என்னுடைய 18 ஆம் வயதில் எனக்கு முதல் முதலாக முழு நேர வேலை கிடைத்தது. அப்பொழுது,  சேமிப்பின் ஒழுக்கத்தைக் குறித்து முக்கியமான ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். வேலை செய்து,  ஒரு வருட பள்ளிப் படிப்பிற்கு தேவையான தொகையை சேமித்தேன். அச்சமயம் என் தாயாருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. அப்பொழுது தான் ஒன்றை உணர்ந்தேன். அதாவது என் தாயாருடைய அறுவை சிகிச்சைக்கு தேவையான பணம் என் வங்கி கணக்கில் இருந்தது.

திடீரென என்னுடைய எதிர்காலத் திட்டங்களை காட்டிலும்,  என் தாயாரின் மீதுள்ள அன்பே பிரதானமாயிற்று. அப்பொழுது,  எலிசபெத் எலியாட் (Elisabeth Elliot) அவர்களுடைய ‘உணர்ச்சியும் பரிசுத்தமும்’ (Passion and Purity) என்ற புத்தகத்தில் உள்ள வரிகள் புதிய அர்த்தம் கொண்டன. “நமக்கு கொடுக்கப்பட்ட எதையாகிலும் அவர் விரும்பும்படி பிரயோஜனப்படும் படியாய், அவரிடமே திருப்பி கொடுக்க வேண்டிய தருணத்தில், அப்படி செய்ய மனதில்லாமல், அதை இருகப் பற்றிக் கொண்டிருப்போமானால், நம்முடைய ஆத்தும வளர்ச்சியை தடை செய்கிறவர்களாயிருப்போம். ‘தேவன் எனக்கு கொடுத்தாரென்றால், அது என்னுடையது. நான் எதுவேண்டுமானலும் செய்வேன்’ என்று, சுலபமாக ஒரு தவறை நாம் இங்கு செய்யகூடும். இருப்பினும் அது உண்மை அல்ல,  உண்மை என்னவெனில்,  அவருக்கு நன்றி செலுத்தும்படியாக அது நம்முடையதாயிற்று,  மற்றும் அவருக்கு படைக்கும்படியாக நமதாயிற்று… விட்டுக்கொடுக்கும் படியாய் நமதாயிற்று.”

அப்பொழுது தான் ஒன்றை நான் உணர்ந்தேன். அவ்வேலையும்,  சேமிக்கும் ஒழுக்கமும் தேவனிடமிருந்து வந்த ஈவுகள்! என்னுடைய பள்ளிப்படிப்பை தேவனால் வேறு வழிகளில் செய்ய முடியும் என்று நிச்சயமாய் நம்பினதினால், என் குடும்பத்திற்கு தாராளமாய் உதவ முடிந்தது. தேவனும் அவ்வாறே பள்ளிப் படிப்பிற்கு உதவினார்.

எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம் (1 நாளா. 29:14) என்னும் தாவீதின் ஜெபத்தை இன்று நம்முடைய வாழ்வில் எவ்வாறு செயல்படுத்த தேவன் விரும்புகிறார் என அறிவோம்.