நவம்பர், 2015 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: நவம்பர் 2015

பரலோகக் குறிப்பேடு

கென்யா விமான நிலையத்தில் வருகையைப் பதிவு செய்யும் இடத்தில், நான் எனது கடவுச் சீட்டை (பாஸ்போட்டை) சரிபார்ப்பதற்காகக் கொடுத்தேன். அதற்கான பணியாளர், அவர்களது செயல்குறிப்பேட்டில் விமானப் பயணிகளின் அட்டவணையில் எனது பெயர் உள்ளதா என்று தேடிப்பார்த்துபொழுது, அதில் என் பெயர் இல்லை, பிரச்சனை என்ன? அதிகமான அளவு டிக்கெட் பதிவும் இருக்கைகளுக்கான உறுதி செயல்பாட்டிலுள்ள குறைபாடுகள் தான் காரணம். அன்று நான் எனது வீட்டிற்குப் போய் சேர வேண்டும் என்ற நம்பிக்கை தகர்க்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சி வேறு ஒரு வகையான செயல் குறிப்பேட்டை எனக்கு…

மனச் சோர்வான நிலை

C.S.லூயிசும் அவரது முத்த சகோதரன் வாரன் என்ற வார்ணியும், வின்யாடு என்ற இடத்திலுள்ள ஆங்கிலேய போர்டிங் பள்ளியில் பல ஆண்டுகளாக மிகவும் கஷ்டத்துடன் படித்து வந்தனர். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்குள்ள அனைவருடைய வாழ்க்கையையும், தாங்க முடியாத துன்பத்திற்குள்ளாக்கக்கூடிய கொடுமையானவர். பல ஆண்டுகள் கழித்து மந்த அறிவுடையவன் என்று குறைவாக மதிக்கப்பட்ட வார்ணி கீழ்க்கண்ட குறிப்பை எழுதியுள்ளான். “இப்பொழுது எனது வயது 64க்கு மேலாகிறது. வாழ்க்கையின் எந்த நிலையிலும் வின்யாடில் இருந்ததை விட நல்ல நிலையில் உள்ளேன் என்று நினைவு கூராத நேரமே…

நம்மை நாமே பார்த்துக் கொள்ளல்

முகம் பார்க்கும் கண்ணாடிகளோ, பளபளப்பான பரப்புகளோ கண்டு பிடிக்கும் முன்பு அநேக ஆண்டுகளாக மக்கள் அவர்களது பிம்பத்தை அதிகமாக பார்த்ததே கிடையாது. தேங்கி நிற்கும் தண்ணீர்க் குட்டைகள் ஓடைகள், ஆறுகள் இவைகளின் மூலம்தான் அவர்கள் அவர்களது முகத்தின் சாயலைப் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடி அந்த நிலைமையை முற்றிலும் மாற்றிவிட்டது, கேமரா கண்டு பிடிப்பு நமது தோற்றத்தைப் பற்றிய எண்ணங்களை புதிய உயர்வான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. கேமராவின் உதவியினால் நமது வாழ்க்கை முழுவதும், எந்தப் பருவத்திலும் நமது நிலையான பிம்பத்தை…

வெளியிலிருந்து உதவி

எனது கணவர் தொழில்முறைப்பயணமாக ஒரு ஊருக்குச் சென்ற பொழுது, தங்கும் விடுதி ஒன்றில் ஓர் அறையில் தங்கினார். அப்பொழுது ஒரு அபயக் குரலைக் கேட்டார். அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அறிந்து கொள்ள, அறைக்கு வெளியே வந்தார். பக்கத்து அறையில் யாரோ கூக்குரலிட்டுக் கொண்டிருந்ததைக் கேட்டார். அங்கு பணிசெய்யும் பணியாளர் ஒருவரின் உதவியுடன், உள்ளே சென்று பார்த்தபொழுது அந்த அறையிலிருந்த மனிதன் குளியலறையில் சிக்கிக் கொண்டு வெளியே வரஇயலாமல் இருந்ததைக் கண்டுபிடித்தார். குளியலறையிலிருந்த பூட்டுசரியாக வேலை செய்யாததினால், குளியலறைக்குள் சிக்கிக் கொண்ட மனிதன்,…

பட்டாணி வேண்டாம்

எனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த பொழுது, ஒருநாள் இரவு உணவின் போது, பட்டாணி இருந்த தட்டை ஒருவருக்கொருவர் கடத்தினோம். அப்பொழுது எனது பிள்ளைகளில் ஒருவன் பிடிவாதமாக “வேண்டாம்” என்று கூறினான். “என்ன வேண்டாம்” என்று நாங்கள் பதிலுக்குக் கேட்டோம். “வேண்டாம் நன்றி” என்று கூறுவான் என்று எதிர்பார்த்தோம் அதற்குப் பதிலாக “பட்டாணி வேண்டாம்” என்று அவன் பதில் கூறினான். அவன் கூறின அந்தக்காரியம், நாம் கைக்கொள்ள வேண்டிய நன்நடத்தையுள்ள செயல்களின் முக்கியத்துவம் பற்றி எங்களுக்குள்ளாக பேசிக் கொள்வதற்கு வழிநடத்தியது. உண்மையில் இதுபோல பலமுறை எங்களுக்குள்ளாக…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இயேசுவைப் போல் நேசித்தல்

ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் ஒரு ரயில் நிலையத்தில் நேர்த்தியாய் உடையணிந்த ஒரு இளைஞன்,  ஒரு இருக்கையில் அமர்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தான். அவன் டை கட்டுவதில் சிரமப்பட்டபோது, ஒரு வயதான பெண்மணி தன் கணவரிடம் அவனுக்கு உதவிசெய்யும்படிக்கு கேட்டுக்கொண்டார். அந்த முதியவர் குனிந்து அந்த இளைஞனுக்கு டை முடிச்சு போடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்க ஆரம்பித்தபோது, யாரோ ஒருவன் மூவரையும் புகைப்படம் எடுத்தான். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானபோது, அதைப் பார்த்த பலர் பலன் எதிர்பாராமல் உதவிசெய்வதின் முக்கியத்துவத்தைக் குறித்த தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டனர்.  
மற்றவர்களுக்கு இரக்கம் காண்பித்தல் என்பது கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், இயேசு நமக்கு செய்த தியாகமான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இது தேவனுடைய அன்பின் பிரதிபலிப்பு. மேலும் “நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே” இயேசு சீஷர்களிடம் விரும்பிய ஒரு காரியம். சகோதரனையோ சகோதரியையோ வெறுப்பதை கொலைபாதகத்திற்கு யோவான் சமமாக்குகிறார் (வச. 15). பின்பு இயேசுவையே அன்பின் கிரியைகளுக்கு அவர் மாதிரியாக்குகிறார் (வச. 16).  
தன்னலமற்ற அன்பை நிரூபிக்க அதிகப்படியான தியாகத்தை செய்திருக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, தேவ சாயலில் படைக்கப்பட்ட சக மனிதனுடைய தேவையை நம்முடைய தேவைக்கு மேலாக வைப்பதே தன்னலமற்ற அன்பாகும். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யும் வாய்ப்பு கிட்டும் சில முக்கியமான தருணங்களில் தன்னலமற்ற அன்பை பிரதிபலிக்கக்கூடும். நம்முடைய சுகமான சுயநல வட்டத்தை விட்டு வெளியேறி, நாம் செய்ய வேண்டிய அவசியமாய் தெரியாத உதவிகளையும் மற்றவர்களுக்கு செய்யும்போது, நாம் அவர்களை இயேசு நேசிப்பதுபோல் நேசிக்கத் துவங்குகிறோம் என்று அர்த்தம்.  

மன்னிப்பின் வல்லமை

ஒரு நாசக்கார கும்பலால் கடத்தப்பட்ட பதினேழு மிஷனரிகளைப் பற்றி 2021ஆம் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அவர்களுடைய மீட்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அந்தக் குழுவை (குழந்தைகள் உட்பட) கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டியது. ஆனால் ஆச்சரியமான வகையில், பிணையக் கைதிகளாய் சிக்கியிருந்த அனைத்து மிஷனரிகளும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தை வந்து சேர்ந்த மாத்திரத்தில், அவர்களை சிறைபிடித்தவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினர்: “அன்பின் மன்னிக்கும் சக்தியானது, வன்முறையின் வெறுப்பின் சக்தியைக் காட்டிலும் வலிமைவாய்ந்தது என்பதை இயேசு வார்த்தையின் மூலமாகவும் அவருடைய வாழ்க்கையின் மூலமாகவும் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். எனவே, நாங்கள் உங்களை மனப்பூர்வமாய் மன்னிக்கிறோம்” என்பதே அந்த செய்தி.  
மன்னிப்பு சக்தி வாய்ந்தது என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். அவர் “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்” (மத்தேயு 6:14) என்று கூறுகிறார். பின்பாக, எத்தனை முறை மன்னிக்கவேண்டும் என்னும் பேதுருவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கும்போது, “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” (18:22) என்று இயேசு சொல்லுகிறார். மேலும் சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று தெய்வீக மன்னிப்பை இயேசு வெளிப்படுத்திக் காண்பித்தார்.  
இருதரப்பினரும் மனப்பூர்வமாய் காயமாற்றப்பட்டு, ஒப்புரவாகும்போதே மன்னிப்பானது முழுமையடைகிறது. நம்மை பாதிப்படையச் செய்த செயல்களை நினைவிலிருந்து அகற்றி, மற்றவர்களை காயப்படுத்தாமல் உறவுகளை எவ்விதம் பேணவேண்டும் என்பதைக் குறித்த பகுத்தறிவை பெறுவது என்பது தேவனுடைய அன்பையும் வல்லமையையும் பிரதிபலிக்கும் ஆதாரங்களாய் வாழக்;கையை மாற்றும். தேவநாம மகிமைக்காய், மற்றவர்களை மன்னிக்கும் வழிகளை ஆராய்வோம்.

படைப்பைக் கண்டறிதல்

யூரேசிய நாடான ஜார்ஜியாவில் உள்ள க்ருபேரா-வோரோன்ஜா என்ற குகையானது பூமியில் இதுவரை ஆராயப்பட்ட ஆழமான குகைகளில் ஒன்றாகும். ஆய்வாளர்கள் குழுவானது அதின் செங்குத்து குகைகளின் பயமுறுத்தும் ஆழத்தை 2,197 மீட்டர் வரை ஆய்வு செய்துள்ளது. அதாவது, பூமிக்குள் 7,208 அடி வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே போன்று நானூறு குகைகள் நாட்டின் பிற பகுதிகளிலும், உலகம் முழுமையிலும் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, புதிய கண்டெடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  
படைப்பின் ஆச்சரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கண்டெடுக்கப்பட, நாம் வாழும் பூமியைக் குறித்த நம்முடைய புரிதலை வலுவாக்குவதோடு, தேவனுடைய கரத்தின் அற்புதமான கிரியைகளைக் கண்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது (ஆதியாகமம் 1:26-28). சங்கீதக்காரன் நம் அனைவரையும் தேவனின் மகத்துவத்தை “கெம்பீரமாய்ப் பாடி” சங்கீர்த்தனம் பண்ணுவதற்கு அழைப்பு விடுக்கிறார் (வச. 1). நாளை புவி தினத்தை கொண்டாடும் வேளையில், தேவனின் ஆச்சரியமான படைப்பைக் குறித்து தியானிப்போம். படைப்பின் ஆச்சரியங்கள் அனைத்தையும் நாம் கண்டுபிடித்துவிட்டோமோ இல்லையோ, அவைகள் அனைத்தையும் ஆதாரமாய் வைத்து அவருக்கு முன்பாக தலைவணங்கி ஆராதிப்போம் (வச. 6).  
அவர் தனது படைப்பின் பரந்த, பூகோள இடங்களை மட்டும் அறியவில்லை. நம் இருதயத்தின் ஆழத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஜார்ஜியாவின் குகைகளைப் போலல்லாமல், வாழ்க்கையின் இருள் சூழ்ந்த ஆழமான பள்ளத்தாக்குகளை கடந்து செல்வோம். அதுபோன்ற தருணங்களில் தேவன் நம்முடைய பயணத்தை மென்மையாகவும் உறுதியாகவும் பராமரிக்கிறார் என்பதை அறிவோம். சங்கீதக்காரனுடைய வார்த்தைகளின் படி, “நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” (வச. 7) என்பதை மறந்துவிடவேண்டாம்.