நமது அனுதின மன்னா ஊழியங்களின் வலைத்தளங்களில் பயன்படுத்தும் தேவையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

சட்ட அறிவிப்பு – இந்த வலையதளத்தை பயன்படுத்தும் முன் கீழ்கண்ட விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படிக்கவும்.

அனுதின மன்னா ஊழியங்கள் (ODB) இணையதளத்திற்கு உட்பட்ட இந்த வலைத்தளத்தில் உள்ள சேவைகள் மற்றும் தகவல்களின் (முழுமையாக அல்லது பகுதியாக) பயன்பாடு. அனுதின மன்னா ஊழியங்களின் மூலமாக அவ்வப்போது மாற்றப்படும், கட்டளைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ODB என்பது அனுதின மன்னா ஊழிய பதிப்பாளர்களின் இணையத்தள வலைத்தளம். இந்த நிபந்தனைகள் மற்றும் கட்டளைகள் இந்த நிறுவனத்தின் சார்பில் அமைந்துள்ள எல்லா டொமைன்களையும் கட்டுப்படுத்தும் மற்றும் அதனைச் சார்ந்த வலைத்தளம் odb.org, odb.net மற்றும் அனுதின மன்னா ஊழியங்களில் இணைக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட எல்லா டொமைன்களையும் கட்டுப்படுத்தும். இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்தி இதனைச் சார்ந்த தகவல்களைப் பார்வையிடுவது, பயன்படுத்துவது, நகல்எடுப்பது போன்ற செயல்களின் மூலம் நீங்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்படுகிறீர்கள். ODB இந்த நிபந்தனைகளை தன்னிச்சையாக மாற்றும் உரிமை பெற்றுள்ளது. நிபந்தனைகளை மாற்றிய பின் நீங்கள் இந்த வலைதளத்தைப் பயன்படுத்தினால் புதிய நிபந்தனைகளுக்கு உட்படுகிறீர்கள். நீங்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்படவில்லையெனில் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தவோ, பார்வையிடவோ அனுமதி இல்லை.

வலைத்தளத்தின் பொதுவான பயன்பாடு :

1.1 பதிப்புரிமை மற்றும் தனிப்பட்ட உள்வர்த்தக பயன்பாடு. வேறு வகையில் சொல்லை குறிப்பிட்டால் ஒழிய வலைத்தளம் தனிப்பட்ட மற்றும் உள்வர்த்தக பயன்பாட்டிற்கு மட்டும் இணையதள வடிவமைப்பு உரைநடை வரைகலை. தேர்வு மற்றும் அமைப்பு சார்ந்த கூறுகள் ஆகியவை உலகளாவிய பதிப்புரிமை சட்டங்கள் மற்றும் உடன்பாடு விதிகளின் கீழ் பதிப்புரிமை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. வலைத்தளத்தில் வெளிப்படையாக அனுமதியளிக்கப்பட்டாலொழிய இந்த தளத்தில் உள்ள செய்திகளை நகல் எடுப்பது மறு உருவாக்கம் செய்வது திருத்துவது, வெளியிடுவது இடுகைகள், பரிமாற்றப்படுவது அல்லது விநியோகம் செய்வது ஆகியன கடுமையான சிவில் மற்றும் குற்றவியல் தண்டனைக்குரியது. மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் இந்த வலைத்தளத்தில் வெளிப்படையாக சொல்லப்பட்டவை தவிர, ODB உங்களுக்கு வெளிப்படையாக அல்லது மறைமுகமாகவோ எவ்வித காப்புரிமை, பதிப்புரிமை, வணிகமுத்திரை அல்லது இரகசிய உரிமை அளிக்கவில்லை.

1.2 பிற பொருட்களுக்கான இணைப்புகள் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பிற இணைப்பு வலைத்தளங்கள் ODBயின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை மற்றும் அந்த வலைத்தளங்களில் உள்ள தகவல்களுக்கும் அதில்  இணைக்கப்பட்டுள்ள பிற வலைத்தளங்களில் உள்ளடங்கிய தகவல்களுக்கும் ODB எவ்விதத்திலும் பொறுப்பு அல்ல ODBல் பிற இணைப்புகள் உள்ள வலைத்தளங்களையும் அதில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பு வலைதளங்களையும் எந்த நேரத்திலும் தடுத்துக் கொள்ளும் உரிமையை தக்க வைத்துக் கொள்ளுகிறது. இது போன்ற இணைப்புத் தளங்களை ODB உங்கள் வசதிக்காக மட்டுமே வழங்குகிறது. ODB இணைப்புத் தளங்களில் உள்ள தகவலாள் நிறுவனங்கள் பொருட்கள் ஆகியவற்றை எந்த விதத்திலும் சோதித்தும் சரிபார்த்தும் ஒப்புதல் அளித்தும் இணைக்கப்படவில்லை. நீங்கள் எதாவது மூன்றாம் நபரின் வலைத்தளங்களை நாடினால் அதற்கு நீங்களே பொறுப்பு.

1.3 கணக்கை நீக்கம் செய்தல்:தங்கள் கணக்கை தன்னிச்சையாக சுயமாக, எந்த நேரத்திலும் காரணம் இன்றியோ அல்லது இல்லாமலோ, அறிவிப்பு கொடுத்தோ அல்லது கொடுக்காமலோ இடைநீக்கம் அல்லது தடுக்கும் உரிமை ODB இதன் மூலம் தக்கவைத்துக் கொள்ளுகிறது. உங்கள் கணக்கு நீக்கம் செய்யப்பட்டால். ODBயை உபயோகப்படுத்தும் உரிமையைத் தாங்கள் உடனடியாக இழந்துவிடுகிறீர்கள்.

1.4 நீங்கள் உங்கள் ODB கணக்கை எந்த நேரத்திலும் காரணத்தோடோ அல்லது காரணம் இல்லாமலோ எந்த நேரத்திலும் விலக்கிக் கொள்ளலாம்.

1.5 கணக்கு பயன்பாடு உங்கள் கணக்கை உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் உபயோகிக்க ODB அனுமதி அளிக்கிறது. உங்கள் கணக்கின் முழு உபயோகத்திற்கும்  நீங்களே முழுப்பொறுப்புள்ளவர்கள். உங்கள் ODB கணக்கை பயன்படுத்தும் உரிமையை வேறு நபரிடம் ஒப்படைத்தல். மாற்றம் செய்தல் மறு விற்பனை, துணை உரிமம் அல்லது பகிர்தல் போன்றவற்றை செய்யக் கூடாது. உங்கள் ODB கணக்கு உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமே செல்லும்.

1.6 நீங்கள் சொல்வதும் மற்றும் உத்திரவாதம் அளிப்பதும் என்னவென்றால்: (1)     தேவையான கணக்கு ஆரம்பிப்பதற்கு நீங்கள் குறைந்தது பதினெட்டு வயது நிரம்பியவர்கள் அல்லது சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட வயது வரம்பை எட்டியவர்கள். (2)    நீங்கள் அளிக்கும் எல்லா தகவல்களும் உண்மை மற்றும் துல்லியமானது ஆகும். (3)    நீங்கள் கணக்கிற்கு தகவல் அளிக்க அங்கீகரிக்கப்பட்ட தனி நபர். நீங்கள் இந்த விதிமுறைகளில் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் உங்கள் பொறுப்புகளையும், கடமைகளையும் நிறைவேற்ற உறுதி அளிக்கிறீர்கள்.

2. வணிக உரிமைக் குறியீடுகள்:

வேறு வகையாக குறிப்பிடப்பட்டவைகள் தவிர இந்த தளத்தில் வரிசை படுத்தப்பட்டுள்ளன. (display) அனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவை குறியீடுகள் மற்றும் சின்னங்கள் ODB ஊழியங்கள் டிஸ்கவரி House பதிப்பாளர்கள், அல்லது குறிப்பிட்ட மற்ற வணிக உரிமை குறியீடு, உரிமையாளர்களின், வணிக உரிமைகுறியீட்டின் உரிமைக்கு உட்பட்டது. இந்த தளத்தின் தயாரிப்புகள் சேவை பெயர்கள், சின்னங்கள் குறிப்பிடப்படவில்லையெனில் (absence) அந்த பெயர் மற்றும் சின்னத்தை குறித்த வணிக உரிமை குறியீட்டையோ அல்லது மற்ற அறிவுசார் சொத்துரிமைகளையோ விட்டுகொடுத்துவிட்டதாக கருதமுடியாது.

3. பொது:

3.1 ODB கீழ்கண்ட எந்த உத்தரவாதமோ, முன்மொழிவோ செய்யவில்லை. 1) இந்த வலைத்தளம் தேவைகளைத் சந்திக்கும். 2) இந்த தளம் அல்லது தகவல் எப்பொழுதும் தடையின்றி சரியான நேரத்தில், துல்லியமாக, பாதுகாக்க அல்லது பிழை இன்றி இருக்கும். 3) இந்த தளத்தின் பயன்பாட்டின் மூலம் கிடைக்கும். முடிவு துல்லியமாக அல்லது நம்பகமாக இருக்கும். 4) இந்த வலைத்தளத்தின் மூலம் நீங்கள் வாங்கும் அல்லது உங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் தேவைகள் தகவல்கள் அல்லது பிற பயன்பாடு உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். இந்த வலைத்தளத்தை திருத்தி அல்லது சரிபார்த்து அல்லது காலத்திற்கு ஏற்ப மாற்றம் (update) செய்ய ODB பொறுப்பேற்காது.

3.2   பிணை உத்திரவாதம் இல்லை. அதிகபட்சமாக உரிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட தளம் “இருக்கிறபடியே” வழங்குகிறது மற்றும் வெளிப்படையான அல்லது மறைமுகமான  காப்புரிமை இல்லாமல் அனைத்துக் குறைகளுடனும் வழங்கப்பட்டுள்ளது. ODB இதன் மூலமாக தளத்தை குறித்தும் தகவலைக் குறித்தும் அனைத்து உத்திரவாதங்களையும் மற்றும் நிபந்தனைகளையும் கைவிடுகிறது (disclaimer). வணிகத்திறன், வரையறை உத்திரவாதங்கள் இல்லாமல், தலைப்பு, மீறல் அற்ற ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான பொருத்தம், வைரஸ், பற்றாக்குறை, துல்லியத்தை அல்லது முழுமையை, முடிவு மற்றும் அலட்சியத்தின் பற்றாக்குறை உட்பட. தளம் மற்றும் தகவல் பயன்பாட்டை குறித்து எழும் அனைத்து இடர்களுக்கும் நீங்களே பொறுப்பு.

4. பொறுப்பு மற்றும் தீர்வீன் வரம்புகள்

4.1 உள்ளடங்காதவை. அதிகபட்சமாக ஏற்ற சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை எக்காரணத்தைக் குறித்தும் எந்தவிதமான இழப்புகளுக்கும் ODB பொறுப்பேற்காது எந்த நேரடி, எதிர்பாராத மறைமுக விளைவால் ஏற்படும் பாதிப்பு உட்பட ஆனால் வரையறையில்லாமல், சேதம்: இலாபத்தின் இழப்பு இரகசியமான அல்லது பிற தகவல்களின் இழப்பு, தொழில் குறுக்கீடு, தனிப்பட்ட காரியம், தனியுரிமை இழப்பு, எந்த கடமையையும் நிறைவேற்றத் தவறுவதினால் (நல்ல நம்பிக்கை உட்பட, அல்லது நியாமான பாதுகாப்பு, கவனக்குறைவு, மற்றும் எந்தவித பொருளாதார அல்லது மற்ற இழப்பு ஏதேனும்) எழுவது அல்லது எந்த வழியில் பயன்பாடு தொடர்பான அல்லது தளத்தை பயன்படுத்த இயலாது. அத்தகைய சேதங்களின் சாத்திய கூறுகள் ODBக்கு தெரியவந்தாலும். அல்லது அறிந்திருக்க வேண்டியதாய் இருந்தாலும் பொறுப்பேற்காது நீங்கள் இந்த தளத்தின் ஏதாவது ஒரு பகுதியிலோ, அல்லது இதில் உள்ள நெறிமுறைகளை குறித்து அதிருப்தியாய் இருந்தால் உங்கள் ஒரே மற்றும் பிரத்யேக தீர்வு என்னவெனில் தளத்தின் கணக்கையும் மற்றும் அதன் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதன் அடிப்படை நோக்கத்தின் எந்த தீர்வு தவறினாலும் மேற்கூறிய வரையறைகள், உள்ளடங்காதவைகள் மற்றும் மறுப்புகள், அதிகபட்சமாக ஏற்ற சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பொருந்தும்.

4.2 உறுதிப்படுத்துதல் நஷ்டத்தை ஈடு செய்தல். நீங்கள் ODB வலைத்தளத்தை பயன்படுத்தும் பொழுது இதில் உள்ள நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளை மீறும் பொழுது ஏற்படும் இழப்பு, நஷ்டம், தண்டத்தொகை, அபராதம், கட்டணம் வழக்கு தீர்ப்பு, இதன் மூலமாக ஏற்படும் பொருள் இழப்பு மற்றும் செலவுகள் (வழக்குரைஞர் கட்டணம் உள்பட (ODBக்கு ஏற்படுமானால் தாங்கள் இதன் மூலம் ODB சார்பாக வழக்காட இழப்பீடு செய்ய, ODBயின் மீது குற்றம் சுமத்தாமல் பாதுகாக்க உறுதி அளிக்கிறீர்கள்.

5 நமது அனுதின மன்னா ஊழியங்களின் தனிப்பட்ட கொள்கை

5.1 இந்த வலைத்தளத்தில் உள்ள, அனுதின மன்னா ஊழியங்கள் தனிப்பட்ட கொள்கையின் நெறிமுறைகளை நீங்கள் ஒத்துக் கொள்ளுகிறீர்கள்.

5.2  ODBயின் தனிப்பட்ட கொள்கை தொடர்பாக எந்த பிரச்சனை எழுந்தாலும், அது இந்த உடன்படிக்கை நெறிமுறை மற்றும் நிபந்தனைகளுக்கும் மற்றும் இந்த ODB தனிப்பட்ட கொள்கையின் சொல்லப்பட்டதற்கு உட்பட்டிருக்கும்.

6. பொது விதிமுறைகள்

6.1 திருத்தங்கள்: இந்த தளத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள், நிபந்தனைகள், மற்றும் அறிவிப்புகளை அதின் சொந்த தன் விருப்புரிமையில் மாற்ற மற்றும் எந்த நேரத்திலும் மாற்ற ODB அதின் உரிமைகள் தக்கவைத்து கொள்ளுகிறது, இதில் இந்த தளத்தை பயன்படுத்துவது தொடர்பான வரையறுக்கப்படாத கட்டணங்களும் உட்பட்டது.

ODB எந்த நேரத்திலும் இந்த இடுகைகளை புதுப்பிப்பதின் மூலமாக, அதன் விதிமுறைகளை மறு ஆய்வு செய்யலாம். நீங்கள் இந்த பக்கத்தை அவ்வப்போது அப்போதைய – தற்போதைய விதிமுறைகளை மறுஆய்வு செய்ய பார்வையிட வேண்டும். ஏனென்றால் அவை உங்களை கட்டுப்படுத்தும், வெளிப்படையாக உங்களுக்கு அனுப்பபடும் சட்ட அறிவிப்பு மூலமாகவோ அல்லது தளத்தில் குறிப்பிட்ட பக்கங்களில் உள்ள விதிமுறைகள் மூலமாகவோ, இந்த விதிமுறைகளில் உள்ள சில விதிகள் தள்ளி வைக்கப்படலாம்.

மேலும் ODB அதன் தளத்தையோ அல்லது பகுதியையோ தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ, அறிவித்தோ அல்லது அறிவிப்பு இல்லாமலோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தன் விருப்பத்தின்படி திருத்தும் அல்லது கைவிடும் உரிமையைத் தக்கவைத்து கொள்ளுகிறது. தளத்தின் எந்த திருத்தத்திற்கோ, தற்காலிக நிறுத்தத்திற்கோ அல்லது கைவிடுதலுக்கோ, ODB உங்களுக்கோ அல்லது மூன்றாம் நபருக்கோ பொறுப்பேற்காது என்பதை இதன் மூலம் ஒப்புகொள்ளுகிறீர்கள்.

6.2 பொறுப்பு கொடுத்தல்: ODBயின் எழுத்துபூர்வமான சம்மதம் இன்றி விதிமுறைகளின் கீழோ அல்லது அதின் பகுதியின் கீழோ உள்ள எந்தக் கடமையையும் நீங்கள் delegate செய்யவோ (மற்றவர்களுக்கு மாற்றம் செய்யவோ) அல்லது எந்த உரிமையையும் ஒப்புக்கொடுக்கவோ கூடாது. அப்படி ஏதாவது ஓர் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டால் விதிமுறைகள் மீறியதாக எடுத்து கொள்ளப்படும்.

6.3 எந்த ஒரு சட்ட கொள்கைகளின் முரன்பாட்டை சாராமல் இந்த விதிமுறைகள், Michigan மாநிலத்தின் சட்டங்களின்படியே கட்டுப்படவும் மற்றும் விளக்கப்படவும் வேண்டும். ODB மற்றும் அதன் சந்தாதாரர்கள் இந்த விதிமுறைகள் மற்றும் அதன் செயல்திறன் சம்பந்தமான பிரச்சனைகளும் அல்லது வலைதளத்தை உபயோகபடுத்துதலின் தொடர்ச்சியாக எழும் பிரச்சனைகள் மற்றும் தகவல்கள் சம்பந்தமாக எழும் எல்லா பிச்சனைகளும் மற்றும் வழக்குகளும் Michegan மாநிலம் நீதிமன்றங்கள் மற்றும் Federal நீதிமன்றங்கள் கீழ் கட்டுபட்டது. என்பதை ஒத்துக்கொள்ளுகிறீர்கள் மேலும் அவர்கள் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு அதிகாரவரம்பு மற்றும் இடத்தை (venue) Michigan மாநில மற்றும் Federal  நீதிமன்றங்களின் அதிகாரவரம்புக்குட்பட்டது என்பதை அவர்கள் ஏற்றுகொள்ளுகிறார்கள், இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் உள்ள எல்லா விதிகளையும் கடைப்பிடிக்காத எந்த அதிகார எல்லைகளுக்குள்ளும் இந்தத் தளத்தை உபயோகப்படுத்த அதிகாரமில்லை மற்றும் இந்த பகுதி காலவரையறை இல்லாமல் உட்பட்டது.

6.4 நியாயமான நிவாரணம் : விதிகளின் கீழ் உள் ஏதேனும் கடமைகளை நீங்கள் மீறினால், அது ODBக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்  என்பதை நிங்கள் அங்கீகரிக்கவும், ஏற்று கொள்ளவும் செய்கிறீர்கள் அதை சட்ட நடவடிக்கையின்படி ஏற்பட்ட பாதிப்பை உடனே இழப்பீடு செய்யமுடியாது. அதன்படி நீங்கள் தவறும் பட்சத்தில் அல்லது மீறும் பட்சத்தில் ODBயின் நற்பெயர் நன்மதிப்பு அல்லது தளத்தில் உள்ள உரிமையை உங்களின் செயலாள் நஷ்டம் ஏற்படுதினால் அல்லது நீர்த்துபோக செய்தால் ODBக்கு தடையுத்தரவுக் கட்டளை பெற உரிமை உள்ளது. மேலும் சரிசெய்ய முடியாத இழப்பைத் தடுக்கவோ, நஷ்டத்தையோ அல்லது நீர்த்துபோனதை உடனடியாக தடுக்க வேறு வகையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள ODBக்கு உரிமை உள்ளது.

6.5 முழு ஒப்பந்தம் : இந்த விதிமுறைகள், உமக்கும் ODBக்கும் இடையிலுள்ள இணக்கத்தையும் முழு ஒப்பந்தத்தையம் உள்ளடக்குகிறது. இதனால் ஏற்கனவே உள்ள எல்லா வாய்மொழி அல்லது எழுத்துபூர்வமான ஒப்பந்தங்கள் மற்றும் புரிதல் சம்பந்தமான விதிமுறைகளை அகற்றி விடுகிறது. இந்த விதிமுறைகளில் வெளிப்படையாக சொல்லப்படாத எந்தவொரு அறிக்கை, மனு, உத்தரவாதம், உடன்படிக்கை அல்லது எந்த வகையான ஒப்பந்தமும் பாதிக்காது. இந்த விதிமுறைகளில் திட்டவட்டமாக சொல்லப்பட்டிராத எந்த அறிக்கையும், மறுவேறு உத்தரவாதமோ, உடன்படிக்கையோ ஒப்பந்தமோ, விளக்கமோ, ODBயின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் தடுக்கவோ மாற்றவோ முடியாது.