தேவனே எங்கள் அஸ்திவாரம். தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதை அறிந்து, உண்மையுள்ள உக்கிராணாக்காரராக, எங்களிடம் ஒப்புக் கொடுக்கப்பட்ட பொருட்களை உண்மையாக உபயோகிக்க எங்களை அர்ப்பணிக்கிறோம்.


எங்கள் கொள்கைகள்

  • விசுவாசம், போதனை, செயல்கள் அனைத்தையும் கனம் பொருந்திய வேதாகமத்தோடு ஒப்பிட்டு பார்த்தே மதிப்பீடு செய்ய வேண்டும்.(2 தீமோ 3:16)
  • நாம் அறிக்கை செய்யும் விசுவாசத்தில் உண்மையோடு உறுதியாய் நிற்க வேண்டும். (2 தீமோ 1:13)
  • உபதேசங்களைப் போதிப்பதில் குறைகளற்ற வழியைப் பிரதிபலிக்க வேண்டும். (அப் 20:26,27)
  • நற்குணமும் திறமையும் கொண்ட தலைவர்களைத் தெரிந்தெடுக்க வேண்டும். (யாத் 18:21 ; 1 தீமோ 3:1-13)
  • இயேசு கிறிஸ்துவோடு நெருங்கிய ஐக்கியத்தில் நிலைத்திரு ‘நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறையுண்டு’ என்று தேவன் உன்னைக் குறித்து சொல்ல இடம் கொடாதே. (வெளி 2:4)
  • நமது அனுதின மன்னா ஊழியங்களை உன் பெலத்தாலும் ஞானத்தாலும் செய்யாமல், தேவனுடைய ஞானத்தாலும் பெலத்தாலும் செய். (கலா 2:20, 3:3)
  • வேளை நேரத்திலும் பிற வேளைகளிலும் தேவனுடைய பிள்ளைகளை வேறு பிரிக்கும் நன்னடைத்தையில் நிலைத்திரு. (1 பே 1:14-15)
  • எப்பொழுதுமே தேவன் மேல் நம்பிக்கையாயிருந்து நீதியாய். நட (1 பே 3:16)
  • பிறர் நமக்கு சரியான நேரத்தில் சரியான உதவி செய்ய வேண்டுமென்று விரும்புகிற நாம், மற்றவர்களுக்கு அப்படியே செய்ய வேண்டும். (2 கொரி 4:5,15)
  • அன்போடு சத்தியத்தைப் பேசு, தேவையற்ற கோபத்தை விட்டுவிடு. (2 தீமோ 2:24)
  • நம்முடைய முயற்சிகளுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பவர்களுடன் ஒளிவு மறைவற்ற நேர்மையான உறவு வைத்துக்கொள். ( 2 கொரி 4:2)
  • தெருக்களில் விற்பவர்கள், விருந்தினர், அயலகத்தார், நண்பர்கள், சமுதாயம், அரசாங்கம் இவர்களோடு மட்டுமல்லாது யாவரிடமும் உறவையும் செல்வாக்கையும் காக்க உணர்வோடிரு. (ரோ 13:7,8)
  • நம்மோடு வேலை செய்பவர்களின் தனி மதிப்பையும், அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளையும் அறிந்து கொள். (பிலி 2:1-4)
  • நாமளிக்கும் செய்தி கனத்துக்குரியதாகவும், வல்லமையுள்ளதாகவும் இருப்பதற்கு நாம் ஜாக்கிரதையோடு பிரயாசப்பட வேண்டும். (1 கொரி 10:31)
  • நம்மிடம் கொடுக்கப்படும் யாவையும் குறித்து உண்மையுள்ள உக்கிராணக்காரனாயிரு. (1 கொரி 4:2)
  • கையிருப்பு பணத்திற்கேற்ப ஊழிய எல்லையைப் பெரிதாக்கு அல்லது சிறிதாக்கு.
  • கடன்படாதிரு. (ரோ 13:8)
  • நமது ஊழிய அமைப்பு பிழைத்து நிலைக்க வேண்டுமென்ற நோக்கத்தை முக்கியப்படுத்தி ஒருபோதும் தீர்மானம் எடுக்காதே. (பிலி 1: 19 – 26)
  • தற்புகழ்ச்சியைத் தவிர்த்துவிடு. (நிதி 27:2)
  • தேவன் பிறர்மூலமும் இதர அமைப்புகளின் மூலமும் செய்யும் கிரியைகளை இனம்கண்டு உரிய கனத்தைக் கொடு. (1 கொரி 1:10-13)
  • நமது நோக்கத்தை பலவீனப்படுத்தி உலகத்தோடு ஒத்துப்போகச் செய்யும் எந்த அமைப்போடும் சேராதே. (2 கொரி 6:14)
  • அருகிலுள்ள திருச்சபைகளோடு இணைந்து அவர்களது ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வழியில் ஊழியம் செய். (எபே 4:1-7)