ஆகஸ்ட், 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஆகஸ்ட் 2016

உண்மையான விடுதலை

ஒலௌடா யூக்கியானோ (1745–1796) 11 வயதாக இருந்தபொழுது கடத்தப்பட்டு அடிமையாக விற்கப்பட்டான். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கும், வெர்ஜினியா காலனிக்கும், அங்கிருந்து இங்கிலாந்துக்குமான பயங்கரமான வேதனை நிறைந்த பயணத்தை மேற்கொண்டான். அவனது 20வது வயதில் பணம் கொடுத்து, அவன் தன் விடுதலையை வாங்கினான். மனிதாபிமானமற்ற முறையில் அவன் நடத்தப்பட்டிருந்ததினால் அவன் இன்னமும் உணர்ச்சிபூர்வமான, சரீரப்பிரகாரமான தழும்புகளை தாங்கிக் கொண்டிருந்தான்.

அவனுடன் சேர்ந்த மற்ற மக்கள் இன்னமும் அடிமைத்தனத்தில் இருந்ததால் அவன் பெற்ற விடுதலையின் நிமித்தம் அவன் மகிழ்ச்சியடைய இயலாமல், இங்கிலாந்தில் அடிமைத்தனத்தை ஒழிக்கும் இயக்கத்தில்…

சாந்தத்தோடு தாக்கத்தை ஏற்படுத்துதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 26வது ஜனாதிபதியாக தியோடர் ரூஸ்வெல்ட் (1901–1909) ஆவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மூத்தமகன் தியோடர் ஜுனியருக்கு உடல்நலமில்லை என்பதைக் கேள்விப்பட்டார். அவரது மகனுடைய நோய் சுகம் அடையக்கூடியதாக இருந்தாலும், டெட்டின் சுகவீனத்திற்காக கூறப்பட்ட காரணம் ரூஸ்வெல்ட்டை மிக அதிகம் பாதித்தது. அவரது மகனின் நோய்க்கு அவர்தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ரூஸ்வெல்ட் அவரது பெலவீனமான குழந்தைப் பருவத்தில் “சண்டை” வீரனாக வேண்டும் என்ற எண்ணம் அவரது வாழ்க்கையில் செயல்படாததால், அவரது மகன் சிறந்த சண்டை வீரனாக வேண்டுமென்று…

சிறந்த சாலைப் பயணம்

மடகாஸ்கரின் தேசிய சாலை எண் 5ல் செல்லும்பொழுது, அழகிய வெண்மணல் பரப்பிய கடற்கரை, தென்னந்தோப்புகள், இந்து மகாசமுத்திரம் என்ற பல அழகிய காட்சிகளைக் காணலாம். 125 மைல் நீளமுள்ள அந்த இருவழிச் சாலை பாறைகள், மணல், களிமண்ணால் நிறைந்து காணப்படும். உலகிலுள்ள மோசமான சாலைகளில் ஒன்றாக இந்த சாலையும் பெயர் பெற்றுள்ளது. பேரழுகு வாய்ந்த காட்சிகளைக் காண இந்த சாலை வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் நான்கு சக்கரங்களையும் தனித்தனியே இயக்கக் கூடிய சக்தி வாய்ந்த (Four Wheel Driver) வாகனத்தில் தான் செல்ல…

தேவனுக்குப் பெயரிடுதல்

கிறிஸ்டோபர் ரெட் எழுதிய ‘நான் புரிந்து கொள்ள இயலாத கடவுள்’ என்ற புத்தகத்தில், எதிர்பாராத நபர்தான் முதல்முதலாக தேவனுக்கு பெயர் சூட்டியுள்ளார். அதுதான் ஆகார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகாரின் கதை மனித வரலாற்றைப் பற்றி மிக உண்மையான பார்வையைத் தருகிறது. தேவன், ஆபிராம், சாராயிடம் அவர்களுக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்று சொல்லி ஆண்டுகள் பல கடந்து விட்டன. சாராய் வயது முதிர்ந்தவளாகி பொறுமையை இழந்து விட்டாள். தேவனுக்கு “உதவி செய்யத்தக்கதாக”, அக்காலத்து வழக்கத்தின்படி மோசமான ஒரு காரியத்தைச் செய்தாள். அவளது அடிமைப் பெண்ணாகிய…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தோலுக்கு உள்ளே கிரியை

சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.  
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.  

மலைமுகடுகளின் பாதை

ஒரு கவிஞரும், ஆன்மீக எழுத்தாளருமான கிறிஸ்டினா ரோசெட்டி, தனக்கு எதுவும் எளிதில் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவள் தனது வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். அவளுடைய வாழ்க்கையில் மூன்று நிச்சயதார்த்தங்கள் நிறுத்தப்பட்ட துக்கத்தை தாங்கினார். இறுதியில் அவள் புற்றுநோயால் மரித்துப்போனாள்.  
தாவீது இஸ்ரவேலின் ராஜரீகத்தில் அமர்த்தப்பட்டபோது, அவன் ஒரு வெற்றிகரமான போர்வீரனாக அடையாளப்படுத்தப்பட்டான். ஆனால் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவன் பாடுகளை சகிக்கவேண்டியிருந்தது. அவனுடைய ஆட்சியின் இறுதியில், அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாயிருந்த நபர்களோடு சேர்ந்து அவனுடைய சொந்த குமாரனே அவனுக்கு விரோதமாய் திரும்பினான் (2 சாமுவேல் 15:1-12). ஆகையினால் தாவீது ஆசாரியனாகிய அபியாத்தார், சாதோக் மற்றும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும் எடுத்துக்கொண்டு எருசலேமை விட்டு ஓடினான் (வச. 14,24).  
அபியாத்தார் தேவனுக்கு பலிகளை செலுத்திய பின்பு, தாவீது ஆசாரியர்களைப் பார்த்து, “தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்” (வச. 25) என்று சொன்னான். அவனுடைய குழப்பத்தின் மத்தியிலும் தாவீது, “(தேவன்) உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்” (வச. 26). அவனால் தேவனை நம்ப முடியும் என்பதை அறிந்திருந்தான்.  
கிறிஸ்டினா ரோசெட்டி தேவனை நம்பினாள். அவளுடைய வாழ்க்கை நம்பிக்கையோடு நிறைவடைந்தது. நாம் கடந்து செல்லும் பாதையானது, மலைமுகடுகளாய் தென்படலாம். ஆனால் அங்கே நம்மை விரிந்த கைகளோடு வரவேற்கும் நம்முடைய பரமபிதா நமக்காய் காத்திருக்கிறார்.  

நீலக்கல் திருச்சபை மணிகள்

 நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.  
இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார்.  
நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.