ஓவ்வொரு துறையிலும் முயற்சியின் உச்சத்திற்கு மனிதரால் மதிக்கப்பெற்ற ஓர் உயரிய விருது உண்டு. நடிப்பிலே சிறந்ததற்கு தரப்படும் அகாடாமி பரிசு உதாரணமாக ஒலிம்பிக் போட்டியில் பெற்ற தங்கப்பதக்கம், கிராமி பரிசு, இசை, அல்லது நோபல் பரிசு போன்றவைகள், உலகில் மிக மேன்மையான பரிசுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் இவை எல்லாவற்றைம்விட பெற்றுக் கொள்ளக்கூடிய மிகப் பெரிய பரிசு ஒன்று உண்டு.

முதலாம் நூற்றாண்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றவர்கள் பரிசைப் பெறுவதற்காக முழுமையுமாக முயற்சி எடுத்தார்கள் என்பதை பவுல் அப்போஸ்தலன் நன்கு அறிந்திருந்தார். இதை மனதில் வைத்து பிலிப்பு பட்டணத்தில் இருந்த கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கு “எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்”. (பிலிப்பியர் 3:7) என்று எழுதினார் ஏன்? ஏனென்றால் அவரது உள்ளத்தில் “நான் கிறிஸ்துவையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிய அவர் இருதயத்தில் ஒரு நோக்கம் கொண்டிருந்தார். ஆகவே பவுல் “கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாயத் தொடருகிறேன்”. (வச.12) என்று கூறினார். அவர் வெற்றிகரமாக ஓடி முடித்தற்கான பரிசு “நீதியின் கிரீடம்” ( 2 தீமோத் 4:8)

நம்மில் ஒவ்வொருவரும் அந்தப் பரிசைப் பெற்றுக் கொள்வதை குறிக்கோளாக வைக்கலாம். ஏன் என்றால் இந்தக் குறிக்கோளின் மூலம் தேவனை மகிமைப்படுத்துகிறோம். ஓவ்வொரு நாளும் நாம் செய்யும் சாதாரண வேலைகள் மூலமாக, அந்தப் “பெரிய பரிசை” நோக்கி – அதாவது “தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கி தொடருகிறோம்” (பிலிப் 3:14)