நான் தற்பொழுது வாடகைக்கு எடுத்துள்ள சிறிய அலுவலகத்தில் எனது வேலையை ஆரம்பித்தபொழுது, அங்கு வாழ்த்து வந்தவை ஒருசில மோப்பி இன ஈக்கள்தான். அநேக ஈக்கள் இறந்து அவற்றின் உடல்கள் தரையிலும், ஜன்னல்களிலும் சிதறிக் கிடந்தன. அவற்றில் ஒன்றைமட்டும் என் பார்வைபடுமாறு விட்டுவிட்டு மற்ற ஈக்களை அப்புறப்படுத்திவிட்டேன்.

ஓவ்வொரு நாளையும் நான் நலமாக வாழ அந்த இறந்து போன ஈயின் உடல் எனக்கு நினைவூட்டியது. ஜீவனைப் பற்றி நினைவூட்ட மரணம் சிறந்த காரியமாகும். ஜீவன் ஒரு விலைமதிப்பற்ற பரிசு. “உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு.” (வச 4) இப்பூமியில் வாழும் வாழ்க்கை நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைக் கண்டு மகிழவும். அதில் தாக்கத்தை ஏற்படுத்தவும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. நாம் மகிழ்ச்சியுடன் உண்டு, குடித்து உறவுகளை அனுபவித்துக் கொள்ளலாம். (வச 7,9)

நமது வேலையையும் மகிழ்ச்சியுடன் செய்யலாம். “செய்யும்படி உன் கைக்கு … பெலத்தோடே செய்” (வச 10) என்று சாலமோன் ஆலோசனை கூறுகிறார். என்ன தொழிலாக இருந்தாலும் வேலையாக இருந்தாலும் வாழ்க்கையில் எந்தப் பங்கு வகித்தாலும் எவை முக்கியமானவையோ அவற்றை நாம் திறம்படச் செய்யலாம். நாம் மற்றவர்களை ஊக்கப்படுத்தலாம், ஜெபிக்கலாம், நமது அன்பை உள்ளார்ந்த மனதுடன் தெரிவிக்கலாம்.

“அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச் செயலும் நேரிட வேண்டும் தன் காலத்தை மனுஷன் அறியான்” (வச 11-12) என்று பிரசங்கி புத்தகத்தை எழுதினவர் கூறியுள்ளார். இப்பூமியில் நம்முடைய வாழ்க்கை எப்பொழுது முடியுமென்று நம்மால் அறிய இயலாது. ஆனால் தேவனின் பெலத்தின் மீதும் இயேசு வாக்குத்தத்தம் பண்ணியுள்ள நித்திய ஜீவன் மீதும் நம்பி சார்ந்திருந்தால் இன்றைய நாளில் நமது வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து மகிழ்ச்சியுடன் வாழலாம். (யோவான் 6:47)