வகை  |  odb

ஏவியின் தீர்மானம்

ஒரு அமெரிக்க உயர்நிலைப் பள்ளியிலுள்ள பாடகர் குழுவின் 25 வாலிபப் பெண்களில் ஒருத்தியாக ஏவியும் (Evie), ஜமாய்க்கா நாட்டிற்கு சென்று வேறு கலாசாரத்தையுடைய மற்றோரு தலைமுறையினருக்கு தேவனுடைய அன்பைக் காண்பிக்கவும், சாட்சி பகிரவும், பாடவும் பயணித்தாள். ஏவிக்கு அப்பயணத்தின் ஒரு நாள் மிகவும் மறக்கமுடியாததாகவும், சந்தோஷம் நிறைந்ததாகவும் அமைந்தது.

அன்று அப்பாடகர் குழுவினர் ஒரு தனியார் மருத்துவ விடுதிக்கு சென்று பாடவும்,  அங்குள்ளவர்களை சந்திக்கவும் சென்றனர். அவர்கள் பாடி முடித்த பின்பு ஏவி, அவ்விடுதியில் தங்கியிருந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணின் அருகில் அமர்ந்தாள்.…

எது பிரதானமானது

வயதாக ஆக,  இயேசுவின் பிரியமான சீஷனாகிய யோவானுடைய உபதேசங்களின் எல்லை குறுகிக்கொண்டே போய், அவருடைய மூன்று கடிதங்களிலும் தேவனுடைய அன்பைக் குறித்தே முழு கவனத்தையும் செலுத்தினார். ‘தேவனுடைய அன்பைக் குறித்தான உண்மையை அறிந்துகொள்ளுதல்’ (Knowing the truth of God’s love) என்கின்ற தன்னுடைய புத்தகத்தில், பீட்டர் க்ரீஃப்ட் (Peter Kreeft) ஒரு பழமையான கதையொன்றை குறிப்பிட்டுள்ளார். அதாவது ஒரு நாள் யோவானுடைய இளம் சீடர்களில் ஒருவன் அவரிடம் வந்து,  “ஏன் நீங்கள் வேறொன்றைக்குறித்தும் பேசுவதில்லை” என முறையிட்டான். அதற்கு யோவான்,  “அதைத்தவிர வேறொன்றுமில்லையே”…

எல்லாம் தேவனிடமிருந்து வருகிறது

என்னுடைய 18 ஆம் வயதில் எனக்கு முதல் முதலாக முழு நேர வேலை கிடைத்தது. அப்பொழுது,  சேமிப்பின் ஒழுக்கத்தைக் குறித்து முக்கியமான ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். வேலை செய்து,  ஒரு வருட பள்ளிப் படிப்பிற்கு தேவையான தொகையை சேமித்தேன். அச்சமயம் என் தாயாருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. அப்பொழுது தான் ஒன்றை உணர்ந்தேன். அதாவது என் தாயாருடைய அறுவை சிகிச்சைக்கு தேவையான பணம் என் வங்கி கணக்கில் இருந்தது.

திடீரென என்னுடைய எதிர்காலத் திட்டங்களை காட்டிலும்,  என் தாயாரின் மீதுள்ள அன்பே…

இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்

சார்லட்டின் (Charlotte) தனது நண்பர்கள் சமூக ஊடகத்தில்,  பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அஜாக்கிரதையான அல்லது இகழ்வான காரியங்களை பதிவேற்றும் பொழுது,  சார்லட் அவர்களின் கருத்துகளுக்கு உடன்படமாட்டாள். ஆனால் கனிவாக எதிர்ப்பை பதிவு செய்வாள். பிறருடைய கண்ணியத்திற்கு எப்பொழுதும் மதிப்பளித்து,  எப்பொழுதும் ஊக்கமான நல்வார்த்தைகளையே பேசுவாள்.

கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பை வளர்த்து வந்த ஒரு நபரிடம்,  பேஸ்புக் (facebook) மூலம் சில வருடங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. அவன் சார்லட்டின் அரிய நேர்மையையும், கண்ணியத்தையும் பாராட்டினான். காலப்போக்கில் அவனுக்குள் இருந்த பகைமை உணர்வு கரைந்தது. பின்பு…

கிருபையினால் தரப்படுத்துதல்

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய என்னுடைய மகன் ஒரு தாளை என்னிடம் காண்பித்த பொழுது, அவனுடைய நீல நிற கண்கள் உற்சாகத்தால் மின்னியது. அது அவனுடைய கணக்கு தேர்வுத்தாள். அதில் சிவப்பு நட்சத்திரம் ஒன்று குறிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அவன் நூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தான். நாங்கள் அந்த விடைத்தாளைப் பார்த்து கொண்டிருந்த நேரத்தில், அத்தேர்வு நேரம் முடிந்தது என்று தன் ஆசிரியர் கூறின பொழுது தான் மூன்று கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்காததைச் சொன்னான். அதைக்கேட்டு குழம்பி, பிறகு முழு மதிப்பெண் எப்படி கிடைக்கக்கூடும் என வினவினேன். அதற்கு…

ஒரு நீர்குமிழி இடைவேளை

நானும்,  என்னுடைய கணவர் கார்லும் (Carl) அட்லாண்டிக் சிட்டி (Atlantic City) மர நடைபாதையில் நடந்து கொண்டிருக்கையில் எங்களை கடந்து ஓடிய ஒரு சிறுவன் எங்கள் மேல் நீர்க்குமிழிகளை பொழிந்து சென்றான். எங்களுக்கு சிரமமான அந்நாளின் மகிழ்ச்சிகரமான இலகுவான ஒரு தருணம் அது. மருத்துவமனையில் உள்ள என் கணவருடைய மைத்துனரைக் காணவும்,  மருத்துவரை சந்திக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அவருடைய சகோதரிக்கு உதவும் படியாகவும் நாங்கள் அப்பட்டணத்திற்கு வந்திருந்தோம். எங்களுடைய குடும்பத்தின் தேவைகளினால் சிறிது திணறியதால்,  சிறிது நேரம் ஓய்வு எடுக்கும்படியாக,  கடலோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்தோம்.…

அவர் சொல்வதைச் செய்தல்

எனக்கு ஒரு நிலத்தடி நீர்த்தொட்டி தேவையாயிருந்தது. அதை எப்படி கட்ட வேண்டும் என்பதை துல்லியமாக முடிவு செய்தபடியால் தெளிவான வழிமுறைகளைக் கட்டுமான பணியாளரிடம் தெரிவித்தேன். ஆனால்,  அதற்கடுத்த நாள்,  அப்பணியை மேற்பார்வையிட்ட பொழுது, நான் கூறிய வழிமுறைகளை அந்த கட்டுமான பணியாளர் பின்பற்றாததைக் கண்டு கோபமடைந்தேன். நான் கூறிய திட்டத்தை அவன் மாற்றியதால் நான் எதிர்பார்த்த விளைவும் இல்லை. மேலும்,  என்னுடைய கட்டளைகளை பின்பற்றாததற்கு அவன் கூறிய காரணங்கள் என்னை எரிச்சலூட்டியது.

பின்பு அக்கட்டுமானர் அப்பணியை மாற்றி அமைத்து கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருக்கையில்,  என்னுடைய…

நல்ல மாதிரி

சிறுபிள்ளைகளுக்கான பிரசங்கத்தைக் கேட்கும்படி கூடியிருந்த சிறுபிள்ளைகளைப் பார்த்து,  எங்கள் சிறுவர்களுக்கான போதகர்,  “இன்று நாம் ஒன்றைப் போல நடிக்கும் விளையாட்டை விளையாடப் போகிறோம். நான் ஏதாவது ஒன்றின் பெயரைக் கூறுவேன்,  உடனே நீங்கள் அதன் செயலைச் செய்து காட்ட வேண்டும். தயாரா? கோழிக்குஞ்சு” என்று கூறினார். உடனே அக்குழந்தைகள் தங்கள் கைகளை சிறகு போல சிறகடித்து,  கோழிக்குஞ்சு போல கீச் கீச்சென்று கத்தினார்கள். அடுத்ததாக யானை,  பின்பு கால் பந்து வீரர்,  அதனை தொடர்ந்து நடன மங்கை (ballerina), கடைசியாக இயேசு என்றார் .…

ஒரு வாத்தை செதுக்குவது எப்படி

நானும் எனது மனைவி கரோலினும், பிப்ஸ் வெஸ்டஸ் போர்ன் (Phipps Festus Bourne) அவர்களை 1995 ஆம் ஆண்டு வெர்ஜினியாவின் மாப்ரி இல் (Mabry Hill, Virgina) என்னும் இடத்திலுள்ள அவருடைய கடையில் சந்தித்தோம். 2002 ஆம் ஆண்டில் மரித்த போர்ன் நாம் காணும் பொருட்களை கூடுமானமட்டும் அச்சு அசலாக செதுக்குவதில் தலைசிறந்த சிற்பி. “ஒரு வாத்தை செதுக்குவது மிக சுலபம். உங்கள் மனதில் ஒரு வாத்து எப்படி இருக்கும் என்பதை நன்றாக பதித்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு மரக்கட்டையை பார்த்து, அதில் வாத்து…