கென்யா விமான நிலையத்தில் வருகையைப் பதிவு செய்யும் இடத்தில், நான் எனது கடவுச் சீட்டை (பாஸ்போட்டை) சரிபார்ப்பதற்காகக் கொடுத்தேன். அதற்கான பணியாளர், அவர்களது செயல்குறிப்பேட்டில் விமானப் பயணிகளின் அட்டவணையில் எனது பெயர் உள்ளதா என்று தேடிப்பார்த்துபொழுது, அதில் என் பெயர் இல்லை, பிரச்சனை என்ன? அதிகமான அளவு டிக்கெட் பதிவும் இருக்கைகளுக்கான உறுதி செயல்பாட்டிலுள்ள குறைபாடுகள் தான் காரணம். அன்று நான் எனது வீட்டிற்குப் போய் சேர வேண்டும் என்ற நம்பிக்கை தகர்க்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சி வேறு ஒரு வகையான செயல் குறிப்பேட்டை எனக்கு ஞாபகப்படுத்தியது. லூக்கா 10ல் இயேசு அவரது சீஷர்களை சுவிஷேத்தை பரப்புவதற்காக பல்வேறு இடங்களுக்கு செல்லுமாறு அனுப்பினார். அவர்கள் திரும்பி வந்து, அவர்களது பணியை வெற்றிகரமாக முடித்தது பற்றி இயேசுவிடம் கூறினார்கள். ஆனால் இயேசு “ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” (லூக்கா 10: 20) என்று அவர்களிடம் கூறினார் நமது சந்தோஷத்திற்கான முக்கிய காரணம் நாம் வெற்றிகரமாக செயல்படுகிறோம் என்பதல்ல, ஆனால் தேவனுடைய புத்தகத்தில் நமது பெயர் பதிக்கப்பட்டது குறித்தே சந்தோஷப்பட வேண்டும்.

அது குறித்து நாம் எவ்வாறு நிச்சயம் அடையலாம்? தேவனுடைய வார்த்தை “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோமர் 10:9) என்று கூறுகிறது.

வெளிப்படுத்தல் 21ல் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்காக, எதிர்பார்த்து காத்திருக்கும் பரிசுத்த நகரத்தின் ஆச்சரியப்படத்தக்க அழகை யோவான் விவரிக்கிறார். பின்பு “தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.” (வெளிப்படுத்தல் 21: 27) என்று எழுதுகிறார்.

ஜீவ புஸ்தகம் தேவனுடைய பரலோக செயல் குறிப்பேடாகும். உங்களது பெயர் அதில் எழுதப்பட்டுள்ளதா?