அக்டோபர், 2022 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: அக்டோபர் 2022

ஒளிருவதற்கான வாய்ப்புகள்

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு 5:16
பெருந்தொற்று வெகுவாய் பரவிய நாட்களில் டெல்லியில் வசித்த ஷீத்தல் என்ற பெண், உணவில்லாமல் வருமானமில்லாமல் சாலையோரங்களில் ஆதரவற்று கிடந்த மக்கள் மீது பரிவு கொண்டாள். அவர்களின் நிலைமையை அறிந்து 10 பேருக்கு உணவு சமைத்து, அதைக் கொண்டுபோய் கொடுத்தாள். இந்த செய்தி வெகுவாய் பரவியது. சில தன்னார்வு நிறுவனங்கள் அவளுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து, அதின் விளைவாய், “ப்ராஜெக்ட் அன்னபூர்னா” என்ற திட்டம் உருவானது. 10 பேருக்கு உணவளிக்கத் துவங்கிய ஒரு பெண்ணிலிருந்து துவங்கிய இந்த முயற்சி, 50 தன்னார்வ தொண்டர்களுடன் 60,000 தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் பெரிய திட்டமாய் உருவெடுத்தது.
கொரோனா பெருந்தொற்றானது சேவை மனப்பான்மை கொண்ட பல நபர்களை ஒருங்கிணைத்தது. கிறிஸ்துவின் ஒளியை பிரகாசிக்கும் பல வாய்ப்புகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்தது. இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு... உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16) என்று போதிக்கிறார். அன்பு, தயவு, நல்வார்த்தைகள் மற்றும் செய்கைகள் மூலமாக (கலாத்தியர் 5:22-23), கிறிஸ்துவின் ஒளியை நாம் பிரகாசிக்கச் செய்யலாம். இயேசுவின் மூலமாய் நாம் பெற்றுக்கொண்ட ஒளியை அன்றாடம் நம் வாழ்க்கையில் பிரதிபலித்தால்,“பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (மத்தேயு 5:16) செய்யலாம்.
கிறிஸ்துவின் தேவையுள்ள உலகத்திற்கு அவர் நம்மை உப்பாகவும் ஒளியாகவும் வைத்துள்ளதால், இன்றும் என்றும் அவருடைய ஒளியை நம்மில் பிரகாசிக்க பிரயாசப்படுவோம்.

தேவனில் நம்பிக்கை

பெருந்தொற்று வெகுவாய் பரவிய நாட்களில் டெல்லியில் வசித்த ஷீத்தல் என்ற பெண், உணவில்லாமல் வருமானமில்லாமல் சாலையோரங்களில் ஆதரவற்று கிடந்த மக்கள் மீது பரிவு கொண்டாள். அவர்களின் நிலைமையை அறிந்து 10 பேருக்கு உணவு சமைத்து, அதைக் கொண்டுபோய் கொடுத்தாள். இந்த செய்தி வெகுவாய் பரவியது. சில தன்னார்வு நிறுவனங்கள் அவளுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து, அதின் விளைவாய், “ப்ராஜெக்ட் அன்னபூர்னா” என்ற திட்டம் உருவானது. 10 பேருக்கு உணவளிக்கத் துவங்கிய ஒரு பெண்ணிலிருந்து துவங்கிய இந்த முயற்சி, 50 தன்னார்வ தொண்டர்களுடன் 60,000 தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் பெரிய திட்டமாய் உருவெடுத்தது.
கொரோனா பெருந்தொற்றானது சேவை மனப்பான்மை கொண்ட பல நபர்களை ஒருங்கிணைத்தது. கிறிஸ்துவின் ஒளியை பிரகாசிக்கும் பல வாய்ப்புகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்தது. இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு... உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16) என்று போதிக்கிறார். அன்பு, தயவு, நல்வார்த்தைகள் மற்றும் செய்கைகள் மூலமாக (கலாத்தியர் 5:22-23), கிறிஸ்துவின் ஒளியை நாம் பிரகாசிக்கச் செய்யலாம். இயேசுவின் மூலமாய் நாம் பெற்றுக்கொண்ட ஒளியை அன்றாடம் நம் வாழ்க்கையில் பிரதிபலித்தால்,“பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (மத்தேயு 5:16) செய்யலாம்.
கிறிஸ்துவின் தேவையுள்ள உலகத்திற்கு அவர் நம்மை உப்பாகவும் ஒளியாகவும் வைத்துள்ளதால், இன்றும் என்றும் அவருடைய ஒளியை நம்மில் பிரகாசிக்க பிரயாசப்படுவோம்.

பலவீனம் பலமாகும்போது

நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன? எரேமியா 20:18

ட்ரூ, கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ததற்காய் இரண்டு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டான். சிறைச்சாலையில் அடைபட்டு மகிழ்ச்சியாயிருந்த பல மிஷனரிகளின் வாழ்க்கை சரிதையை அவன் படித்திருக்கிறான். ஆனால் தன்னுடைய அனுபவம் அதுபோலில்லை என்று அவன் சொன்னான். தேவன் அவருக்காய் பாடனுபவிக்கும்பொருட்டு தவறான நபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று அவன் மனைவியிடத்தில் சொன்னான். அவனது மனைவியோ, “இல்லை, அவர் சரியான நபரையே தெரிந்தெடுத்திருக்கிறார்; அது ஏதேச்சையானது அல்ல” என்று சொன்னாள்.

யூதேயா ஜனங்கள் பாவம் செய்ததினிமித்தம் அவர்களைத் தேவன் தண்டிப்பார் என்று எச்சரித்த எரேமியா தீர்க்கதரிசியோடு ட்ரூவை ஒப்பிடலாம். எரேமியா முன்னறிவித்த நியாயத்தீர்ப்பு இன்னும் தேசத்தின் மீது வரவில்லை. ஆனால் அவனைச் சிறையிலடைத்தனர். “கர்த்தாவே, நீர் என்னை இணங்கப்பண்ணினீர்” (வச.7) என்று எரேமியா தேவனைக் குற்றப்படுத்துகிறான். தேவன் தன்னை விடுவிக்கத் தவறிவிட்டார் என்பதைத் தீர்க்கதரிசி நம்ப நேரிட்டது. “நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று” (வச.8) என்று கூறுகிறான். “நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக” (வச.14) என்று சலித்துக்கொள்கிறான். “நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?” (வச.18).

ட்ரூ, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான். ஆனால் அவனுடைய மிகுந்த பாடுகளின் மூலம், அவன் பலவீனமானவன் என்பதினால் தேவன் அவனை எரேமியாவைப் போலவே தெரிந்தெடுத்திருக்கிறார். ட்ரூவும் எரேமியாவும் இயல்பில் பலவான்களாக இருந்திருப்பார்களாகில், அவர்களுடைய வெற்றிக்கு அவர்களுடைய திறமை பாராட்டப்பட்டிருக்கும். அவர்கள் பலவீனர்களாயிருந்தபடியினால் அவர்களின் பொறுமையினால் உண்டான மகிமை தேவனுக்கே போகிறது (1 கொரிந்தியர் 1:26-31). அவனுடைய பெலவீனமே, இயேசுவுக்காய் பயன்படும் நேர்த்தியான மனிதனாய் அவனை மாற்றியது.

சுவிசேஷத்தினிமித்தம்

நெல்சன், 1916ஆம் ஆண்டு அமெரிக்காவில் மருத்துவ பட்டம் பெற்றார். அந்த ஆண்டின் இறுதியில், அவரும் திருமணமாகி ஆறுமாதமான அவருடைய மனைவியும் சீனாவுக்கு வந்து சேர்ந்தனர். தன்னுடைய 22 வயதில் அந்த மருத்துவமனைக்கு மருத்துவராகப் பொறுப்பேற்றார். இரண்டு மில்லியன் மக்கள் வாழும் அந்த பகுதியில் இருக்கும் ஒரே மருத்துவமனை இது. 24 ஆண்டுகள் அந்த பகுதியில் குடும்பத்தோடு தங்கியிருந்து, மருத்துவமனையையும் நடத்திக்கொண்டு, அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சுவிசேஷத்தையும் நெல்சன் பகிர்ந்தார். ஆரம்பத்தில் “அந்நிய சத்துரு” என்று மக்கள் தங்கள் நம்பிக்கையில்லாமையை வெளிப்படுத்தினாலும், பின் நாட்களில், “சீன தேசத்து மக்களை நேசிக்கும் நெல்சன்” என்று அவரை அன்போடு அழைத்தனர். அவருடைய மகளான ரூத், சுவிசேஷகரான பில்லி கிரகாமை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் திறமையான மருத்துவராகவும் நேர்த்தியான வேதாகம ஆசிரியராகவும் இருந்தாலும்; அவருடைய திறமை அல்ல, அவருடைய சுபாவங்களே மற்றவர்களைத் தேவனுக்கு நேராய் நடத்திற்று. கிரேத்தா தீவிலிருக்கும் திருச்சபைக்குப் பொறுப்பாயிருந்த தீத்து என்னும் புறஜாதி ஊழியனுக்கு பவுல் நிருபம் எழுதியபோது, கிறிஸ்துவைப்போல் வாழ்வது முக்கியமானது; ஏனெனில் அதுவே சுவிசேஷத்திற்கு அலங்காரம் என்று அறிவுறுத்துகிறார் (தீத்து 2:10). ஆகிலும் அதை நாம் நம்முடைய சுயபெலத்தோடே செய்ய முடியாது. கர்த்தருடைய கிருபையானது நம்மை “தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய்” மாற்றி (வச.12), ஆரோக்கியமான உபதேசத்துக்கு (வச.1) பாத்திரர்களாய் நம்மை உருவாக்கும்.
நம்மை சுற்றியுள்ள அநேகருக்கு கிறிஸ்துவின் நற்செய்தி தெரியாது. ஆனால் அவர்களுக்கு நம்மை தெரியும். அவருடைய நற்செய்தியை அலங்கரிக்கப்பட்ட விதத்தில் வெளிப்படுத்துவதற்குத் தேவன் நமக்கு உதவிசெய்வாராக.

ஆவியின் கனிகள்: ஓர் புதிய பார்வை

றுவடையின் காலம் என்பது வெகுமதிகள் பெறும் காலம். பல மணி நேர உழைப்பு, வியர்வை, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சுதல், எதிர்ப்புகளுக்கு மத்தியில் பயிர்களைப் பாதுகாத்தல், விரல் நகங்களுக்கு இடையில் சிக்கியிருக்கும் மண் துகள்கள் ஆகிய அனைத்து பிரயாசங்களும் நம் தோட்டத்தில் விளையும் விளைச்சலைப் பார்க்கும்போது உகந்ததாய் தெரியும்.

நம்முடைய தோட்டத்தில் விளையும் தாவரங்களின் வளர்ச்சி, நிறைவான மற்றும் சுவையான பலனைக் கொடுக்கிறது. ஆனால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வின் வளர்ச்சி என்பது நம் தோட்டத்திலுள்ள கனிகளின் வளர்ச்சியைப் போல் எதிர்பார்க்கக்கூடிய ஒன்று அல்ல. நம்முடைய அதிகப்படியான பிரயாசங்கள்…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நாம் தனியாக இல்லை

ஃபிரெட்ரிக் பிரவுன் என்பவரின் விறுவிறுப்பான சிறுகதையான "நாக்" இல், அவர் எழுதினார், "பூமியின் கடைசி மனிதன் ஒரு அறையில் தனியாக அமர்ந்திருந்தான். கதவு தட்டும் சத்தம் கேட்டது”. ஐயோ! அது யாராக இருக்கலாம், அவர்களுக்கு என்ன வேண்டும்? என்ன மர்மமான ஜந்து வந்தது? மனிதன் தனியாக இல்லையே.

நாமும் இல்லை. லவோதிக்கேயாவில் உள்ள சபையினர், கதவு தட்டப்படுவதைக் கேட்டனர் (வெளி.3:20). இயற்கைக்கு அப்பாற்பட்டவராக அவர்களிடம் வந்தது யார்? அவருடைய பெயர் இயேசு. முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிவர் (1:17). அவருடைய கண்கள் நெருப்பைப் போல ஜுவாலித்தது, “அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது" (வச.16). அவருடைய நெருங்கிய நண்பனான யோவான், அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தார் (வச.17). கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமானது தேவனுக்குப் பயப்படுவதிலிருந்து தொடங்குகிறது.

நாம் தனியாக இல்லை, இது ஆறுதல் அளிக்கிறது. இயேசு, அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய் (எபிரெயர் 1:3) இருக்கிறார்.  ஆனாலும் கிறிஸ்து தம்முடைய வலிமையை நம்மை அழிக்க அல்ல, நம்மை நேசிக்கவே பயன்படுத்துகிறார். அவருடைய அழைப்பைக் கேளுங்கள், "ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே பிரவேசித்து அவனுடன் போஜனம் பண்ணுவேன், அவனும் என்னுடன் போஜனம்பண்ணுவான்" (வெளி.3:20). வாசலில் நிற்பது யாரோ? என்கிற பயத்துடன் நமது விசுவாசம் துவங்கி, அது வரவேற்பிலும் ஆற தழுவுவதிலும் முடிகிறது. நாம் பூமியில் கடைசி நபராக இருந்தாலும், எப்பொழுதும் நம்முடன் இருப்பேன் என்று இயேசு உறுதியளிக்கிறார். தேவனுக்கு நன்றி, நாம் தனியாக இல்லை.

வசன பயிற்சி

1800 களின் பிற்பகுதியில், வெவ்வேறு இடங்களில் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான ஊழியத்திற்கான யுக்திகளை உருவாக்கினர். முதலாவது 1877 இல் கனடாவின் மாண்ட்ரீலில். பின்னர் 1898 இல், நியூயார்க் நகரில் மற்றொரு கருப்பொருளில் யுக்திகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1922 வாக்கில், வட அமெரிக்காவில் ஒவ்வொரு கோடைக்காலத்திலும் இதுபோன்ற சுமார் ஐயாயிரம் நிகழிச்சிகள் செயல்பாட்டில் இருந்தது.

இவ்வாறுதான் கோடை விடுமுறை வேதாகம பள்ளியின் ஆரம்பக்கால வரலாறு தொடங்கியது. வாலிபர்களும் வேதாகமத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தான் அந்த விபிஎஸ் முன்னோடிகளின் பேரார்வத்தைத் தூண்டியது.

பவுல் தனது இளம் சீடரான தீமோத்தேயு மீது இதேபோன்ற ஆர்வத்தை கொண்டிருந்தார். "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது" நாம் "எந்த நற்கிரியையுஞ் செய்ய.. பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" என்றெழுதினார் (2தீமோத்தேயு 3:16-17). இது ஏதோ, 'வேதத்தைப் படிப்பது உனக்கு நல்லது' என்பது போன்ற மேலோட்டமான ஆலோசனையல்ல. பவுல் "ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற" வ.7) கள்ள போதகர்கள் எழும்பும் “கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று" (வச.1) கடுமையாய் எச்சரித்தார். வேதாகமத்தின் மூலம் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது (வ. 15).

வேதத்தை படிப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அது பெரியவர்களுக்கும்தான். அது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல; அது ஒவ்வொரு நாளுக்கும் ஏற்றது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார், "பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்று" (வச.15), இதனால் நாமும் சிறுவயது துவங்கியே வேதம் கற்கவேண்டும் என்றல்ல. வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், வேத ஞானம் நம்மை இயேசுவோடு இணைக்கிறது. இது நம் அனைவருக்குமான தேவனின் விபிஎஸ் பாடம்.

தேவன் முன் அமர்ந்திருத்தல்

உயிருள்ள ஒரு நபரின் முதல் புகைப்படம் 1838 இல் லூயிஸ் டாகுரே என்பவரால் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் ஒரு மதிய நேரத்தில் பாரீஸில் உள்ள ஒரு வெற்று நுழைவாயிலிருந்த ஒரு உருவத்தைச் சித்தரிக்கிறது. ஆனால் அதில் ஒரு தெளிவான மர்மம் இருக்கிறது; அந்த நேரத்தில் தெரு, நடைபாதை வண்டிகள் மற்றும் பாதசாரிகளின் போக்குவரத்தால் பரபரப்பாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அந்தப் படத்தில் அவ்வாறாக இல்லை

அந்த மனிதன் தனியாக இல்லை. புகைப்படம் எடுக்கப்பட்ட பிரபலமான பகுதியான "புலவர்ட் டு டெம்பிள்" இல் மக்கள் இருப்பார்கள். குதிரைகள் இருக்கும். அந்தப் படத்தில் அவ்வாறாகக் காட்டப்படவில்லை. புகைப்படத்தைச் செயலாக்குவதற்கான ஒளிப்படப்பிடிப்பு நேரம் (டாகுவேரியோ வகை ஒளிப்பட முறை என்பது பொதுப் பயன்பாட்டிற்கு வந்த முதல் ஒளிப்படப்பிடிப்பு முறை ஆகும்) ஒரு படத்தைப் பிடிக்க ஏழு நிமிடங்கள் எடுக்கும். அந்த நேரத்தில் அசைவில்லாமல் இருக்க வேண்டும். நடைபாதையில் இருந்த ஒரே நபர் புகைப்படம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் மட்டுமே அசையாமல் நின்று கொண்டிருந்தார். அவர் தனது காலணிகளை சுத்தப்படுத்திக்  கொண்டிருந்தார்..

சில நேரங்களில் நிலைத்திருத்தல் என்பது செயலாலும் மற்றும் முயற்சியாலும் செய்ய முடியாததைச் செய்து முடிக்கிறது. சங்கீதம் 46:10ல், தேவன் தம்முடைய மக்களிடம், "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" எனக் குறிப்பிடுகிறார். "ஜாதிகள் கொந்தளிக்கும்போது" (வச.6), "பூமி நிலைமாறினாலும்” (வச.2), அமைதியாக அவரை நம்புபவர்கள், "ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணை" யை  அவரில் கண்டடைவார்கள் (வச. 1).

"அமைதியாக இரு" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வினைச்சொல் "முயற்சியை நிறுத்து" என்றும் குறிப்பிடுகிறது. நமது வரம்புக்குட்பட்ட முயற்சிகளில் நம்பிக்கை வைப்பதைக் காட்டிலும் நாம் தேவனில் இளைப்பாறும் போது, அவரே நம் அசைக்க முடியாத “அடைக்கலமும் பெலனும்" (வச. 1) என்று காண்கிறோம்.