என்னுடைய புது மேற்பார்வையாளருடைய அறைக்குள் நான் நுழையும் போது சற்றே பயந்து தயக்கம் கொண்டேன். ஏனென்றால் பழைய மேற்பார்வையாளர் கடினமான குணம் உள்ளவர். அடிக்கடி அவருக்கு கீழ் வேலை செய்கிறவர்களை அழ வைத்தார். புதிதாக வந்தவர் எப்பேற்பட்டவரோ என்று யோசித்துக்கொண்டே அந்த அறையில் நுழைந்தேன். அவர் என்னை முகம் மலர்ந்து வரவேற்றபோது என்னுடைய பயங்கள் நீங்கியன; என்னுடைய அனுபவங்களை அவர் விசாரித்து கனிவாக பேசினார். அவர் உண்மையிலேயே கரிசனை கொண்டவர் என்று நான் அறிந்துகொண்டேன். இயேசுவின் மேல் விசுவாசம் கொண்ட  அவர் எனக்கு நண்பரும், ஊக்குவிப்பவரும், குருவுமாக ஆனார்.

அப்போஸ்தலர் பவுல் இவ்விதமாக “பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு” (தீத்து 1:1) ஆவிக்குரிய குரு. அவனுக்கு எழுதின நிருபத்தில் அவன் சபையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி “நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. (தீத்து 2:1),  “நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக”. (வ 7-8)  என்கிறார். அதனால் தீத்து அவருடைய “சகோதரனும்,கூட்டாளியும், உடன்வேலையாளுமாக (2 கொரி. 2:13; 8:23) கருதப்பட்டான்.

நம்மில் அநேகர்  – ஒரு ஆசிரியர், பயிற்சியாளர், தாத்தா, இளைஞர் தலைவர் அல்லது போதகர் – இவர்கள் மூலமாக அறிவு, ஞானம் ஊக்கம், தேவன் மேல் விசுவாசம் இவைகளில் வளர்ந்திருக்கிறோம்.  இயேசுவுடன் பயணிக்கும்போது நீங்கள்  கற்றுக்கொண்ட ஆவிக்குரிய படங்களால் யார் பயன் பெறலாம்.