1984 – 2008 வரை நடந்த ஐந்து வேறு, வேறு ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த டாரா டோரஸ் தனிச்சிறப்பு வாய்ந்தவராக இருந்தார். பின் நாட்களில் 50 மீட்டர் ப்ரிஸ்டைல் நீச்சல் போட்டியில் 25 ஆண்டுகளுக்கு முன் அவள் ஏற்படுத்திய சாதனையை அவளே உடைத்தெறிந்தாள். ஆனால் எப்பொழுதுமே பதக்கங்களும் சாதனைகளுமல்ல அவள் ஒரு விளையாட்டு வீரராக காயமடைதல், அறுவை சிகிச்சைக்கு உட்படுதல், போட்டிபோடும் மற்றவர்களைவிட இரண்டு மடங்கு வயதுடைய நிலைமை ஆகிய அநேக தடைகளை அவள் சந்தித்தாள். “நான் சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்தே ஒவ்வொரு நாளும் அனைத்துப் போட்டிகளிலுமே வெற்றி பெற விரும்பி வந்தேன். பின்னடைவிலும் சில நல்ல காரியங்கள் இருக்குமென்று அறிந்துள்ளேன். அவை புதிய கனவுகளைத் தூண்டுகின்றன” என்று கூறினாள்.

“பின்னடைவிலும் நன்மைகள் உண்டு” என்பது வாழ்க்கையின் சிறந்த பாடமாகும். டோரஸின் போராட்டங்கள் புதிய உயர்ந்த நிலையை அடைய அவளைத் தூண்டியது. அவைகள் ஆவிக்கேற்ற நன்மைகளையும் உடையவைகளாக இருக்கின்றன. “நீங்கள் பலவிதமான சோதனைகளில்… பொறுமையை உண்டாக்குமென்று அறிந்திருக்கிறீர்கள்” (யாக்கோபு 1:2-3) என்று யாக்கோபு கூறுகிறார்.

வாழ்க்கையின் கஷ்டங்களை இந்தக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது கடினம். ஆனால் அது மிகவும் பயனுள்ளது. சோதனைகள், தேவனோடுகூடிய நமது உறவை மேலும் கட்டுவதற்கு சந்தர்ப்பங்களை அருளுகின்றன. வெற்றி கற்றுத்தராத பாடங்களை இவை கற்றுத் தருகின்றன. அதாவது சோதனைகளைத் தாங்க பெலனையும், பொறுமையையும் அளிக்கக்கூடிய நம்பிக்கையுடன் தேவன்மேல் முற்றிலுமாக சார்ந்திருக்க உதவுகிறது.

“கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு” (சங் 27:14) என்று சங்கீதக்காரன் நமக்கு நினைவூட்டுகிறான்.