பெருந்தொற்று வெகுவாய் பரவிய நாட்களில் டெல்லியில் வசித்த ஷீத்தல் என்ற பெண், உணவில்லாமல் வருமானமில்லாமல் சாலையோரங்களில் ஆதரவற்று கிடந்த மக்கள் மீது பரிவு கொண்டாள். அவர்களின் நிலைமையை அறிந்து 10 பேருக்கு உணவு சமைத்து, அதைக் கொண்டுபோய் கொடுத்தாள். இந்த செய்தி வெகுவாய் பரவியது. சில தன்னார்வு நிறுவனங்கள் அவளுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து, அதின் விளைவாய், “ப்ராஜெக்ட் அன்னபூர்னா” என்ற திட்டம் உருவானது. 10 பேருக்கு உணவளிக்கத் துவங்கிய ஒரு பெண்ணிலிருந்து துவங்கிய இந்த முயற்சி, 50 தன்னார்வ தொண்டர்களுடன் 60,000 தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் பெரிய திட்டமாய் உருவெடுத்தது.
கொரோனா பெருந்தொற்றானது சேவை மனப்பான்மை கொண்ட பல நபர்களை ஒருங்கிணைத்தது. கிறிஸ்துவின் ஒளியை பிரகாசிக்கும் பல வாய்ப்புகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்தது. இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு… உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16) என்று போதிக்கிறார். அன்பு, தயவு, நல்வார்த்தைகள் மற்றும் செய்கைகள் மூலமாக (கலாத்தியர் 5:22-23), கிறிஸ்துவின் ஒளியை நாம் பிரகாசிக்கச் செய்யலாம். இயேசுவின் மூலமாய் நாம் பெற்றுக்கொண்ட ஒளியை அன்றாடம் நம் வாழ்க்கையில் பிரதிபலித்தால், “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (மத்தேயு 5:16) செய்யலாம்.
கிறிஸ்துவின் தேவையுள்ள உலகத்திற்கு அவர் நம்மை உப்பாகவும் ஒளியாகவும் வைத்துள்ளதால், இன்றும் என்றும் அவருடைய ஒளியை நம்மில் பிரகாசிக்க பிரயாசப்படுவோம்.