1940ன் ஆரம்பத்தில் ஜெர்மனியை ஆண்ட சமநெறிக் கொள்கையினரால் சிறைக்கைதிகள் கொடுமையாக நடத்தப்பட்ட, வன்சிறைக்காப்பிடங்களில் (Concentration camp) கோரிடென் பூமும் அவளது சகோதரி பெட்சியும் அனுபவித்த பயங்கரமான கொடுமைகளை அவளது சுயசரிதையில் விளக்கியுள்ளாள். சிறையில், ஒருமுறை ஓர் ஆய்வின் போது அவர்களது உடைகளை களைந்து போடும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். கோரி, அவளது பெண்மை பாதிக்கப்பட்டவளாகவும், கைவிடப்பட்டவளாகவும் உணர்ந்த நிலையில் வரிசையில் நின்றாள். இயேசு சிலுவையில் நிர்வாணக் கோலத்தில் தொங்கினதை திடீரென்று நினைவு கூர்ந்தாள். அந்த எண்ணத்தினால் ஆச்சரியமான ஆராதிக்கும் உணர்வைப் பெற்ற அவள், “பெட்சி, அவர்கள் அவரது (இயேசு) உடைகளையும் களைந்தார்கள்” என்று அவளது சகோதரி பெட்சியிடம் மெதுவாகக் கூறினாள். உடனே பெட்சி ஆழ்ந்த பெருமூச்சுடன், “ஓ, கோரி… அதற்காக நான் அவருக்கு ஒருக்காலும் நன்றி கூறவில்லையே” என்று கூறினாள்.

கஷ்டங்களும், துன்பங்களும், துயரங்களும் நிறைந்த உலகில் நன்றியில்லாத உணர்வுடன் வாழ்வது நமக்கு அரிதானது. நமக்கு அருளப்பட்ட ஒரு நாளில் குறை கூறுவதற்கு பல காரணங்கள் நமக்கு இருக்கலாம். ஆயினும் தேவனுடைய ஜனங்கள் மகிழ்ந்து, களிகூர்ந்து தேவனுக்கு நன்றி கூற சங்கீதம் 100 ஆலோசனை கூறுகிறது. “நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்” (சங்கீதம் 100:3) நாம் யாரென்று நாம் நினைவு கூரும் பொழுது, நன்றியால் நமது உள்ளம் நிறைகிறது. மிகவும் மோசமான சமயங்களில் கூட நமக்கான கிறிஸ்துவின் அன்பையும், தியாகத்தையும் நினைவு கூரலாம்.

உங்களது நன்றியுள்ள இருதயத்தை இந்த மனிதப்பண்பற்ற உலகம் எடுத்துப்போட அனுமதிக்காதீர்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்பதை நினைவு கூருங்கள். அவரது சிலுவை மரணம், அவரது நற்பண்புகளையும், இரக்கத்தையம் நமக்கு வெளிப்படுத்துகிறது.