எனது கணவர் தொழில்முறைப்பயணமாக ஒரு ஊருக்குச் சென்ற பொழுது, தங்கும் விடுதி ஒன்றில் ஓர் அறையில் தங்கினார். அப்பொழுது ஒரு அபயக் குரலைக் கேட்டார். அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அறிந்து கொள்ள, அறைக்கு வெளியே வந்தார். பக்கத்து அறையில் யாரோ கூக்குரலிட்டுக் கொண்டிருந்ததைக் கேட்டார். அங்கு பணிசெய்யும் பணியாளர் ஒருவரின் உதவியுடன், உள்ளே சென்று பார்த்தபொழுது அந்த அறையிலிருந்த மனிதன் குளியலறையில் சிக்கிக் கொண்டு வெளியே வரஇயலாமல் இருந்ததைக் கண்டுபிடித்தார். குளியலறையிலிருந்த பூட்டுசரியாக வேலை செய்யாததினால், குளியலறைக்குள் சிக்கிக் கொண்ட மனிதன், மிகவும் பயந்து மூச்சுத்திணறல் ஏற்படுவது போல் உணர்ந்து உதவிக்காக அலறினான்.

சில சமயங்களில் நாம் வாழ்க்கையில் சிக்கிக் கொண்டதாக உணருகிறோம். நாம் கதவை வேகமாகத் தட்டுகிறோம், கைப்பிடியை இழுக்கிறோம். ஆனாலும் விடுதலை பெற்று வெளியே வரஇயலவில்லை, (தங்கும் விடுதியில் குளியலறையில் சிக்கிக் கொண்ட அந்த மனிதனைப்போல,) நமக்கும் வெளியே இருந்து உதவி தேவைப்படுகிறது. நம்மை நாமே விடுவித்துக் கொள்ள இயலாதவர்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் நம்முடைய பிரச்சனைகளுக்கான பதில்களை நமக்குள்ளேயே தேடுகிறோம். ஆனால் வேதாகமம் “ இருதயமே திருக்குள்ளது” ( எரேமி 17:9) என்று கூறுகிறது. உண்மையில் நமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் தான் காரணம்.

நல்ல வேளையாக “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” (1 யேவான் 3: 20) இதனால் நமக்கு எந்த விதங்களில் உதவி செய்யலாம் என்பதை தேவன் நன்கு அறிந்திருக்கிறார். நமது இருதயத்தின் நீண்டகால மாற்றமும் நமது பிரச்சனைகளில் நாம் உண்மையாக முன்னேறுவதும் தேவனிடமிருந்து ஆரம்பிக்கிறது. அவரை நம்பி, அவரைப் பிரியப்படுத்த வாழ்வதே, நாம் உண்மையான விடுதலை பெற்று செழித்து வாழ்வதாகும்.