ஜீன் வில்லியம்ஸ் (June Williams) நான்கு வயதாய் இருந்த பொழுது அவளுடைய தந்தை தடுப்புகளற்ற, மிருககாட்சிசாலை அமைக்கும் படியாய் ஏழு ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை வாங்கினார். ஒரு வரையறைக்கப்பட்ட இடத்தில் காட்டு விலங்குகளை சுதந்திர உணர்வுடன் வாழ திறமையாய் செயல்பட்ட தன் தந்தையை குறித்து நினைவு கூர்ந்தாள். இன்று 110 ஏக்கர் பரப்பளவில் 11000 விலங்குகளுக்கு புகலிடமாக விளங்கும் செஸ்டர் மிருகக்காட்சிசாலை (Chester Zoo) இங்கிலாந்து நாட்டின் மிக பிரபலமான மிருகக்காட்சி சாலையாகும். விலங்குகள் மேம்பாடு, அதைக்குறித்தான கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றை குறித்து அவளுடைய தந்தையுடைய எதிர்பார்ப்புகளை அம்மிருகக்காட்சிசாலை பிரதிபலிக்கிறது.

அவரைப் போலவே சாலமோனுக்கும், பெரிதும் சிறிதுமான அனைத்து மிருகங்களின் மேலும் ஆர்வம் இருந்தது. மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள விலங்குகளை பற்றி மட்டும் கற்றுக்கொள்ளாமல், தூர தேசங்களிலிருந்தும் குரங்கிணங்களையும் அரியவகை விலங்குகளான இறக்குமதி செய்தான் (1 இராஜ 10:22). இருப்பினும், இயற்கையை குறித்ததான சாலமோனுடைய ஞானம் வெறும் அறிவை வளர்த்துக்கொள்ளும் ஆர்வத்தோடு நிற்கவில்லை என்பதை அவருடைய நீதிமொழிகளில் ஒன்று சுட்டிக்காட்டுகிறது. “நீதிமான் தன் மிருகஜீவன்களை காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே” (நீதி 12:10) என்கிற நீதிமொழியின் மூலம் மிருகங்களை நாம் நடத்தும் விதத்தில் வெளிப்படும் ஆவிக்குரிய தாக்கம் நமது சிருஷ்டிகரின் இருதயத்தை பிரதிபலிப்பதாய் இருக்கிறது.

நம்முடைய சிருஷ்டிகருடனான நம்முடைய உறவு மனிதர்களை நாம் நடத்தும் விதத்தில் மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, நம்முடைய பராமரிப்பில் உள்ள விலங்குகளுக்கு நாம் காட்டும் கரிசனையிலும் வெளிப்படும் என்பதை தெய்வீக ஞானத்தின் மூலம் சாலமோன் கண்டான்.