எனது பணியின் ஆரம்ப நாட்களில் என்னுடன் பணிசெய்த நபர் ஒருவர் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவதில் மகிழ்ச்சி அடைபவனாக இருந்தான். புதிதாக கிறிஸ்தவ விசுவாசத்தில் வந்தவர்கள் அல்லது அவனுடைய இயேசுவைப் பற்றி பேச முயற்சி செய்த அனைவரையும் சிறிது கூட இரக்கமின்றி வெறுப்பூட்டுகிற வார்த்தைகளினால் பழித்துக் கூறுவான். ஒருநாள் நான் அந்த வேலையை விட்டுவிட்டு வேறொரு இடத்தில் புதிய வேலையில் சேர்ந்து விட்டேன். அன்று அந்த மனிதன் ஒருக்காலும் இயேசுவைப் பின்பற்றுகிறவராக மாற இயலாது என்று எண்ணினதை நினைவு கூருகிறேன்.

இரண்டு ஆண்டுகள் கழித்து நான் முன்பு வேலை செய்த இடத்திற்குச் சென்றேன். அந்த மனிதன் இன்னமும் அங்கேதான் வேலை செய்து வந்தான். ஆனால் அவனில் ஏற்பட்டிருந்த ஆச்சரியமான மாற்றத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. விசுவாசத்திற்கு எதிரியாக இருந்த அந்த மனிதன் இன்று “புது சிருஷ்டி” என்றால் என்ன என்பதற்கு மாதிரியாக அவன் பேச்சும் நடக்கையும் மாறி இருந்தது. (2 கொரி 5:17) முப்பது ஆண்டுகள் கழிந்துவிட்டது. இன்றும் அந்த மனிதன் “முழுவதும் பாவியாக இருந்த அவனை இயேசு எப்படியாகச் சந்தித்தார்” என்று பிறருக்கு சொல்லிக் கொண்டிருக்கிறான்.

ஆதி கிறிஸ்தவர்களும் அவர்களைக் கொடுமையாக துன்பப்படுத்தின பவுலின் வாழ்க்கையில் புது சிருஷ்டி என்றால் என்ன என்ற மாற்றத்தைப் பார்த்திருப்பார்கள். (அப் 9:1-22) இரட்சிக்கப்படவே முடியாது என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு, மேலே கூறப்பட்ட இரண்டு மனிதர்களின் வாழ்க்கையும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளன.

இயேசு பவுலையும், என்னுடன் பணி செய்தவரையும், என்னையும் தேடி வந்தார். இரட்சிப்பு அடையக் கூடாத மக்களை இன்றும் தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்கிறார். அப்படிப்பட்ட மக்களை நாம் எப்படி சந்திப்பது என்பதற்கு இயேசு மாதிரியாகவுள்ளார்.