வகை  |  odb

ஒவ்வொரு வினாடியும் முக்கியம்

24 மணிநேரத்தை ஒரு நாளுக்குள் அடக்கினால் “70 ஆண்டு வாழும் சாதாரண வாழ்க்கை இப்பொழது எனது வாழ்க்கையில் மாலை 8:30 மணி நேரமாக இருக்கும். காலம் வெகு வேகமாக கடந்துபோகிறது” என்று எனது 59 வயது சிநேகிதன் பாப் போர்ட்மேன் எழுதினான். இவ்வுலகில் நாம் வாழும் காலம் மிகவும் குறுகியது என்ற உண்மை “டிக்கர்” என்ற கைக்கடிகாரத்தை உருவாக்கும் எண்ணத்தைக் கொடுத்தது. நேரத்தை காண்பிக்கும் அந்தக்கடிகாரம் இந்த உலகில் நீங்கள் வாழ இருக்கும் காலத்தை கணக்கிட்டு உங்களது வாழ்க்கையில் எஞ்சியுள்ள காலத்தைக் கணக்கிட்டுக் கூறும்.…

அற்புத மழை

சீனாவில் யூனான் மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்து வரும் கிராம மக்களின் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அவர்களது முக்கிய உணவு சோளமும், அரிசியுமாகும். 2012ம் ஆண்டு பயங்கரமான வறட்சி அப்பகுதியை தாக்கினதினால் பயிர்கள் அனைத்தும் வாடிவிட்டன. அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவரும் மிகவும் கவலைப்பட்டார்கள். மூட நம்பிக்கையுள்ள அநேக செயல்களின் மூலம் வறட்சியை நிறுத்த மக்கள் முயன்றார்கள். எதுவுமே பயனளிக்காமல் போன பொழுது அங்கு வாழ்ந்து வந்த 5 கிறிஸ்தவர்கள் அந்த மக்கள் மூதாதயருடைய ஆவிகளை வருத்தப்படுத்தினதினால்தான் வறட்சி நிலவுகிறதென்று…

விழித்தெழுவதை விடச் சிறந்தது

உங்கள் வாழ்வைப் பாழாக்கின அல்லது குற்றப்படுத்துகிற செயலைச் செய்ததினால் உங்களது வாழ்க்கையே அழிந்துபோனதென்று எப்பொழுதாவது உணர்ந்துள்ளீர்களா? ஆனால் தூக்கத்திலிருந்து எழும்பினவுடன் அது ஒரு கனவுதான் என்று உணர்ந்துள்ளீர்களா? அது ஒரு கோரக்கனவாக இல்லாமல் உண்மையாயிருந்தால்? அந்த சூழ்நிலை உங்களுக்கோ அல்லது நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கோ, உண்மையான நிகழ்ச்சியாய் இருந்திருந்தால் எப்படியாக உணர்வீர்கள்?
19ம் நூற்றாண்டில் ஜார்ஜ் மெக்டனோல்டினால் எழுதப்பட்ட த கியுரேட்ஸ் அவேக்கனிங் என்ற நாவல் சந்தித்த முரண்பாடு இது போலவே இருந்தது. அந்தக்கதை அவரே நம்பாத ஒரு கடவுளைப்பற்றி பேசி வந்ததைக் கண்டறிந்த…

நம்மிடம் பழங்கள் உண்டு

ஒரு இளம் தாயார் பெருமூச்சுடன் அவளது மூன்று வயது மகளுக்கான மதிய உணவைப் பாத்திரத்திலிருந்து சுரண்டி எடுத்துக் கொண்டிருந்தாள். அவளது சிறிய சமையல் அறையிலிருந்த மேஜையின் மேல் இருந்த காலியான பழக்கூடையைப்பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே “ஒரு கூடை நிறைய நமக்குப் பழங்கள் இருந்தால் பணக்காரனைப் போல உணருவேன்” என்று சத்தமிட்டுக் கூறினாள். அவளது சிறியமகள் அதைக் கேட்டாள்.
வாரங்கள் கடந்தன ஆயினும் தேவன் அச்சிறிய குடும்பத்தைப் பராமரித்து வந்தார். வறுமையினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த இளம் தாய் மிகவும் கவலைப்பட்டாள். பின்பு ஒரு…

நாம் அறிந்து கொள்ளலாம்

ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக ஒரு புகைவண்டியில் அமர்ந்திருந்தேன். திடீரென நான் சரியான வண்டியில் தான் உட்கார்ந்துள்ளேனா என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது. அந்த வழித்தடத்தில் நான் இதற்கு முன் பயணம் செய்தது கிடையாது அத்தோடு அந்த வழித்தடத்தைப் பற்றி யாரிடமும் கேட்கவுமில்லை. இறுதியாக சந்தேகம் அதிகரித்ததால் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி விசாரித்தேன்... நான் சரியான புகை வண்டியில்தான் இருந்தேன் என்பதைக் கேட்டு அறிந்துகொண்டேன்.
அந்த நிகழ்ச்சி நமது வாழ்க்கையில் சந்தேகம் எப்படி நமது நம்பிக்கையையும், மன உறுதியையும் குலைத்துப்போடுகிறதென்பதை நினைப்பூட்டியது.…

தரிசனப்பள்ளத்தாக்கு

பாவியாகிய மனிதனுக்கும், பரிசுத்தராகிய தேவனுக்கும் இடையே உள்ள தூரத்தை கடும் தூய்மைவாதிக் குழு (puritan) வைச் சார்ந்த மக்களின் “தரிசனப்பள்ளத்தாக்கு” என்ற ஜெபம் விளக்குகிறது. அந்த ஜெபத்தில் “என்னை தரிசனப்பள்ளதாக்கிற்கு கொண்டுவந்தீர்... பாவமாகிய மலைகளால் சூழப்பட்ட நான் உமது மகிமையைக் கண்டேன்” என்று மனிதன் தேவனிடம் கூறுகிறான். அவனது பாவத்தன்மையை அவன் அறிந்திருந்தபொழுதும் இன்னமும் நம்பிக்கையுள்ளது. “மிகவும் ஆழமான கிணறுகளிலிருந்து நட்சத்திரங்களைக் காணலாம். ஆழம் அதிகரிக்க, உமது நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிவிடும்” என்று அந்த மனிதன் தொடர்ந்து கூறுகிறான். “எனது இருள் சூழ்ந்த நிலையில்…

இருளை ஊடுருவி

நான் கல்லூரி மாணவனாக இருந்தபொழுது அந்த நிகழ்ச்சியை முதன்முதலாகக் கண்டேன். பனிபெய்யும் இரவு, நகரத்திலுள்ள விளக்குகளின் ஒளியை விட்டு வெகுதூரத்தில் வைக்கோல் ஏற்றிச் செல்லும் வாகனத்தின் மேல், மகிழ்ச்சியோடு சத்தம் போட்டு உரையாடிக் கொண்டு சென்ற நண்பர்களோடு நான் பயணம் செய்தபொழுது, அடிவானத்தில் பலவண்ண ஒளி பளிச்சிட வானமே ஒளிமயமாக இருந்தது. நான் மெய்மறந்து போனேன், அந்த இரவுமுதல் அரோரா போரியாலிஸ் அல்லது வடதிசை ஒளி என்ற வானில் தோன்றும் அரிதான ஒளி விளைவு நிகழ்ச்சியில் கவரப்பட்டேன். பொதுவாக அப்படிப்பட்ட நிகழ்ச்சி நான் வசிக்கும்…

அதைக் கொடுத்து விடுங்கள்

பலவிதமான தேவையிலுள்ள ஏழைமக்களுக்கு உதவிசெய்யும் அநேக தொண்டு நிறுவனங்கள், தங்களது தேவைக்கும் அதிகமாக வைத்திருப்பவர்களிடமிருந்து அவர்களுக்கு தேவையற்ற துணிமணிகள், வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சாமான்கள் போன்ற நன்கொடைகளையே சார்ந்துள்ளார்கள். நமக்குப் பயன்படாத பொருட்களை பிறருடைய பயன்பாட்டுக்கு கொடுத்துவிடுவது நல்லது. ஆனால் நாம் அனுதினமும் பயன்படுத்தும் விலையுயர்ந்த பயனுள்ள பொருட்களை கொடுக்க பொதுவாக மனதில்லாமல் இருப்போம். பவுல் சிறைச்சாலையிலிருந்த பொழுது நம்பக் கூடிய சிநேகிதர்களின் ஊக்கமும், உறவும் தேவைப்பட்டது. ஆனாலும் அவருக்கு மிக நெருங்கிய இரு சிநேகிதர்களை பிலிப்பு பட்டணத்திலுள்ள விசுவாசிகளை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவி செய்ய…

தரித்திரரை நினைத்துக் கொள்ளுங்கள்

1780ஆம் வருடத்தில் இராபர்ட் ரேய்கஸ் லண்டன் மாநகரைச் சுற்றியிருந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த படிப்பறிவற்ற ஏழை பிள்ளைகளைக் குறித்து மனபாரமடைந்தார். அந்தப் பிள்ளைகளுக்கு எந்த விதத்திலும் யாரும் உதவி செய்யவில்லை என்பதைக் கவனித்து அவர்களது வாழ்க்கையை மாற்றி அமைக்க ஏதாவது செய்ய வேண்டுமென்று முயற்சி செய்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பிள்ளைகளுக்கு பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்தும்படி சில பெண்களை ஏற்படுத்தினார். வேதாகமத்தைப் பாடப்புத்தகமாக பயன்படுத்தி அந்த ஆசிரியர்கள் அந்த ஏழைக்குழந்தைகளுக்கு வாசிக்கக் கற்றுக் கொடுத்து வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஞானத்தை அவர்களுக்குப் போதித்தார்கள். விரைவில் 100 குழந்தைகள்…