TAMIL_whatwebelieve

 

வேதாகமத்தின் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டதென்று விசுவாசிக்கிறோம்.அவற்றின் மூலப் பிரதிகளில் ஒரு தவறுமில்லையென்றும், அவை சொல்லுகிற சிருஷ்டிப்பின் வெளிப்பாடு, மனிதனின் வீழ்ச்சி, மீட்பு, புதுப்பித்தல் யாவும் கிறிஸ்துவுக்குள் நிறைவேறிற்றென்று விசுவாசிக்கிறோம்.


ஒரே தேவனுண்டென்று விசுவாசிக்கிறோம். அவர் திருத்துவர் பிதா, குமாரன், பரிசுத்தஆவி மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.


இயேசுகிறிஸ்து முழுமையான தேவனும் முழுமையான மனிதனுமானவர் என்று விசுவாசிக்கிறோம். அவரே பிதாவினால் ஜெனிப்பிக்கப்பட்ட ஒரே தேவ குமாரன். அவரே பிதாவின் தற்சொருபமாயிருந்து நமக்குப் பிதாவை வெளிப்படுத்தினார். இதை விசுவாசிக்கிறோம்.


இயேசுவின் கன்னிப்பிறப்பை, பாவமில்லாத வாழ்க்கையை, தியாக சிலுவை மரணத்தை, சரீர உயிர்த்தெழுதலை, பரமேறி பிதாவினிடத்திற்குப் போனது, வெற்றி வீரராய் திரும்ப வருவதையும் விசுவாசிக்கிறோம்.


மனிதன் பாவத்தில் வீழ்ந்ததால், பாவத்தின்றும் நித்திய மரணத்தினின்றும் இரட்சிக்கப்பட வேண்டியது அவசியமென்றும் விசுவாசிக்கிறோம். பிதாவானவர் கிருபையினால் இயேசு கிறிஸ்து மூலமாய் இந்த இரட்சிப்பை நமக்கு ஈவாகக் கொடுத்தார். அவரே தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பி இயேசுவை விசுவாசிக்கிற அனைவரையும் பிதாவாகிய தேவனோடு ஒப்புரவாக்குகிறாறென்று விசுவாசிக்கிறோம்.


பரிசுத்த ஆவியானவரே நம்மில் பாவ உணர்வை உண்டாக்கி மனந்திரும்புதலின் மூலம் மறுபிறப்பிற்குள் நடத்தி, தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினராக்கி, கிறிஸ்துவின் சாயலிலும் தேவன் மேலுள்ள நம்பிக்கையிலும், பிறர் மேலுள்ள அன்பிலும் வளரச் செய்கிறாறென்று விசுவாசிக்கிறோம்.


ஒரே திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறோம். கிறிஸ்துவுக்குள்ளாயிருந்து, உலகமெங்குமுள்ளவர்களைக் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக்குவதற்குக் கட்டளை பெற்ற விசுவாசிகளாகிய தேவனுடைய குடும்பத்தினர் மூலமாய் வெளிப்படுத்தப்பட்டுள்ள திருச்சபையை விசுவாசிக்கிறோம்.


கிறிஸ்துவின் ஆட்சியைப் பூமியில் ஸ்தாபிக்கவும், உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாந்தீர்க்கவும், சிருஷ்டியில் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் திரும்ப உண்டாக்கவும் இயேசு கிறிஸ்து மறுபடியும் வருகிறார் என்று இரண்டாம் வருகையை விசுவாசிக்கிறோம்.