“அவன் உனக்கு பொருத்தமானவன்” என்று என் சிநேகிதி என்னிடம் கூறினாள். அவள் அப்பொழுதுதான் சந்தித்த ஒரு மனிதனைப் பற்றி அப்படிக் கூறினாள். அந்த மனிதனது அன்பான கண்கள், அன்பான சிரிப்பு, அன்பான உள்ளம் ஆகியவற்றை அவள் விவரித்தாள். அவனை நான் சந்தித்தபொழுது, அவனது விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதிருந்தது. இன்று அவன் எனது கணவர். அவரை நேசிப்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.

உன்னதப்பாட்டில் மணவாட்டி அவளது நேசரை விவரிக்கிறாள். அவனுடைய நேரம் திராட்சரசத்தைவிட இன்பமானது. பரிமளதைலங்களைவிட வாசனை நிறைந்தது. அவனுடைய நாமம் உலகிலுள்ள அனைத்து நாமங்களிலும் இன்பமானது. ஆகவே அவனை அவள் நேசிப்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை என்று முடிக்கிறாள்.

ஆனால் இப்பூமியில் எல்லாரையும்விட அதிகமாக நேசிக்கப்படக் கூடியவர் ஒருவர் இருக்கிறார். திராட்சரசத்தின் மதுரத்தைவிட அவர் நேசம் உயர்ந்தது. அவருடைய அன்பு நமது அனைத்து தேவைகளையும் திருப்திப்படுத்துகிறது. நமக்காகத் தம்மையே கொடுத்த தியாகம் தேவனுக்கு சுகந்த வாசனையான பலியாக இருந்ததினால் (எபேசி 5:2) அவருடைய வாசனை அனைத்து பரிமளத் தைலங்களின் வாசனையைவிட சிறந்ததாக இருக்கிறது. இறுதியாக அவரது நாமம் அனைத்து நாமங்களுக்கும் மேலானது. (பிலிப் 2:9) ஆகவே நாம் அவரை நேசிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

இயேசுவை நேசிப்பது ஒரு சிறப்பு உரிமையாகும். அது நமது வாழ்க்கையில் தலைசிறந்த அனுபவமாகும்! நாம் அப்படியாக அவரை நேசிக்கிறோமென்று அவரிடம் கூற நேரம் செலவழிக்கிறோமா? நமது இரட்சகரின் அழகை வார்த்தைகளால் விவரிக்கிறோமா? அவரது அழகை நமது வாழ்க்கையில் வாழ்ந்து காண்பித்தால் நீங்கள் அவரை நேசிப்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை” என்று பிறர் கூறுவார்கள்.