என்னுடைய தகப்பனாருக்கு கணைய புற்றுநோய் வந்துவிட்டது என்ற செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சி தந்தது. ஏற்கனவே அவர் புராஸ்டேட் புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவர். என்னுடைய அம்மா நீண்ட சுகவீனத்தால் படுக்கையிலிருந்ததால் அவர்களை கவனித்துக் கொண்டிருந்ததும்  என்னுடைய அப்பாதான்.  இப்பொழுது இருவரையுமே பார்த்துக் கொள்ளவேண்டும் என்றால் கடினமான காரியம்தான்.

நான் அவர்களைப் பார்க்க ஊருக்கு சென்றபோது அவர்கள் ஆலயத்திற்கு ஒரு ஞாயிறு சென்றேன். அப்போது ஒரு மனிதன் என்னை அணுகி “நான் உதவட்டுமா” என்று கேட்டார். இரு நாட்களுக்குப் பிறகு அவர் எங்கள் வீட்டிற்கு ஒரு பட்டியலோடே வந்தார். கீமோ தெரபி துவங்கும்போது  உங்களுக்கு உணவு வேண்டியதாயிருக்கும் என்றார். “நான் அதை அட்டவணை போட்டு ஏற்பாடு செய்கிறேன், உங்கள் தோட்டத்தில் புல் வெட்ட வேண்டும் அல்லவா? அதையும்  நான் செய்யக்கூடும், உங்கள் வீட்டு குப்பையை அகற்றும் நாள் வாரத்தில் எது?” இவ்வாறாக கேட்டுக்கொண்டே போனார். அவர் ஒரு ஓய்வெடுத்த டிரக் ஓட்டுனர். எங்களுக்கோ தேவதூதர் மாதிரி மாறினார். பலருக்கு  இவ்விதமாக உதவி செய்திருக்கிறார் என்று நாங்கள் பிறகு கேள்விப் பட்டோம்.

இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தவர்கள் எல்லாருமே மற்றவர்களுக்கு உதவி செய்ய அழைக்கப்படுகிறார்கள் (லூக்கா 19:25-37) என்றாலும் சிலருக்கு இவ்வாறு செய்ய சிறப்பான திறமை உண்டு. அப்போஸ்தலர் பவுல் இந்த வரத்தை “இரக்கஞ்செய்கிற வரம்” என்கிறார்..

இந்த வரம் உள்ள மக்கள் தேவையை உடனடியாக கண்டுகொண்டு சோர்வடையாமல் நடைமுறை உதவி செய்வார்கள். பரிசுத்த ஆவியின் மூலமாக உந்தப்பட்டு அவர்கள் கிறிஸ்துவினுடைய கரங்களை போல செயல்பட்டு நம்முடைய காயங்களை தொடுவார்கள் (வச. 4-5)..

சில நாட்களுக்கு முன்பாக என்னுடைய அப்பா கீமோதெரபிக்கு போக வேண்டியிருந்தது. எங்களுடைய “தேவதூதனே” அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த இரவு வீட்டில் குளிர்சாதனப்பெட்டியில் உணவு அதிகமாக அடிக்கிவைக்கப்பட்டிருந்தது. தேவனின் இரக்கத்தை  ஒரு டிரக் ஓட்டுனர் கரங்களின் மூலமாக நாங்கள் கண்டுகொண்டோம்.