எழுதின படியே
எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், மரச்சாமான்கள் போன்றவற்றின் பல்வேறு பாகங்களை ஒன்றாக இணைப்பதில் எனக்கும் என் மகனுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. எனது மகன் ஸ்டீவ் எந்திர நுணுக்கங்கள் மீது அதிக நாட்டம் உடையவனாக இருந்ததால், கொடுக்கப்பட்ட செயல் விளக்க முறைகளை தள்ளிவிட்டு அவனாகவே செயல்படுவான். “பொருட்களை இணைக்க ஆரம்பிக்கும் முன்பு இதை வாசியுங்கள்”. என்ற ஆலோசனைக் குறிப்பை வாசிப்பதற்கு அதிக நேரம் செலவழித்து என் கவனம் முழுவதையும் அதில் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது, ஸ்டீவ் அவ்வேலையை பாதிக்கு மேலாக செய்து முடித்திருப்பான்.
சில சமயங்களில் ஸ்டீவைப்…
குமாரனைப் பிரதிபலித்தல்
வட அட்சரேகையில் மலைகளால் சூழப்பட்ட இடமான நார்வேயிலுள்ள ருஷ்ஷீகானில், ஓர் ஆண்டில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இயற்கையான சூரிய ஒளி கிடைக்காது. நகரத்திற்கு ஒளிதர அந்த நகர மக்கள், மலைகளின் மேல் பெரிய கண்ணாடிகளை நிறுத்தி, சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்து, அந்நகர மையத்தில் ஒளி விழச் செய்தார்கள். அந்த மிகப்பெரிய கண்ணாடிகள், சூரியன் உதிப்பதிலிருந்து அஸ்தமிக்கும் வரை சுழன்று கொண்டே இருப்பதால், அந் நகரத்திற்கு சூரிய ஒளி தொடர்ந்து கிடைத்தது.
அந்தக் காட்சியைப் போலவே கிறிஸ்தவ வாழ்க்கையும் இருக்க வேண்டுமென்று…
அவருடைய கரங்களுக்குள் பாதுகாவலுடன் இருத்தல்
எனது மகளுக்கு அறுவை சிகிச்சை முடிந்தபின், அவள் மீண்டும் சுய நினைவு அடைவதற்காக வைக்கப்பட்டிருந்த அறையில் அவளோடு கூட அமர்ந்திருந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் கண்களை மெதுவாகத் திறந்த பொழுது, அவளது உடல் நலம் இல்லாததை உணர்ந்து அழ ஆரம்பித்தாள். அவளுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக, அவளது கரத்தை மெதுவாக தட்டிக்கொடுத்தேன். ஆனால் அவள் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள். பின்பு ஒரு செவிலியரின் உதவியுடன் அவளை படுக்கையிலிருந்து மெதுவாக என் மடிக்கு மாற்றினேன். நாளடைவில் அவள் முழுமையாக சுகம் பெற்றுவிடுவாள் என்று அவளுக்கு நினைப்பூட்டினேன்.…
பகிர்ந்து கொள்ளப்பட்ட துன்பங்கள்
ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாடுகளில் முதலாம் உலகப் போரில் இணைந்து போராடிய, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாட்டின் தரைப்படை வீரர்களை கனப்படுத்தும் வகையில் 2015 ஏப்ரல் 25ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு100வது ஆண்டின் நினைவு விழா ஆரம்பமாகும். அந்த இரு நாடுகளும் தனிப்பட்டு போரை சந்திக்க வேண்டிய நிலைமையை இவ்விரு நாட்டின் வீரர்கள் இணைந்து செயல்பட்டதினால் தவிர்க்கப்பட்டதை அந்த நாள் நினைப்பூட்டுகிறது. இரு நாட்டின் வீரர்களும் போரினால் வரும் ஆபத்துக்களை இணைந்தே சந்தித்தனர்.
வாழ்க்கையின் துன்பங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற…
நாம் யார்?
1940ன் ஆரம்பத்தில் ஜெர்மனியை ஆண்ட சமநெறிக் கொள்கையினரால் சிறைக்கைதிகள் கொடுமையாக நடத்தப்பட்ட, வன்சிறைக்காப்பிடங்களில் (Concentration camp) கோரிடென் பூமும் அவளது சகோதரி பெட்சியும் அனுபவித்த பயங்கரமான கொடுமைகளை அவளது சுயசரிதையில் விளக்கியுள்ளாள். சிறையில், ஒருமுறை ஓர் ஆய்வின் போது அவர்களது உடைகளை களைந்து போடும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். கோரி, அவளது பெண்மை பாதிக்கப்பட்டவளாகவும், கைவிடப்பட்டவளாகவும் உணர்ந்த நிலையில் வரிசையில் நின்றாள். இயேசு சிலுவையில் நிர்வாணக் கோலத்தில் தொங்கினதை திடீரென்று நினைவு கூர்ந்தாள். அந்த எண்ணத்தினால் ஆச்சரியமான ஆராதிக்கும் உணர்வைப் பெற்ற அவள், “பெட்சி, அவர்கள் அவரது…
சக்திவாய்ந்த பின்லாந்து வீரர்கள்
தீமை ஏற்பட இருக்கிறது என்பதற்கான முன் அறிகுறி ஏதும் இல்லாமல் அந்த சத்தம் தொடர்ச்சியான மெல்லிய ஒலியாகக் கேட்டது. பின்பு ஆபத்து வருவதற்கு அறிகுறியாக பூமியே அதிரத்தக்கதாக தட, தட வென்ற இரைச்சலாக மாறியது. விரைவில் நூற்றுக்கணக்கான இராணுவ கனரக வண்டிகளும், ஆயிரக்கணக்கான காலாட் படை வீரர்களும், மிகக்குறைந்த எண்ணிக்கை உடைய பின்லாந்து வீரர்கள் முன் திரள் கூட்டமாக கூடி வந்தார்கள். அவர்களது கொலை வெறியைக் கருத்தில் கொண்ட, ஒரு பெயர் அறிவிக்கப்படாத பின்லாந்து வீரர் கருத்தாழமிக்க சில அறிவுரைகளைக் கூறினான். எதிராளிகளின் எண்ணிக்கையைக்…
மிக அதிகமான நாற்றம்
2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பென்சில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க்கில் இருக்கும், பிப்ஸ்தாவரஇயல் பூங்காவின் கண்ணாடி அறையைச் சுற்றி மிகப் பெரிய கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் அனைவரும் அங்கு பூத்திருந்த சவப்பூ என்ற வெப்ப மண்டலச் செடியின் பூவைப் பார்க்க வந்திருந்தார்கள். அந்த தாவரம் இந்தோனேசியாவிற்கு உரியது. அத்தோடு கூட அது அநேக ஆண்டுகளுக்குப் பின் ஒரே ஒரு முறைதான் பூக்கும். ஆகவே அக்காட்சி பார்க்க வேண்டியதொன்றாகும். முள்ளுகளையுடைய அழகான சிகப்பு நிறமுடைய அந்தப் பெரிய பூ மலர்ந்தவுடன், கெட்டுப்போன மாமிச நாற்றமெடுக்கும். அந்த அழுகிப்போன மாமிச…
வாத்துக்களையும் நட்பிணக்கமற்ற மனிதர்களையும் பற்றி
நாங்கள் ஒரு புதிய வீட்டிற்கு குடியேறி வந்தோம். எங்களது வீட்டின் அருகில் கூடுகட்டி வாழ்ந்த வாத்துக்களின் அழகை மிகவும் ரசித்தேன். ஒன்றை ஒன்று அவைகள் கவனித்துக் கொள்ளும் விதமும், தண்ணீரில் சரியான நேர்கோட்டில் நீந்திச் செல்லும் முறையும், ஆகாயத்தில் மிக அழகாக ஏ வடிவத்தில் பறந்து செல்லும் முறையையும் நான் மிகவும் ரசித்தேன். பெரிய வாத்துக்கள் அவைகளின் குஞ்சுகளைப் பேணி வளர்க்கும் முறையைக் கவனிப்பதும் மிக மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது.
பின்பு கோடை காலம் வந்தது. சிறகுள்ள எனது சிநேகிதர்களைப் பற்றி, பிடித்தமில்லாத…
நேரத்தின் துணுக்குகள்
நாங்கள் வசிக்கும் நகரத்திற்கு எனது சிநேகிதன் ஒருவன் வருவதாக இருந்தது. நகரில் அவன் செய்ய வேண்டிய வேலைகள் மிக அதிகம் இருந்தது. முக்கியமான கூட்டங்களில் அவன் பங்கெடுத்தபின், எப்படியோ நேரத்தை கண்டுபிடித்து, எனது குடும்பத்தோடு அரை மணி நேரம் செலவழிக்கவும், எங்களோடு கூட இரவு உணவு உட்கொள்ளவும் வந்தான். அவனது வரவு எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் எனது சாப்பாட்டுத்தட்டைப் பார்த்து “அவனுடைய நேரத்தில் சில துணுக்குகளைத்தானே பெற்றோம்” என்று எண்ணினேன்.
பின்பு எத்தனை நேரங்களில் தேவன் எனது நேரத்தின் துணுக்குகளை மட்டும் பெறுகிறார் என்று…