மிகவும் அமைதியாகச் சென்ற விமானப் பயணம் திடீரென அலைக்கழிக்கப்பட ஆரம்பித்தது. விமானத்திற்குள்ளாக பானங்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, விமான ஓட்டி, அனைத்து பயணிகளின் இருக்கை பெல்ட் சரியாக மாட்டப்பட்டுள்ளதா? என்று நிச்சயப்படுத்துமாறு கூறினார். சிறிது நேரத்தில் சமுத்திரத்தில் காற்றினால் அலைப்பட்டு அலைகிற கப்பலைப்போல விமானம் உருண்டு பிறழ ஆரம்பித்தது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கலவரமான அந்த நிலையைக் கையாளுவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருந்தபொழுது, ஒரு சிறுமி மட்டும் அமைதியாக அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். விமானம் தரை இறங்கினபின், அந்த சிறுமியால் எவ்வாறு அப்படி அமைதியாக இருக்க முடிந்தது என்று கேட்டபொழுது “எனது தகப்பனார்தான் விமான ஓட்டி, அவர் என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்” என்று மறுமொழி கூறினாள்.

இயேசுவின் சீஷர்கள் மீன் பிடிப்பதில் அனுபவமிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் சென்ற படகை மூழ்கடிக்கத்தக்கதாக கடலில் புயல் ஏற்பட்டபொழுது அவர்கள் மிகவும் பயந்தார்கள். இயேசு கூறினபடிதான் அவர்கள் சென்றார்கள். அப்படி இருந்தும் இப்படி ஏன் நடந்தது? (மாற். 4:35-38). இயேசு அவர்களோடு இருந்தார், ஆனால் படகின் அடித்தளத்தில் நித்திரையாக இருந்தார். நமது கர்த்தர் நமக்கு கற்பித்தபடியே நாம் நடந்தால், வாழ்க்கையில் புயலே ஏற்படாது என்பது உண்மையில்லை என்பதை கற்றுக்கொண்டார்கள். ஆயினும், அவர்களுடன் இயேசு இருந்ததால் புயல்கள் ஏற்பட்டாலும் கர்த்தர் நம்மை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறாரோ அங்கு செல்வதை அவை தடுத்து நிறுத்தாது என்பதையும் பின்பு கற்றுக்கொண்டார்கள் (5:1).

இன்று, நம்மை எதிர்நோக்கும் புயல் ஒரு துக்ககரமான விளைவை உண்டாக்கின விபத்தோ, வேலையை இழத்தலோ அல்லது வேறு ஏதோ சோதனையோ, எதுவாக இருப்பினும், எல்லாவற்றையும் இழக்கவில்லை என்ற நம்பிக்கையோடு நாம் இருக்கலாம். நமது வாழ்க்கையை நடத்திச் செல்லும் கர்த்தர் நமக்கு எதிராக வரும் புயல்களின் மத்தியில் நம்மை வெற்றிகரமாக நடத்திச்சென்று, நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்ப்பார்.