதிலிருந்து, தேவனின் ஆவி அவரின் பிள்ளைகளில் வாசம் செய்கிறது, பிரச்சனைகள் சந்திப்பதற்கு நாம் தகுதியற்றவர்கள் என்று உணர்ந்தாலும், நமக்கு அருளப்பட்ட பரிசுத்தாவியானவர், நமது குறிக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்க உதவி செய்கிறார். கர்த்தர் நம்முடைய “வாயோடுகூட இருப்பார்”.