வகை  |  odb

ஒரு பாரஊர்தி (truck) ஓட்டுநரின் கரங்கள்

என்னுடைய தகப்பனாருக்கு கணைய புற்றுநோய் வந்துவிட்டது என்ற செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சி தந்தது. ஏற்கனவே அவர் புராஸ்டேட் புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவர். என்னுடைய அம்மா நீண்ட சுகவீனத்தால் படுக்கையிலிருந்ததால் அவர்களை கவனித்துக் கொண்டிருந்ததும்  என்னுடைய அப்பாதான்.  இப்பொழுது இருவரையுமே பார்த்துக் கொள்ளவேண்டும் என்றால் கடினமான காரியம்தான்.

நான் அவர்களைப் பார்க்க ஊருக்கு சென்றபோது அவர்கள் ஆலயத்திற்கு ஒரு ஞாயிறு சென்றேன். அப்போது ஒரு மனிதன் என்னை அணுகி “நான் உதவட்டுமா” என்று கேட்டார். இரு நாட்களுக்குப் பிறகு அவர் எங்கள் வீட்டிற்கு ஒரு பட்டியலோடே வந்தார். கீமோ தெரபி துவங்கும்போது  உங்களுக்கு உணவு வேண்டியதாயிருக்கும் என்றார். “நான் அதை அட்டவணை போட்டு ஏற்பாடு செய்கிறேன், உங்கள் தோட்டத்தில் புல் வெட்ட வேண்டும் அல்லவா? அதையும்  நான் செய்யக்கூடும், உங்கள் வீட்டு குப்பையை அகற்றும் நாள் வாரத்தில் எது?” இவ்வாறாக கேட்டுக்கொண்டே போனார். அவர் ஒரு ஓய்வெடுத்த டிரக் ஓட்டுனர். எங்களுக்கோ தேவதூதர் மாதிரி மாறினார். பலருக்கு  இவ்விதமாக உதவி செய்திருக்கிறார் என்று நாங்கள் பிறகு கேள்விப் பட்டோம்.

இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தவர்கள் எல்லாருமே மற்றவர்களுக்கு உதவி செய்ய அழைக்கப்படுகிறார்கள் (லூக்கா 19:25-37) என்றாலும் சிலருக்கு இவ்வாறு செய்ய சிறப்பான திறமை உண்டு. அப்போஸ்தலர் பவுல் இந்த வரத்தை “இரக்கஞ்செய்கிற வரம்” என்கிறார்..

இந்த வரம் உள்ள மக்கள் தேவையை உடனடியாக கண்டுகொண்டு சோர்வடையாமல் நடைமுறை உதவி செய்வார்கள். பரிசுத்த ஆவியின் மூலமாக உந்தப்பட்டு அவர்கள் கிறிஸ்துவினுடைய கரங்களை போல செயல்பட்டு நம்முடைய காயங்களை தொடுவார்கள் (வச. 4-5)..

சில நாட்களுக்கு முன்பாக என்னுடைய அப்பா கீமோதெரபிக்கு போக வேண்டியிருந்தது. எங்களுடைய “தேவதூதனே” அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த இரவு வீட்டில் குளிர்சாதனப்பெட்டியில் உணவு அதிகமாக அடிக்கிவைக்கப்பட்டிருந்தது. தேவனின் இரக்கத்தை  ஒரு டிரக் ஓட்டுனர் கரங்களின் மூலமாக நாங்கள் கண்டுகொண்டோம்.

இது யாருக்காக?

அந்த காட்சி என்னை சத்தமாகவே சிரிக்க செய்தது. சாலையின் இருபுறமும் கொடிகளை ஆட்டிக்கொண்டு, வண்ணப்பிரதிகளை எறிந்துகொண்டு, கட்சித் தலைவர் வருகையை எதிர்நோக்கி மக்கள் கூட்டம் பெருகிற்று.  அப்பொழுது சாலையின் நடுவே ஒரு தெரு நாய்க்குட்டி மெதுவாக நடந்து போனது. அங்கு எழும்பின ஆரவாரம் எல்லாம் தனக்கே என்று புன்னகை செய்ததுபோல எனக்கு பட்டது. 

நாய்க்குட்டி இவ்வாறாக நடந்துகொண்டது ஒரு விதத்தில் அழகாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுடைய புகழ்ச்சியை நாம் கடத்திக் கொள்வது நம்மையே விழச்செய்யும். தாவீது இதை அறிந்திருந்தான்; தன்னுடைய பெலசாலிகள் தம்முயிரை துச்சமென்றெண்ணி கொண்டுவந்த தண்ணீரை அவன் குடிக்க மறுத்தான். பெத்லெகெமிலிருந்த அந்த கிணற்றிலிருந்து யாராவது குடிக்க நீர் கொண்டு வந்தால் நலமாயிருக்கும் என்று அவன் ஏறக்குறைய தனக்குள் சொல்லிக் கொண்டதை  அவனுடைய மூன்று பலசாலிகள் உண்மையாக எடுத்துக்கொண்டு எதிரிகளுடைய அணிகளைத் தாண்டி தண்ணீர் மொண்டு கொண்டுவந்தனர். அதைக் கண்டு உணர்ச்சிவசமான தாவீது அதை குடிக்க மறுத்தான். அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிவிட்டான். (2 சாமு. 23:16)

கனத்தையும் துதியையும் நாம் எவ்வாறு கையாளுகிறோம்  என்பது நம்மை குறித்து அதிகம் சொல்லும். ஆண்டவருக்கு மகிமை செலுத்தப்படும் போது குறுக்கிடாதே. அந்த அணிவகுப்பு நமக்கு அல்ல. நம்மை யாராவது கௌரவித்தால் அவர்களுக்கு நன்றி சொல்லி இயேசுவுக்கே மகிமை செலுத்துங்கள்  அந்த “தண்ணீர்” நமக்கல்ல. துதி செலுத்திய பின் அதை ஆண்டவருக்கு முன்பாக ஊற்றி விடுங்கள்.

நம்பிக்கையைத் தேர்ந்தேடுத்தல்

உலகில் எஸ் ஏ டி (SAD)  எனப்பட்ட ( காலா கால கோளாறு) மன அழுத்தத்தில் பாதிக்கப்படுகிற இலட்சக் கணக்கான மக்களில்   நானும் ஒருவள். இந்த மன அழுத்தம் குளிர் காலத்தில் சூரிய வெளிச்சம் மிக குறுகிய நேரம் இருக்கும் இடங்களில்  காணலாம். எல்லாவற்றையும் உறையவைக்கும் அந்த சாபத்திற்கு முடிவு உண்டோ என்று நான் அங்கலாய்க்கும்போது நீண்ட நாட்களும் வெப்பமான சீதோஷணமும் வருமா என்று நான் ஏங்குவதுண்டு.

மீதி இருக்கும் பனி ஊடே பூக்கள் துளைத்துக்கொண்டு வெளிவரும்போது --- அது வசந்த காலத்தின் அறிகுறி -  தேவன் நம்முடைய இருண்ட காலத்தை கூட மாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு நினைவுவரும்.. இவ்விதமான உறையும் குளிர் நாட்களைப் போல இஸ்ரவேலர் தேவனை விட்டு தங்கள் முகத்தை திருப்பியபோது தான், மீகா தீர்க்கதரிசி இவ்விதம் அறிக்கையிட்டார்: “மனுஷரில் செம்மையானவன் இல்லை”
(மீகா 7:2)

அந்த இரருண்ட நாட்கள் மிகவும் மோசமாக இருந்தாலும்  கூட, அந்த தீர்க்கதரிசி நம்பிக்கையை இழக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் தெரியாவிட்டாலும் கூட தேவன் கிரியை செய்துகொண்டுதான் இருக்கிறார் (வச. 7) என்று விசுவாசித்தார். 

நாமும் கூட முடிவில்லா குளிர்காலங்களில் வசந்த காலம் வெளிப்படாத நேரங்களில் அவ்விதமாக போராடுகிறோம். இன்னும் விரக்திக்குள் செல்வோமா அல்லது “என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்போமா?” (வச. 7)

தேவன் மேல் நாம் வைக்கும்  நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோம. 5:5) அலறுதலும், வருத்தமுமில்லாத வாசஸ்தலத்தை அவர் கொண்டுவருகிறார் (வெளி. 21:7). அது வரை நாம் அவரில் “ நீரே என் நம்பிக்கை” (சங்கீதம் 39:7) என்று இளைப்பாறலாம்.

கடற்கரையில் ஜெபங்கள்

எங்கள் இருபத்தைந்தாவது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாட நாங்கள்  பயணித்த போது, ​​நானும் எனது கணவரும் ஒரு கடற்கரையில் எங்கள் வேதாகமங்களைப் படித்திக்கொண்டிருந்தோம். சுற்றிலும் விற்பனையாளர்கள் கடந்து சென்று தாங்கள் விற்கும் பொருட்களின் விலைகளை கூவிக்கொண்டிருந்தனர். நாங்கள் ஒன்றும் வாங்கவில்லையென்றாலும் யாவருக்கும் நன்றி சொன்னோம். ஆனால் பெர்னாண்டோ என்னும் ஒரு விற்பனையாளர் என்னுடைய நிராகரிப்பை கண்டுகொள்ளாமல் சிரித்துக்கொண்டு எங்களுடைய நண்பர்களுக்காக நாங்கள் ஏதேனும் வாங்கத்தான்  வேண்டும் என்று வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டு அவன் புறப்படும்போது “கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக” என்றேன். 

அவர் திரும்பி என்னைப்பார்த்து “இயேசுவே என் வாழ்வை மாற்றினார்” என்றார். எங்களுடைய நாற்காலிகள் நடுவில் அவர் முழங்காலிட்டு “கர்த்தருடைய பிரசன்னத்தை நான் இங்கே உணருகிறேன்” என்று சொல்லி, ஆகாத மருந்து, குடி பழக்கங்களிலிருந்து ஆண்டவர் தம்மை  எப்படி 14 ஆண்டுகளுக்கு முன்னால் விடுவித்தார் என்று பகிர்ந்து கொண்டார்.

சங்கீதங்களில் இருந்து அவர் பாராமல் பாடல்கள் ஒப்புவித்தபோது என் கண்களில் கண்ணீர் மல்கியது. அவரோடு சேர்ந்து நாங்களும் கர்த்தருடைய  சமூகத்தை உணர்ந்து  அவரைத் துதித்தோம்.

சங்கீதம் 148 ஒரு துதிப்பாடல். அவருடைய கிரியைகள் எல்லாமே  கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது என்று சங்கீதக்காரன் ஊக்குவிக்கிறார்; “அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது (வச. 5) ..... அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.”(வச. 13).

ஆண்டவரை  நம்பி நம்  தேவைகளை அவருக்கு முன்பாக வைக்க அவர் நம்மை அழைத்தாலும், அவர் நம்முடைய நன்றியுள்ள துதிகளையும் விரும்புகிறார் - நாம்  கடற்கரையில் இருந்தாலும்கூட.

பலமும் தைரியமும்

ஒவ்வொரு இரவும் தன்னுடைய கண்களை மூடும்போது இருள் தன்னை சூழ்வதை காலேபு உணருவான்.  கோஸ்ட்டா ரிக்கா நாட்டில் இருக்கும் மரத்தினால் செய்யப்பட்ட அவனுடைய வீடு அவ்வப்போது உராய்வதினால், அந்த அறையின் நிசப்தம் கெடும். பிறகு பலகணிகளில் உள்ள வவ்வால்கள் ஆட்டம் பிடிக்கும். அவனுடைய அம்மா அவன் அறையில் ஒரு சிறிய விளக்கை வைத்திருந்தார்கள். ஆனாலும் அவன் இருட்டுக்கு பயப்படுவான். ஒருநாள் இரவில் அவன் அப்பா அவனுடைய படுக்கை கால்மாட்டில் ஒரு வேத வசனத்தை மாட்டி  வைத்தார். அது யோசுவா 1:9: “பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” அந்த வசனங்களை ஒவ்வொரு ராத்திரியும் படிப்பான் காலேபு. அவன் கல்லூரி சேர்கிறவரை அந்த வசனத்தை வைத்திருந்தான்.

யோசுவா முதலாம் அதிகாரத்தில், மோசே இறந்தபின் தலைமை யோசுவாவுக்கு மாறுவதை பற்றி படிக்கிறோம். “பலங்கொண்டு திடமனதாயிரு” என்ற கட்டளை திரும்பத் திரும்ப – அவர்கள் அதன் முக்கியத்தை உணரத்தக்கதாக - யோசுவாவுக்கும் இஸ்ரவேலருக்கும் கொடுக்கப்பட்டது (வச. 6,7,9). எதிர்காலம் நிலையற்றது போல் காணப்பட்டதால் இஸ்ரவேலர் கலங்கினார்கள். அப்பொழுது தேவன் அவர்களுக்கு உறுதி அளிக்கும் வகையாக “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்றார்..

பயப்படுவது இயற்கைதான் என்றாலும் நீடிய பயம் நம்முடைய சரீரத்தையும் ஆத்துமாவையும் பாதிக்கும்.  அந்த காலத்தில் ஆண்டவர் தம்முடைய ஊழியக்காரர்களை  ஊக்குவித்தது போலவே நாமும் அவருடைய வாக்குத்தத்தங்களை நம்பினால் பலங்கொண்டு திடமனதாயிருக்கலாம்.