நம்மை நாமே பார்த்துக் கொள்ளல்
முகம் பார்க்கும் கண்ணாடிகளோ, பளபளப்பான பரப்புகளோ கண்டு பிடிக்கும் முன்பு அநேக ஆண்டுகளாக மக்கள் அவர்களது பிம்பத்தை அதிகமாக பார்த்ததே கிடையாது. தேங்கி நிற்கும் தண்ணீர்க் குட்டைகள் ஓடைகள், ஆறுகள் இவைகளின் மூலம்தான் அவர்கள் அவர்களது முகத்தின் சாயலைப் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடி அந்த நிலைமையை முற்றிலும் மாற்றிவிட்டது, கேமரா கண்டு பிடிப்பு நமது தோற்றத்தைப் பற்றிய எண்ணங்களை புதிய உயர்வான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. கேமராவின் உதவியினால் நமது வாழ்க்கை முழுவதும், எந்தப் பருவத்திலும் நமது நிலையான பிம்பத்தை…
வெளியிலிருந்து உதவி
எனது கணவர் தொழில்முறைப்பயணமாக ஒரு ஊருக்குச் சென்ற பொழுது, தங்கும் விடுதி ஒன்றில் ஓர் அறையில் தங்கினார். அப்பொழுது ஒரு அபயக் குரலைக் கேட்டார். அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அறிந்து கொள்ள, அறைக்கு வெளியே வந்தார். பக்கத்து அறையில் யாரோ கூக்குரலிட்டுக் கொண்டிருந்ததைக் கேட்டார். அங்கு பணிசெய்யும் பணியாளர் ஒருவரின் உதவியுடன், உள்ளே சென்று பார்த்தபொழுது அந்த அறையிலிருந்த மனிதன் குளியலறையில் சிக்கிக் கொண்டு வெளியே வரஇயலாமல் இருந்ததைக் கண்டுபிடித்தார். குளியலறையிலிருந்த பூட்டுசரியாக வேலை செய்யாததினால், குளியலறைக்குள் சிக்கிக் கொண்ட மனிதன்,…
பட்டாணி வேண்டாம்
எனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த பொழுது, ஒருநாள் இரவு உணவின் போது, பட்டாணி இருந்த தட்டை ஒருவருக்கொருவர் கடத்தினோம். அப்பொழுது எனது பிள்ளைகளில் ஒருவன் பிடிவாதமாக “வேண்டாம்” என்று கூறினான். “என்ன வேண்டாம்” என்று நாங்கள் பதிலுக்குக் கேட்டோம். “வேண்டாம் நன்றி” என்று கூறுவான் என்று எதிர்பார்த்தோம் அதற்குப் பதிலாக “பட்டாணி வேண்டாம்” என்று அவன் பதில் கூறினான். அவன் கூறின அந்தக்காரியம், நாம் கைக்கொள்ள வேண்டிய நன்நடத்தையுள்ள செயல்களின் முக்கியத்துவம் பற்றி எங்களுக்குள்ளாக பேசிக் கொள்வதற்கு வழிநடத்தியது. உண்மையில் இதுபோல பலமுறை எங்களுக்குள்ளாக…
நம்மோடும் நமக்குள்ளும்
எனது மகன் நர்சரி வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தான். முதல் நாள் அவன் அழுதுகொண்டே “எனக்கு பள்ளிக்கூடம் செல்ல விருப்பமில்லை” என்று அறிவித்தான். “சரீரப்பிரகாரமாக நானும் உன் அப்பாவும் பள்ளிக்கூடத்தில் உன்னுடன் கூட இருக்க மாட்டோம். ஆனால் உனக்காக ஜெபித்துக் கொண்டே இருப்போம். அத்தோடு கூட இயேசு எப்பொழுதும் உன்னோடு கூட இருக்கிறார்”. என்று நானும் என் கணவரும் அவனுடன் பேசினோம்.
“ஆனால் இயேசுவை என்னால் பார்க்க இயலவில்லையே!” என்று அவன் வாதிட்டான். எனது கணவர் அவணை அனைத்துக்கொண்டு “அவர் உனக்குள்ளாக வாழ்கிறார். அவர் உன்னைத்தனியாக…
ஏமாற்றத்திற்கு அப்பால்
அவனுக்கு மேலும் ஒரு சகோதரி கிடைக்கப்போகிறாள் என்பதை அறிந்த சிறுவனைப் பற்றிய வீடியோவை ஒரு வேளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவன் மனமுடைந்த நிலையில் “எப்பொழுதும் பெண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்று புலம்பினான்.
இந்தக் கதை மனிதர்களுடைய எதிர்பார்ப்புகளைப்பற்றிய ஒரு வெளிப்பாட்டைத்தருகிறது. ஆனால் ஏமாற்றம் அடைவதில் எந்த ஒரு வேடிக்கையும் இல்லை. இது நமது உலகத்தையே முழுவதும் நிரப்பிவிடுகிறது. வேதாகமத்திலுள்ள ஒரு நிகழ்ச்சி ஏமாற்றங்களால் நிறைந்திருக்கிறது. யாக்கோபு அவனுடைய எஜமானின் மகள் ராகேலைத் திருமணம் செய்வதற்காக 7 ஆண்டுகள்…
அமைதியின் சத்தங்கள்
மீன் பிடித்தலில் ஈடுபட்டிருந்த எனது நண்பன் “ஆழமற்ற நீரோடைகள் அதிக சத்தத்தை உண்டாக்கும்” என்றான். அது ஆழமாக ஓடும் நீர் அமைதியாக இருக்கும்” என்ற முதுமொழிக்கு மாற்றாக உள்ளது. அதாவது குறைவான அறிவுள்ளவர்கள் அதிகமாக பேசுவார்கள் என்ற அர்த்தத்தில் அவன் கூறினான்.
அந்தப் பிரச்சனையின் மறுபக்கம் நாம் சரியாகக் கேட்பதில்லை என்பதாகும். அது கவனிக்காமல் கேட்பவர்களைப் பற்றி வயது முதிர்ந்த சிமியோன் மற்றும் ஹார்பங்கலின் அமைதியின் சத்தங்கள் என்ற பாடலை நினைப்பூட்டினது. அவர்கள் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்களது சொந்த எண்ணங்களை அமைதிப்படுத்தத் தவறுவதால்…
முக்கிய நிகழ்ச்சி
எனது ஊரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த வானவேடிக்கையை நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, என் கவனம் சிதறடிக்கப்பட்டது. மிக முக்கியமான வானவேடிக்கையின் மத்தியில் அதன் வலப் பக்கத்தில், இடப் பக்கத்தில் சிறிய வானவேடிக்கைகளும் வானில் காணப்பட்டன. பார்ப்பதற்கு அவை நன்றாகத்தான் இருந்தன. ஆனால் அவற்றைப் பார்ப்பதினால் என் தலைக்குமேலே கண்கவர் காட்சிகளுடன் நடந்த முக்கியமான வானவேடிக்கைகளில் சிலவற்றைப் பார்க்க முடியாமல் போனது.
சில சமயங்களில் நல்ல காரியங்கள் மிகச் சிறந்த காரியங்களைவிட்டு நமது கவனத்தை சிதறடிக்கும். அதைப் போலவே லூக்கா 10: 38-42ல்…
மிக உயரிய விருதைப் பெறல்
ஓவ்வொரு துறையிலும் முயற்சியின் உச்சத்திற்கு மனிதரால் மதிக்கப்பெற்ற ஓர் உயரிய விருது உண்டு. நடிப்பிலே சிறந்ததற்கு தரப்படும் அகாடாமி பரிசு உதாரணமாக ஒலிம்பிக் போட்டியில் பெற்ற தங்கப்பதக்கம், கிராமி பரிசு, இசை, அல்லது நோபல் பரிசு போன்றவைகள், உலகில் மிக மேன்மையான பரிசுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் இவை எல்லாவற்றைம்விட பெற்றுக் கொள்ளக்கூடிய மிகப் பெரிய பரிசு ஒன்று உண்டு.
முதலாம் நூற்றாண்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றவர்கள் பரிசைப் பெறுவதற்காக முழுமையுமாக முயற்சி எடுத்தார்கள் என்பதை பவுல் அப்போஸ்தலன் நன்கு அறிந்திருந்தார். இதை மனதில்…
நமது முக்கிய கரிசனை
சிநேகிதர்களால் வரும் மனஅழுத்தம், அன்றாட வாழ்வில் ஒரு பகுதி சில சமயங்களில் ஒரு தீர்மானம் எடுக்குமுன் நமது சொந்த கருத்திற்கோ அல்லது அது தேவனுக்கு பிரியமாக இருக்குமோ, இருக்காதோ என்று எண்ணுவதை விட, மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் அல்லது என்ன சொல்லுவார்கள் என்பதை வைத்தே நாம் நமது தீர்மானங்களை எடுக்கிறோம். இவன் இப்படிப்பட்டவன் என்று பிறர் நம்மை தீர்மானித்து விடுவார்கள் என்றோ அல்லது பிறரால் ஏளனம் செய்யப்பட்டுவிடுவோமோ என்பதைக் குறித்து நாம் கவலைப்படுகிறோம்.
அப்போஸ்தலனாகிய பவுலும், அவனைச் சுற்றியிருந்த மக்களால் இந்த அழுத்தத்திற்கு உட்பட்டார்.…