எங்கள் இருபத்தைந்தாவது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாட நாங்கள்  பயணித்த போது, ​​நானும் எனது கணவரும் ஒரு கடற்கரையில் எங்கள் வேதாகமங்களைப் படித்திக்கொண்டிருந்தோம். சுற்றிலும் விற்பனையாளர்கள் கடந்து சென்று தாங்கள் விற்கும் பொருட்களின் விலைகளை கூவிக்கொண்டிருந்தனர். நாங்கள் ஒன்றும் வாங்கவில்லையென்றாலும் யாவருக்கும் நன்றி சொன்னோம். ஆனால் பெர்னாண்டோ என்னும் ஒரு விற்பனையாளர் என்னுடைய நிராகரிப்பை கண்டுகொள்ளாமல் சிரித்துக்கொண்டு எங்களுடைய நண்பர்களுக்காக நாங்கள் ஏதேனும் வாங்கத்தான்  வேண்டும் என்று வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டு அவன் புறப்படும்போது “கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக” என்றேன். 

அவர் திரும்பி என்னைப்பார்த்து “இயேசுவே என் வாழ்வை மாற்றினார்” என்றார். எங்களுடைய நாற்காலிகள் நடுவில் அவர் முழங்காலிட்டு “கர்த்தருடைய பிரசன்னத்தை நான் இங்கே உணருகிறேன்” என்று சொல்லி, ஆகாத மருந்து, குடி பழக்கங்களிலிருந்து ஆண்டவர் தம்மை  எப்படி 14 ஆண்டுகளுக்கு முன்னால் விடுவித்தார் என்று பகிர்ந்து கொண்டார்.

சங்கீதங்களில் இருந்து அவர் பாராமல் பாடல்கள் ஒப்புவித்தபோது என் கண்களில் கண்ணீர் மல்கியது. அவரோடு சேர்ந்து நாங்களும் கர்த்தருடைய  சமூகத்தை உணர்ந்து  அவரைத் துதித்தோம்.

சங்கீதம் 148 ஒரு துதிப்பாடல். அவருடைய கிரியைகள் எல்லாமே  கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது என்று சங்கீதக்காரன் ஊக்குவிக்கிறார்; “அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது (வச. 5) ….. அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.”(வச. 13).

ஆண்டவரை  நம்பி நம்  தேவைகளை அவருக்கு முன்பாக வைக்க அவர் நம்மை அழைத்தாலும், அவர் நம்முடைய நன்றியுள்ள துதிகளையும் விரும்புகிறார் – நாம்  கடற்கரையில் இருந்தாலும்கூட.