எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சி.பி. ஹியாகட்டுரைகள்

முதன்மையானவைகள்

நாம் ஆகாய மார்க்கமாய் பயணிக்கும் பொழுது, விமானம் மேலெழும்பும்முன், விமான பணியாளர் பாதுகாப்பு விளக்கம் ஒன்று தருவார். அதில், விமான அறையினுள் அழுத்த குறைவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குவார். பயணிகள் தங்களுக்கு மேலுள்ள பகுதியிலிருந்து கீழே விழும் ஆக்ஸிஜன் கவசத்தை பிறருக்கு உதவுமுன் அணிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவர். ஏனெனில், பிறருக்கு உதவும்முன் உங்களை சரீரப்பிரகாரமாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

பவுல், தீமோத்தேயுவிற்கு எழுதும் போது, பிறருக்கு உதவவும், ஊழியம் செய்வதற்கும் முன்பாக, தன்னுடைய சொந்த ஆவிக்குறிய ஆரோக்கியத்தைக் காத்துகொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றார். ஒரு போதகராக தீமோத்தேயு என்னென்ன பொறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென நினைப்பூட்டுகிறார். கள்ளப் போதனைக்கு எதிர்த்து நிற்க வேண்டும் (1 தீமோ. 4:1-5). தவறான கொள்கைகைளை சீர்திருத்த வேண்டும் (வச. 6-8). கிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாய் இருப்பதற்கு தேவையானதென்னவெனில், உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு. இவைகளில் நிலைகொண்டிரு. (வச. 16). அவன் முதலாவது தனக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவை சரிபண்ணிக் கொண்டால்தான் மற்றவர்களுக்கு உபதேசிக்க முடியும்.

பவுல், தீமோத்தேயுவுக்குத் சொல்வது நமக்கும் பொருந்தும். ஒவ்வொரு நாளும் நாம் தேவனை அறியாத ஜனங்களைச் சந்திக்கின்றோம். தேவனுடைய வார்த்தை, ஜெபம் ஆகியவற்றிற்கு நேரத்தைக் கொடுப்பதிலும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் நம்மை வைத்துக் கொள்ளுவதன் மூலம் ஆவிக்குரிய ஆக்ஸிஜனை நிரப்பிக் கொள்ளலாம். இவ்வாறு நமக்கும் தேவனுக்குமுள்ள உறவை சரிபடுத்திக் கொண்டு ஆவியில் விழிப்பாய் இருந்து  கொண்டால்தான் மற்றவர்களுக்கு உதவ முடியும்.

எல்லோரையும் விட வலிமை மிக்கவர்

இக்குவாசு நீர்வீழ்ச்சி பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே உள்ள எல்லையில் உள்ளது. அது 2.7 கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்து காணப்படும்; இக்குவாசு ஆற்றில் 275 நீர்வீழ்ச்சிகள் கூடிய வியக்கத்தக்க அழகிய நீர் வீழ்ச்சியாகும். பிரேசில் பக்கம் விழும் நீர் வீழ்ச்சியின் அருகில் உள்ள சுவற்றில், “திரளான தண்ணீர்களின் இரைச்சலைப் பார்க்கிலும், சமுத்திரத்தின் வலிமையான அலைகளைப் பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமை உள்ளவர்” (சங். 93:4) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த வசனத்திற்கு கீழாக “நமது அனைத்து துன்பங்களையும் விட தேவன் மேலானவர்” என்ற வார்த்தைகள் காணப்பட்டன.

இராஜாக்கள் அரசாண்ட அந்தக் காலத்தில் தேவனே எல்லோரையும் ஆழக்கூடிய முதன்மையான உயர்சிறப்புடைய இராஜாவென்று சங்கீதம் 93யை எழுதியவர் அறிந்திருந்தார். “கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார். உமது சிங்காசனம் பூர்வ முதல் உறுதியானது; நீர் அனாதியாய் இருக்கிறீர்” (வச. 1,2) என்று எழுதினார். வெள்ளங்களோ, அலைகளோ எவ்வளவு உயரமாக எழும்பினாலும், தேவன் அவற்றைவிட பெரியவராக இருக்கிறார்.

நீர் வீழ்ச்சியின் பேரோசை உண்மையில் மிகக் கம்பீரமான ஓசையாக இருக்கும். ஆனால் அளவிற்கு மீறிய வேகத்தில் நீர் வீழ்ச்சியை நோக்கி வரும் நீரோட்டத்தில் இருப்பது மிக ஆபத்தானது. ஒருவேளை இன்று உங்களுடைய நிலைமை அதைப்போலவே ஆபத்தில் இருக்கலாம். சரீரப் பிரகாரமான பிரச்சனைகள், அல்லது பொருளாதாரரீதியில் ஏற்பட்ட நஷ்டங்கள் அல்லது உறவுகளில் ஏற்பட்ட முறிவுகள் போன்றவை மிகவும் பெரிதாக அச்சமூட்டுபவைகளாக இருப்பதினால், நீங்கள் நீர்வீழ்ச்சியின் மேலிருந்து கீழே விழும் அனுபவத்தை பெற்றுக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் ஒரு கிறிஸ்தவராக பாதுகாப்பு அருளக்கூடிய ஒருவர் உண்டு. “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்.” ஒருவர் உண்டு, அவரே நமது கர்த்தராவார் (எபே. 3:20). ஏனெனில் அவர் நமது அனைத்துத் துன்பங்களைவிட மேலானவர்.

நீங்கள் எதற்காக அறியப்பட்டவர்கள்?

சீனாவில் முற்காலத்தில் இருந்த ஜப்பானிய சிறைமுகாம் ஒன்றில், 1945ஆம் ஆண்டு மரித்த ஒருவரின் நினைவுக் கல் உள்ளது. “1902 ஆம் ஆண்டு தியான்ஜினில், ஸ்காட்டிஷ் பெற்றோருக்கு மகனாக எரிக் லிட்டல் (Eric Liddell) பிறந்தார். அவர் 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்று, புகழின் உச்சியை தொட்டார். அவர் சீனாவிற்கு திரும்பி, தியான்ஜினில் ஒரு ஆசிரியராக வேலை செய்தார். மனிதகுலத்தின் நலனுக்காக சிறந்த பங்களிப்பை செய்யுமாறு இளைஞர்களை ஊக்குவிப்பதிலேயே அவரது முழு வாழ்வையும் கழித்தார்” என்று அந்நினைவுகல்லில் எழுதப்பட்டிருந்தது.

எரிக் விளையாட்டுத் துறையில் செய்த சாதனையைத் தான் பலரும் பெரிதாக எண்ணுகிறார்கள். ஆயினும் அவர் பிறந்த நாட்டில், அவர் நேசித்த சீனாவில், தியான்ஜினின் இளைஞர்கள் மத்தியில் அவர் ஆற்றிய தொண்டையும், பங்களிப்பையும் கூட பலர் நினைவுகூருகின்றனர். விசுவாசத்தினால் அவர் வாழ்ந்தும், சேவை செய்தும் வந்தார்.

நாம் எதற்காக நினைவுகூரப்படுவோம்? நம்முடைய கல்வி சாதனைகளும், வேலையின் நிலையும், பொருளாதார வெற்றியும் பிறருடைய அங்கீகாரத்தை நமக்கு பெற்றுத் தரலாம். ஆனால் பலரது வாழ்வில் நாம் செய்த அமைதியான சில காரியங்கள்தான் நாம் சென்ற பிறகும் நம்மை பற்றி எடுத்துரைத்து வாழ்ந்து கொண்டிருக்கும். விசுவாசத்தின் அதிகாரம் என்று சொல்லப்படும் எபிரெயர் 11ல் மோசேயைக் குறித்து எழுதப்பட்டிருப்பதை நாம் காணலாம். எகிப்தியரின் பொக்கிஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களுடன் இணைந்து செயல்பட விரும்பி, அவர்களுடன் தம்மை இணைத்துக்கொண்டார் (வச. 26). விசுவாசத்தினால் தேவனுடைய மக்களுக்காக ஊழியம் செய்து அவர்களை வழிநடத்தினார்.

கிறிஸ்துமஸ் விளக்குகள்

சிங்கப்பூரின் சுற்றுலா பகுதியாகக் கருதப்படும் ஆர்சர்ட் ரோட் (ORCHARD ROAD) ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பல வாரங்கள் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதிசய உலகமாக மாறிவிடும். இந்த ஒளி அலங்காரமெல்லாம் வியாபாரத்திற்கு பெயர் போன அம்மாதத்தில், ஜனங்களைக் கவர்ந்து, அங்குள்ள கடைகளில் அவர்கள் பணத்தை செலவழிக்க வைப்பதற்கே அலங்கரிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த கேளிக்கைகளைக் கண்டுகளித்து, பாடற்குழுவினர் பாடும் கிறிஸ்துமஸ் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து, நடிகர்களின் நடிப்பை கண்டுகளித்து மகிழ அங்கு வருவார்கள்.

முதலாம் கிறிஸ்துமஸ் ஒளி அலங்காரம், மின்சார கம்பிகளால் அல்லது மின்னும் பொருட்கள் அல்லது நியான் (Neon) விளக்குகளால் உண்டாகவில்லை. மாறாக “கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது” (லூக். 2:9). எந்த சுற்றுலா பயணியும் இதைக் காணவில்லை, சாதாரண மந்தை மேய்ப்பவர்களே இக்காட்சியைக் கண்டனர். அதுமட்டுமன்றி அதைத் தொடர்ந்து, பரலோக தூதர் சேனை பாடிய “உன்னததத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும்,” என்கிற பாடலையும் கேட்டு மகிழ்ந்தனர் (வச. 14).

பின்பு அத்தேவ தூதர்கள் கூறியது உண்மைதானா என்று உறுதி செய்து கொள்ள அம்மேய்ப்பர்கள் பெத்லேகம் சென்றார்கள் (வச. 15). அவை அனைத்தும் உண்மை என்று அறிந்து கொண்டபொழுது, அவர்கள் கேட்டதையும், கண்டதையும் குறித்துப் பிறருக்குச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்” (வச. 17).

நம்மில் அநேகர் இந்த கிறிஸ்துமஸ் கதையை அநேகந்தரம் கேட்டதுண்டு. இந்த கிறிஸ்துமஸ் நன்நாளிலே, “உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவான் 8:12) என்கிற கிறிஸ்து ஏற்கனவே வந்துவிட்டார் என்கிற நற்செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாலாமே.

இருளில் பிரகாசித்தல்

அரசியல் கைதியாக இருந்த வக்லாவ் ஹேவல் 1989ல் செக்கஸ்லோவேக்கியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக உயர்த்தப்பட்டார். 2011ம் ஆண்டு பராகுவேயில் நடந்த அவரது அடக்க ஆராதனையில் பராகுவேயில் பிறந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் செயலர் மாடலின் ஆல்பிரைட், ஹேவல், “அந்தகாரத்தில் இருந்தவர்களுக்கு வெளிச்சத்தைப் பிரகாசிக்கப்பண்ணினார்” என்று விவரித்தார்.

செக்கஸ்லோவேக்கியாவில் (பின்னால் செக் குடியரசு) இருந்த அரசியல் சூழ்நிலையில் ஹேவல் எப்படியாக வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்தாரோ, அதுபோல கர்த்தராகிய இயேசு, இந்த உலகம் முழுவதற்கும் ஒளியைக் கொண்டுவந்தார். ஆதியிலே தேவன் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்தார்…

தவறான லாடம்

200 ஆண்டுகளுக்கு முன் நெப்போலியன் ரஷ்யப் போரில் தோற்றுப்போனதற்கு ரஷ்யக் கடுங்குளிரே காரணம் என்று கருதப்படுகிறது. ஆனால் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்னவெனில் போர் குதிரைகள் அனைத்தும் கோடை காலத்திற்கான லாடங்ளை அணிந்திருந்தது தான் காரணம். குளிர் காலம் வந்தபொழுது, போர் வீரர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஏற்றியுள்ள பாரமான வண்டிகளை பனி அடர்ந்த சாலைகளில் இழுத்துச்செல்லும்பொழுது, வழுக்கி விழுந்து குதிரைகள் மாண்டு போயின. இவ்வாறு தொடர்ந்து நெப்போலியனால் உணவு போன்ற அத்தியாவசியமான பொருட்களை 400,000 போர் வீரர்களைக்கொண்ட தன் வலிமைமிக்க படைக்கு…

கவலைகள் இல்லை

மிகவும் அமைதியாகச் சென்ற விமானப் பயணம் திடீரென அலைக்கழிக்கப்பட ஆரம்பித்தது. விமானத்திற்குள்ளாக பானங்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, விமான ஓட்டி, அனைத்து பயணிகளின் இருக்கை பெல்ட் சரியாக மாட்டப்பட்டுள்ளதா? என்று நிச்சயப்படுத்துமாறு கூறினார். சிறிது நேரத்தில் சமுத்திரத்தில் காற்றினால் அலைப்பட்டு அலைகிற கப்பலைப்போல விமானம் உருண்டு பிறழ ஆரம்பித்தது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கலவரமான அந்த நிலையைக் கையாளுவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருந்தபொழுது, ஒரு சிறுமி மட்டும் அமைதியாக அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். விமானம் தரை இறங்கினபின், அந்த சிறுமியால் எவ்வாறு…

எனக்கே உரிய இடம்

சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றில் தொழில் துறை வடிவமைப்பில் பட்டதாரியான ஒருவருக்கு மிகவும் சாதாரணப் பொருட்களைப் பயன்படுத்தி ஒரு பொதுவான பிரச்சனைக்கு ஒரு புதிய முறையில் பதில் கண்டுபிடிக்க, ஒரு பயிற்சி அரங்கத்தில் சவால் விடப்பட்டது. பொது இரயில்களிலும், பஸ்களிலும் பயணம் செய்யும் பொழுது கூட்டத்தின் நெருக்கடியில் நசுக்கப்படாமல் இருக்க ஒருவருக்கு உரிய இடத்தில் பிறருடைய தாக்கம் இல்லாமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு மேல் சட்டையை அவள் கண்டுபிடித்தாள். பொதுவாகப் பறவைகளும், பூனைகளும் தாவரங்களை தாக்காமல் இருக்க தாவரங்களிலுள்ள முட்கள் போல எளிதில் வளைந்து…

பிரியாவிடை வாழ்த்து

நம்முடைய குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு அல்லது நமக்கு மிகவும் பிடித்த பழக்கப்பட்ட இடத்திற்கு அல்லது நாம் செய்த வேலைக்கோ, பிழைப்புக்கோ பிரியாவிடை கொடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.

இயேசுவின் சீஷனாய் இருப்பதற்கான கிரையத்தைக் குறித்து அவரே லூக்கா 9: 57-62ல் விவரிக்கிறார். இயேசுவை பின்பற்ற விரும்பிய ஒருவன், அவரை நோக்கி “ஆண்டவரே உம்மைப் பின்பற்றுவேன், ஆனால் அதற்கு முன்பு நான் சென்று என் குடும்பத்திற்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றேன்” என்று கூறினான். அதற்கு இயேசு “கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும்…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தோழமையான இலட்சியம்

நாசியன்சஸின் கிரிகோரி மற்றும் சிசேரியாவின் பேசில் ஆகியோர் நான்காம் நூற்றாண்டில் பெரிதும் மதிக்கப்பட்ட திருச்சபை தலைவர்களாகவும், நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். தத்துவ பாட மாணவர்களாகத்தான் முதலில் இவர்கள் சந்தித்தனர், பின்னர் கிரிகோரி, அவர்கள் "ஈருடல் ஓருயிர்" போல ஆனதாகக் கூறினார்.

அவர்களின் வாழ்க்கைப் பாதைகள் மிகவும் ஒத்ததாக இருந்ததால், கிரிகோரிக்கும்  பேசிலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டிருக்கலாம். ஆனால், விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளாலான வாழ்க்கையைத் தங்களின் "ஒரே லட்சியமாக" கொண்டு, மேலும் இந்த லட்சியத்தில் தன்னை காட்டிலும் மற்றவர் சிறக்க வேண்டுமென்று "ஒருவரையொருவர் ஊக்குவித்த" காரணத்தால் இந்தச் சோதனையை மேற்கொண்டதாக கிரிகோரி விளக்கினார். இதன் விளைவாக, இருவரும் நம்பிக்கையில் வளர்ந்தனர் மற்றும் போட்டியின்றி உயர் மட்ட திருச்சபை தலைமைக்கு உயர்ந்தனர்.

எபிரேயர் புத்தகம், நாம் விசுவாசத்தில் வலுவாக இருக்க உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது (எபிரேயர் 2:1), நாம் "நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில்" அசைவில்லாமல் உறுதியாயிருக்கவும், "அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர்" (10:23-24) ஊக்குவிக்கவும் ஏவுகிறது. இந்த கட்டளை ஒரு சபைக்கென்று கொடுக்கப்பட்டிருந்தாலும் (வ. 25), அதை தங்கள் நட்புக்குப் பயன்படுத்தியதின் மூலம், கிரிகோரியும் பேசிலும் எவ்வாறு நண்பர்கள் ஒருவரையொருவர் வளர ஊக்குவிக்கலாம் என்றும், அவர்களுக்கு இடையே வளரக்கூடிய போட்டி மனப்பான்மை போன்ற "கசப்பான வேரை" (12:15) தவிர்க்கலாம் என்பதையும் காட்டினார்கள்.

விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளை நமது சொந்த நட்பின் லட்சியமாகக் கொண்டு, இந்த இலட்சியத்தில் நம்மைக் காட்டிலும் நமது நண்பர்கள் சிறக்கும்படி அவர்களை ஊக்குவித்தால் என்ன? இரண்டையும் செய்யப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவத் தயாராக இருக்கிறார்.

உணரக்கூடிய அன்பு

மருத்துவமனையில் படுக்கையிலிருந்த என் தோழி மார்கரெட் அருகில் அமர்ந்திருந்தபோது, ​​மற்ற நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் சலசலப்பு மற்றும் செயல்பாடுகளை நான் கவனித்தேன். நோய்வாய்ப்பட்ட தன் தாயின் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளம் பெண், "உங்களைத் தொடர்ச்சியாக வந்து விசாரிக்கும் இவர்கள் யார்?" என்று மார்கரெட்டைக் கேட்டாள். அவள், "இவர்கள் என் சபை குடும்பத்தின் உறுப்பினர்கள்!" என்று பதிலளித்தாள். அந்த இளம் பெண், தான் இதைப் போன்ற எதையும் முன்னர் கண்டதில்லை என்று குறிப்பிட்டார்; இந்த வருகையாளர்கள் "அன்பிற்கு உருவம் கொடுத்தது போல" இருப்பதாக அவள் உணர்ந்தாள். மார்கரெட் சிரித்துக்கொண்டே பதிலளித்தார், “அது எல்லாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவன்மேல் நாம் வைத்திருக்கும் அன்பினால் வருகிறது!”

மார்கரெட் தனது பதிலில், சீஷன் யோவானை எதிரொலித்தார். யோவான் தனது இறுதி நாட்களில் அன்பால் நிறைந்த மூன்று நிருபங்களை எழுதினார். அவர் தனது முதல் நிருபத்தில், “தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” (1 யோவான் 4:16) என்றார். அதாவது, "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று" ஏற்றுக்கொள்பவர்கள் (வ.15) "அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை" (வ.13) அறிந்திருக்கிறார்கள். நாம் எப்படி பிறரை அன்புடன் கவனித்துக் கொள்ள முடியும்? "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்" (வ.19).

தேவனின் அன்பெனும் ஈவின் காரணமாக, மார்கரெட்டைப் விசாரிப்பது எனக்கும் எங்கள் சபையில் உள்ள பிறர்க்கும் ஒரு கஷ்டமாகத் தோன்றவில்லை. மார்கரெட்டிடமிருந்து மட்டுமல்ல, அவளுடைய இரட்சகரான இயேசுவைப் பற்றிய அவளுடைய மென்மையான சாட்சியைக் கவனிப்பதன் மூலம் நான் கொடுத்ததை விட அதிகமாகப் பெற்றேன். இன்று உங்கள் மூலமாகத் தேவன்  எவ்வாறு பிறரை நேசிக்க இயலும்?

பிரமிப்பிற்கான ஜன்னல்

புகைப்படக் கலைஞர் ரான் முர்ரே குளிர் காலநிலையை விரும்புகிறார். "குளிர் என்றால் தெளிவான வானம், அது பிரமிப்பிற்கான ஒரு ஜன்னலைத் திறக்கும்!" என்று அவர் விளக்குகிறார்.

அலாஸ்கா பகுதியில் பூமியின் மிகவும் கண்கவர் ஒளி நிகழ்ச்சியான அரோரா பொரியாலிஸ் (வடக்கு விளக்குகள்)-ஐ பிரேத்யேகமாக படம்பிடிக்க வழிகாட்டும் சுற்றுலா சேவையை ரான் வழங்குகிறார். முர்ரே, இந்த  அனுபவத்தை "தெய்வீகமானது" என்று விளக்குகிறார். நீங்கள் எப்போதாவது வானத்தில் வெவ்வேறு ஒளிகளிலும் வெவ்வேறாகத் தோன்றும் முனைப்பான பல வண்ணங்களை வெளிப்படுத்துகிற இந்த மாறுபட்ட காட்சியைப்  பார்த்திருந்தால், அது ஏன் தெய்வீகமானது என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

ஆனால் இந்த ஒளிவிளக்கு தோற்றங்கள் வடக்கு பகுதியில் மட்டுமல்ல. அதே வகையான ஒளிவிளக்குகளான அரோரா ஆஸ்ட்ராலிஸ், ஏறக்குறைய பொரியாலிஸைப் போன்றவை, தெற்கில் அதே நேரத்தில் நிகழ்கிறது.

கிறிஸ்துமஸ் நிகழ்வைப் பற்றி சீஷன் யோவான் கூறுவதில், அவர் தொழுவத்தையும் மேய்ப்பர்களையும் தவிர்த்துவிட்டு, நேரடியாக "மனுஷருக்கு ஒளியாயிருந்(த)தது" (யோவான் 1:4) ஒருவரைக் குறிப்பிடுகிறார். யோவான் பின்னர் ஒரு பரலோக நகரத்தைப் பற்றி எழுதுகையில், அதன் ஒளியின் ஆதாரத்தை விவரிக்கிறார். இந்த "நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு" (வெளிப்படுத்துதல் 21:23). இந்த ஒளியின் ஆதாரம் இயேசு; யோவான் 1ல் குறிப்பிடப்பட்ட அதே ஆதாரம். மேலும் இந்த வருங்கால இருப்பிடத்தில் வசிப்பவர்களுக்கு, “இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார்” (22: 5).

அரோரா பொரியாலிஸ் மற்றும் ஆஸ்ட்ராலிஸை உருவாக்கிய உலகின் ஒளியானவரை வாழ்க்கை பிரதிபலிக்கும் போது, ​​உண்மையிலேயே ஒரு பிரமிப்பான வாசலைத் திறக்கிறோம்.