என்ன நடக்கும்
உங்களுக்கும் எனக்கும் இடையே சில பொதுவான காரியங்கள் இருக்கும். குழப்பமிக்க, தெளிவற்ற உலகத்தைத் தவிர வேறு விதமான ஓர் உலகத்தையும் நாம் அறிவோம். இப்பூமி சபிக்கப்படுவதற்கு முன் தங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஆதாமும், ஏவாளும் நன்கு அறிந்திருந்தனர். மரணமில்லாத, கடின உழைப்பற்ற, வேதனையற்ற ஓர் உலகமாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பியதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். (ஆதி 3:16-19) பாவத்தினால் உலகம் வீழ்ச்சியடையுமுன் பசி, வேலையில்லாத் திண்டாட்டம், வியாதிகள் இருந்ததில்லை. தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமையையோ அல்லது மனிதனுக்கு, தேவனுக்கும் உள்ள உறவின்…
ஓர் சேவை செய்யும் தலைவர்
பாரம்பரிய ஆப்பிரிக்க சமுதாயங்களில் தலைமுறை தலைறையாக தலைவர்களுக்கான வாரிசுகளைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானம் மிகவும் சிக்கலானது. ஓர் அரசன் மரித்தபின் அடுத்த அரசனைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதுடன் வலிமை மிக்கவராகவும், தைரியமிக்கவராகவும், புத்திக் கூர்மை உடையவராகவும் இருக்க வேண்டும். வேட்பாளர்கள் மக்களுக்கு சேவை செய்வார்களா அல்லது கொடுங்கோலாட்சி புரிவார்களா என்று அறிந்து கொள்ள பல கேள்விகள் அவர்களிடம் கேட்கப்படும். அரச பதவி ஏற்கக் கூடிய வாரிசுகள் மக்களை வழிநடத்துபவர்களாக மட்டுமல்லாது சேவை செய்பவர்களாகவும் இருப்பது அவசியம்.…
மறைந்திருக்கும் பொக்கிஷம்
நானும், என் கணவரும் வெவ்வேறு முறைகளில் வேதத்தை வாசிப்போம். ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக டாம் கற்றிருந்தான். ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி மெதுவாக வாசிக்கும் பழக்கமுடையவர். நான் மேலோட்டமாக, மிகவேகமாக வாசித்து விடுவேன். ஆனால் என் கணவர் என்னை விட வசனங்களை மிக ஆழமாக வாசித்து, வாசிப்பதைத் தன் மனதில் ஞாபகம் வைத்துக் கொள்வார். ஒரு வாரத்திற்கு முன்னால் வாசித்ததைக் கூட ஞாபகப்படுத்தி மேற்கோள் காட்டுவார். நான் ஓர் புத்தகத்தை அல்லது திரையில் சிலவற்றை வாசித்து முடித்த அந்த நிமிடமே வாசித்தது என் ஞாபகத்திற்கு வராமல்…
வாழ்க்கைக்கான பயிற்சி
சமீபத்தில் தன் சரீரத்தையும், மனதையும் கூடுமானவரை பயன்படுத்தின ஓர் பெண்மனியைச் சந்தித்தேன். மலை ஏற்றத்தில் ஈடுபட்டாள், மரணத்தை சந்தித்தாள். கின்னஸ் உலக சாதனையையும் கூட முறியடித்தாள். இப்பொழுது அவள் வேறுவிதமான ஒரு சவாலை ஏற்றுக்கொண்டு, அதில் ஈடுபட்டிருக்கிறாள். அதாவது மாற்றுத் திறனாளியான தன் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பு அவளுக்கு வந்தது. மலை ஏற்றத்தின் பொழுது அவள் பயன்படுத்திய தைரியம், நம்பிக்கையை இப்பொழுது தன் தாய்மைக்குரிய செயல்களுக்காக அர்ப்பணித்தாள்.
1 கொரிந்தியர் நிருபத்தில் பவுல் அப்போஸ்தலன் பந்தய சாலையில் ஓடும் ஓர் ஓட்ட வீரனைப் பற்றி…
பரம்பரை சொத்தை விட்டுச் செல்லுங்கள்
ஒரு சாலைக் கட்டுமான மேஸ்திரி விபத்தில் மரித்துப்போன பொழுது, அந்த மனிதன் தன் குடும்பம், சக ஊழியர், சமுதாயத்தின் மீது வைத்திருந்த அன்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஓர் பேரிழப்பை உணர வைத்தது. அவனுடைய ஊர் தேவாலயமானது அடக்க ஆராதனையில் துக்கத்துடன கலந்து கொள்ள வரும் மக்களுக்கு இடம் போதாதபடியினால், ஓர் பெரிய கட்டடத்தில் அடக்க ஆராதனைக்கு ஒழுங்கு செய்தனர். நண்பர்களாலும், குடும்பத்தினராலும் அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது! அவனுக்கு உரிய தனித்தன்மையினால் ‘டிம்’ அநேகருடைய வாழ்க்கையைத் தொட்டிருந்தான். அவனுடைய அன்பு, நகைச்சுவைபடப் பேசும்…
சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்
ஓர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், ஓர் புதிய பிரச்சனையை சந்திக்க வேண்டிய ஓர் சூழ்நிலையின் வழியாக நீங்கள் கடந்து சென்று கொண்டிருக்கிறீர்களா? அப்பிரச்சனைக்கு முடிவு வந்துவிட்டது என்று இரவில் தேவனுக்கு நன்றி செலுத்துகிறீர்கள். ஆனால் அப்பிரச்சனை தீராமல், ஏதோ ஒரு புதிய தவறு நடந்து பிரச்சனை தீராமலேயே இருக்கிறது.
அப்படிப்பட்ட அனுபவத்தின் வழியாக நான் கடந்து கொண்டிருந்த பொழுது லூக்கா நற்செய்தி நூல் 18ம் அதிகாரத்தில் முதல் வசனத்திலுள்ள வார்த்தைகள் என்னைப் பிரமிப்பிற் குள்ளாக்கியது. “சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம்…
அவர் உனக்காகவே வந்தார்
பிரான்ஸ் கஃப்கா (Franz Kafka 1883-1924) தன்னுடைய “சோதனையும், கோட்டை அரண்மனையும்” (The Trial and The Castle) என்னும் நாவலில், மனுக்குலம் தனிமனித அடையாளமோ, மதிப்போ இன்றி வெறும் முகங்களாகவே மாறும் அவல நிலைக்கு அவர்களைத் தள்ளும் மனிதத்தன்மையற்ற ஜீவியமாகவே இவ்வாழ்வை சித்தரித்துள்ளார். மேலும் கஃப்கா (Kafka) “ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டுச் செல்லும் கண்வேயர் பெல்ட்டை (Conveyor Belt) போல இவ்வாழ்க்கை, நம்மை ஒரு உயிரினமாகக் கருதாமல் உயிரற்ற பொருளாகவே கருதி சுமந்து செல்கிறது” என கூறியுள்ளார்.…
அவருடைய நாமத்தை உச்சரிக்கும் பொழுது
ஞாயிறு ஆராதனை வேளையிலே, அந்த பாடகர் பாடத் துவங்கியதும் முழு சபையும் நிசப்தமாயிற்று. கார்டன் ஜென்சன் (Gorden Jensen) என்பவர் ஆத்மார்த்தமான வரிகளைக் கொண்டு இயற்றிய ஒரு பழைய பாடலை கனிந்த அடிக்குரலில் அவர் பாடத் துவங்கியதும், அனைவரின் கவனமும்; அவர் மேலேயேயிருந்தது. “அவருடைய நாமத்தை உச்சரிக்கும் தூரத்தில் அவர் நம் அருகில் இருக்கிறார்” என்கிற அப்பாடல் தலைப்பு வெளிப்படுத்தும் உண்மை, நாம் வயதாக ஆக இன்னும் விலையேறப்பெற்றதாய் மாறிவிடுகிறது.
நமக்கு பிரியமானவர்களின் பிரிவை அநேக முறை நாம் அனுபவித்துள்ளோம். உதாரணத்திற்கு மகனோ, மகளோ…
அவள் தந்தையின் மிருகக்காட்சி சாலை
ஜீன் வில்லியம்ஸ் (June Williams) நான்கு வயதாய் இருந்த பொழுது அவளுடைய தந்தை தடுப்புகளற்ற, மிருககாட்சிசாலை அமைக்கும் படியாய் ஏழு ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை வாங்கினார். ஒரு வரையறைக்கப்பட்ட இடத்தில் காட்டு விலங்குகளை சுதந்திர உணர்வுடன் வாழ திறமையாய் செயல்பட்ட தன் தந்தையை குறித்து நினைவு கூர்ந்தாள். இன்று 110 ஏக்கர் பரப்பளவில் 11000 விலங்குகளுக்கு புகலிடமாக விளங்கும் செஸ்டர் மிருகக்காட்சிசாலை (Chester Zoo) இங்கிலாந்து நாட்டின் மிக பிரபலமான மிருகக்காட்சி சாலையாகும். விலங்குகள் மேம்பாடு, அதைக்குறித்தான கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றை குறித்து…