வகை  |  odb

“புது சிருஷ்டி”

எனது பணியின் ஆரம்ப நாட்களில் என்னுடன் பணிசெய்த நபர் ஒருவர் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவதில் மகிழ்ச்சி அடைபவனாக இருந்தான். புதிதாக கிறிஸ்தவ விசுவாசத்தில் வந்தவர்கள் அல்லது அவனுடைய இயேசுவைப் பற்றி பேச முயற்சி செய்த அனைவரையும் சிறிது கூட இரக்கமின்றி வெறுப்பூட்டுகிற வார்த்தைகளினால் பழித்துக் கூறுவான். ஒருநாள் நான் அந்த வேலையை விட்டுவிட்டு வேறொரு இடத்தில் புதிய வேலையில் சேர்ந்து விட்டேன். அன்று அந்த மனிதன் ஒருக்காலும் இயேசுவைப் பின்பற்றுகிறவராக மாற இயலாது என்று எண்ணினதை நினைவு கூருகிறேன்.

இரண்டு ஆண்டுகள் கழித்து…

முதல் அடி

ஒரு நாள் எனது சிநேகிதி என்னை வழியில் நிறுத்தி அவளது அண்ணனுடைய ஒரு வயது குழந்தை நடப்பதற்காக எடுத்து வைத்த முதல் அடியைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டாள். அவனால் நடக்க முடிகிறதென்று ஆச்சரியத்துடன் கூறினாள். அதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு எங்களுடைய வார்த்தைகள் எவ்வளவு வினோதமாக இருந்திருக்குமென்று பின் நாட்களில் எண்ணிப் பார்த்தேன் உலகிலுள்ள அநேக மக்களுக்கு நடக்க இயலும் அது என்ன பெரிய காரியம்?.

குழந்தைப் பருவம் சிறப்புத் தன்மைகளை உடையதாகவுள்ளது. ஆனால் அத்தன்மைகள் வாழ்க்கையின் பின் பகுதியில்…

பின்னடைவிலும் நன்மைகள்

1984 – 2008 வரை நடந்த ஐந்து வேறு, வேறு ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த டாரா டோரஸ் தனிச்சிறப்பு வாய்ந்தவராக இருந்தார். பின் நாட்களில் 50 மீட்டர் ப்ரிஸ்டைல் நீச்சல் போட்டியில் 25 ஆண்டுகளுக்கு முன் அவள் ஏற்படுத்திய சாதனையை அவளே உடைத்தெறிந்தாள். ஆனால் எப்பொழுதுமே பதக்கங்களும் சாதனைகளுமல்ல அவள் ஒரு விளையாட்டு வீரராக காயமடைதல், அறுவை சிகிச்சைக்கு உட்படுதல், போட்டிபோடும் மற்றவர்களைவிட இரண்டு மடங்கு வயதுடைய நிலைமை ஆகிய அநேக தடைகளை அவள் சந்தித்தாள். “நான் சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்தே ஒவ்வொரு…

ஆச்சரியம் ஏதுமில்லை

“அவன் உனக்கு பொருத்தமானவன்” என்று என் சிநேகிதி என்னிடம் கூறினாள். அவள் அப்பொழுதுதான் சந்தித்த ஒரு மனிதனைப் பற்றி அப்படிக் கூறினாள். அந்த மனிதனது அன்பான கண்கள், அன்பான சிரிப்பு, அன்பான உள்ளம் ஆகியவற்றை அவள் விவரித்தாள். அவனை நான் சந்தித்தபொழுது, அவனது விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதிருந்தது. இன்று அவன் எனது கணவர். அவரை நேசிப்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.

உன்னதப்பாட்டில் மணவாட்டி அவளது நேசரை விவரிக்கிறாள். அவனுடைய நேரம் திராட்சரசத்தைவிட இன்பமானது. பரிமளதைலங்களைவிட வாசனை நிறைந்தது. அவனுடைய நாமம் உலகிலுள்ள அனைத்து நாமங்களிலும் இன்பமானது.…

மீன் பிடிப்பதில் ஒரு பாடம்

பியட் ஏரியில் பசுமையாக இருந்த நீர்ச்செடிகள் நிறைந்த பகுதிக்கு அருகில் தெளிவான அமைதியான நீரில் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். அடர்த்தியான செடிகளுக்குள்ளிருந்து ஒரு சிறிய வாயுடைய பெரிய பாஸ் வகை மீன் சுற்றுப்புறத்தை ஆராய மெதுவாக எட்டிப் பார்த்ததை கவனித்தேன். எனது தூண்டிலில் மாட்டப்பட்டிருந்த உணவு அதற்கு ஆசையை உண்டாக்கினதினால் அதன் அருகில் வந்து உற்று நோக்கியபின் அது மறுபடியும் செடிகளுக்குள்ளே சென்று விட்டது. தூண்டியில் மாட்டியிருந்த தூண்டில் முள்ளைப் பார்க்கும் வரைக்கும் இந்நிகழ்ச்சி பலமுறை நடந்தது. தூண்டில் முள்ளைக் கண்டவுடன் தனது வாலை…

ஈக்களின் நினைவூட்டல்

நான் தற்பொழுது வாடகைக்கு எடுத்துள்ள சிறிய அலுவலகத்தில் எனது வேலையை ஆரம்பித்தபொழுது, அங்கு வாழ்த்து வந்தவை ஒருசில மோப்பி இன ஈக்கள்தான். அநேக ஈக்கள் இறந்து அவற்றின் உடல்கள் தரையிலும், ஜன்னல்களிலும் சிதறிக் கிடந்தன. அவற்றில் ஒன்றைமட்டும் என் பார்வைபடுமாறு விட்டுவிட்டு மற்ற ஈக்களை அப்புறப்படுத்திவிட்டேன்.

ஓவ்வொரு நாளையும் நான் நலமாக வாழ அந்த இறந்து போன ஈயின் உடல் எனக்கு நினைவூட்டியது. ஜீவனைப் பற்றி நினைவூட்ட மரணம் சிறந்த காரியமாகும். ஜீவன் ஒரு விலைமதிப்பற்ற பரிசு. “உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு.” (வச 4)…

மெல்லிழைத்தாள் பெட்டிகள் (TISSUE BOXES)

அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் அறையில் நான் அமர்ந்திருந்தபொழுது, சிந்திப்பதற்கு எனக்கு நேரம் கிடைத்தது. மிக இளம் வயதுடைய எனது ஒரே சகோதரனுக்கு “மூளைச்சாவு” ஏற்பட்டுவிட்டது என்ற துக்ககரமான செய்தியை நான் கேள்விப்பட்டு ஒருசில நாட்களுக்கு முன் இதைப்போலவே காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன்.

அதுபோல இந்த நாளில் மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை உட்பட்டிருந்த, எனது மனைவியைப் பற்றிய செய்திக்காக அதே காத்திருப்பு அறையில் காத்துக் கொண்டிருந்தபொழுது, எனது மனைவிக்கு நீண்ட பெரிய கடிதம் ஒன்று எழுதினேன். மனக்கலக்கத்துடன் கூடிய உரையாடல்கள் ஏதுமறியாத பிள்ளைகள் இவர்களால்…

உபத்திரவங்கள் மூலம் கற்றுக் கொள்ளுதல்

அந்த மெகா திரையில் காணப்பட்ட தெளிவான படத்தில் அந்த மனிதனை உடலில் ஏற்பட்டிருந்த ஆழமான வெட்டுக் காயங்களை அருகிலும், தெளிவாகவும் காணமுடிந்தது. ஒரு இராணுவ வீரன் அந்த மனிதனின் அடிக்க, இரத்தத்தினால் கறைபட்டிருந்த முகத்தையுடைய அந்த மனிதனை சூழ்ந்து நின்ற ஒரு கூட்ட மக்கள் கோபத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள். திறந்த வெளி திரையரங்கின் அமைதியான சூழ்நிலையில் அந்தக் காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்தது. ஆகவே அந்த மனிதனுக்கு ஏற்பட்ட வலியை நானே உணர்ந்ததால் அதிகம் மனஉளைச்சல் கொண்டு முகத்தைச் சுழித்துக் கொண்டேன். ஆனால் இது…

விடிகாலை 2 மணி சிநேகிதர்கள்

கிறிஸ்துவுக்குள்ளான ஆழமான விசுவாசத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் ஒரு குழு மக்களைப் பற்றி என் சிநேகிதன் என்னிடம் கூறினான். “யாருக்காவது ஏதாவது அவசரமான உதவி தேவை என்று நான் எண்ணினால், தயக்கமில்லாமல் உங்களில் யாரையாவது அதிகாலை 2 மணிக்கு உதவிக்குக் கூப்பிடலாம் என்று எண்ணுகிறேன்” என்று அவர்களில் 93 வயது நிரம்பிய ஒரு பெண் கூறினாள். அந்த அவசர உதவி ஒருவேளை ஜெபத்தேவையாகவோ, உதவக்கூடிய செயலாகவோ அல்லது தேவைப்படும் சமயத்தில் யாராவது உதவிக்கு இருக்கவேண்டும் என்ற சூழ்நிலையோ, எதுவாக இருந்தாலும் அந்த விசுவாசக் கூட்டத்திலிருந்த…