அந்த காட்சி என்னை சத்தமாகவே சிரிக்க செய்தது. சாலையின் இருபுறமும் கொடிகளை ஆட்டிக்கொண்டு, வண்ணப்பிரதிகளை எறிந்துகொண்டு, கட்சித் தலைவர் வருகையை எதிர்நோக்கி மக்கள் கூட்டம் பெருகிற்று.  அப்பொழுது சாலையின் நடுவே ஒரு தெரு நாய்க்குட்டி மெதுவாக நடந்து போனது. அங்கு எழும்பின ஆரவாரம் எல்லாம் தனக்கே என்று புன்னகை செய்ததுபோல எனக்கு பட்டது. 

நாய்க்குட்டி இவ்வாறாக நடந்துகொண்டது ஒரு விதத்தில் அழகாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுடைய புகழ்ச்சியை நாம் கடத்திக் கொள்வது நம்மையே விழச்செய்யும். தாவீது இதை அறிந்திருந்தான்; தன்னுடைய பெலசாலிகள் தம்முயிரை துச்சமென்றெண்ணி கொண்டுவந்த தண்ணீரை அவன் குடிக்க மறுத்தான். பெத்லெகெமிலிருந்த அந்த கிணற்றிலிருந்து யாராவது குடிக்க நீர் கொண்டு வந்தால் நலமாயிருக்கும் என்று அவன் ஏறக்குறைய தனக்குள் சொல்லிக் கொண்டதை  அவனுடைய மூன்று பலசாலிகள் உண்மையாக எடுத்துக்கொண்டு எதிரிகளுடைய அணிகளைத் தாண்டி தண்ணீர் மொண்டு கொண்டுவந்தனர். அதைக் கண்டு உணர்ச்சிவசமான தாவீது அதை குடிக்க மறுத்தான். அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிவிட்டான். (2 சாமு. 23:16)

கனத்தையும் துதியையும் நாம் எவ்வாறு கையாளுகிறோம்  என்பது நம்மை குறித்து அதிகம் சொல்லும். ஆண்டவருக்கு மகிமை செலுத்தப்படும் போது குறுக்கிடாதே. அந்த அணிவகுப்பு நமக்கு அல்ல. நம்மை யாராவது கௌரவித்தால் அவர்களுக்கு நன்றி சொல்லி இயேசுவுக்கே மகிமை செலுத்துங்கள்  அந்த “தண்ணீர்” நமக்கல்ல. துதி செலுத்திய பின் அதை ஆண்டவருக்கு முன்பாக ஊற்றி விடுங்கள்.