உலகில் எஸ் ஏ டி (SAD)  எனப்பட்ட ( காலா கால கோளாறு) மன அழுத்தத்தில் பாதிக்கப்படுகிற இலட்சக் கணக்கான மக்களில்   நானும் ஒருவள். இந்த மன அழுத்தம் குளிர் காலத்தில் சூரிய வெளிச்சம் மிக குறுகிய நேரம் இருக்கும் இடங்களில்  காணலாம். எல்லாவற்றையும் உறையவைக்கும் அந்த சாபத்திற்கு முடிவு உண்டோ என்று நான் அங்கலாய்க்கும்போது நீண்ட நாட்களும் வெப்பமான சீதோஷணமும் வருமா என்று நான் ஏங்குவதுண்டு.

மீதி இருக்கும் பனி ஊடே பூக்கள் துளைத்துக்கொண்டு வெளிவரும்போது — அது வசந்த காலத்தின் அறிகுறி –  தேவன் நம்முடைய இருண்ட காலத்தை கூட மாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு நினைவுவரும்.. இவ்விதமான உறையும் குளிர் நாட்களைப் போல இஸ்ரவேலர் தேவனை விட்டு தங்கள் முகத்தை திருப்பியபோது தான், மீகா தீர்க்கதரிசி இவ்விதம் அறிக்கையிட்டார்: “மனுஷரில் செம்மையானவன் இல்லை”
(மீகா 7:2)

அந்த இரருண்ட நாட்கள் மிகவும் மோசமாக இருந்தாலும்  கூட, அந்த தீர்க்கதரிசி நம்பிக்கையை இழக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் தெரியாவிட்டாலும் கூட தேவன் கிரியை செய்துகொண்டுதான் இருக்கிறார் (வச. 7) என்று விசுவாசித்தார். 

நாமும் கூட முடிவில்லா குளிர்காலங்களில் வசந்த காலம் வெளிப்படாத நேரங்களில் அவ்விதமாக போராடுகிறோம். இன்னும் விரக்திக்குள் செல்வோமா அல்லது “என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்போமா?” (வச. 7)

தேவன் மேல் நாம் வைக்கும்  நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோம. 5:5) அலறுதலும், வருத்தமுமில்லாத வாசஸ்தலத்தை அவர் கொண்டுவருகிறார் (வெளி. 21:7). அது வரை நாம் அவரில் “ நீரே என் நம்பிக்கை” (சங்கீதம் 39:7) என்று இளைப்பாறலாம்.