ஏப்ரல், 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஏப்ரல் 2016

தேவனுடைய பார்வையில் நேர்மையானதைச் செய்தல்

அநேக ஆங்கிலேய வீட்டுச் சொந்தக்காரர்கள் போலியான தரங்குறைந்த பொருட்களைக் கொண்டு வீடுகட்டுபவர்களை, “கவ்பாய் பில்டர்ஸ்” என்ற பதத்தால் அழைப்பார்கள். வீட்டுச் சொந்தக்காரர்கள் தாங்கள் அடைந்த மோசமான அனுபவங்களால் ஏற்பட்ட பயம், வருத்தம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அப்பெயரை அவர்களுக்கு வழங்கினர்.

ஏமாற்றும் தச்சர்கள், கொத்தனார்கள், கல்தச்சர்கள் போன்றோர் வேதாகம காலத்திலும் சந்தேகமின்றி வாழ்ந்திருப்பார்கள். யோவாஸ் அரசன், ஆலயத்தைப் பழுதுபார்த்து கட்டிய வரலாற்றில், அப்படிப்பட்டவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. பழுதுபார்க்கும் பணியைச் செய்தவர்களும், அவர்களைக் கண்காணித்தவர்களும் முற்றிலும் நேர்மையுடனும், உண்மையாகவும் செயல்பட்டார்கள் (2 இரா 12:15).

எனினும்…

கிறிஸ்துவின் சுகந்த வாசனை

நம்மில் உள்ள ஐந்து உணர்வுகளில் எந்த உணர்வு மிகவும் கூர்மையான ஞாபகசக்தியை நமக்கு உணர்த்துகிறது? என்னைப் பொறுத்தவரையில் மோப்பம் என்னும் உணர்வுதான் என்று நான் நிச்சயமாகக் கூறமுடியும். ஒரு வகையான சூரிய எண்ணையின் மணம் என்னை உடனே பிரெஞ்சுக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுவிடும். “கோழிக்கறி கூட்டு” என் சிறு பிராயத்தில் பாட்டி வீட்டிற்குச் சென்றதை நினைவூட்டும். “பைன்” பற்றிய ஓர் வார்த்தை “கிறிஸ்மஸிற்கும்” முகச்சவரம் செய்தபின் பயன்படுத்தும் ஒருவித வாசைன திரவியம் என் மகளின் பதின் வயதை ஞாபகத்திற்கு கொண்டு வரும்.

கொரிந்தியர் கிறிஸ்துவுக்கு…

அதிசயிக்கத்தக்க அன்பு

பழைய ஏற்பாட்டில் நடந்த இறுதிக்கட்ட வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்ச்சியாகிய இஸ்ரவேல் மக்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி மறுபடியுமாக எருசலேமில் வந்து குடியேறிய நிகழ்ச்சியை எஸ்றா, நெகேமியா புத்தகங்களில் வாசிக்கிறோம். தாவீதின் நகரம் மீண்டும் எபிரேயக் குடும்பங்களால் ஜனத்தொகை பெருகியது, தேவாலயம் கட்டப்பட்டது, சுவர்கள் பழுதுபார்க்கப்பட்டு கட்டப்பட்டது.

பின் மல்கியா தீர்க்கதரிசி மூலம் சில காரியங்களைத் தெரிந்து கொள்கிறோம். நெகேமியாவுடன் ஒரேகாலத்தில் வாழ்ந்த மல்கியா பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்ட பகுதிகளை மக்களுக்கு கொண்டுவருகிறார். அதில் முதலாவதாக இஸ்ரவேல் மக்களுக்குக் கூறியது என்னவென்றால் “நான் உங்களை சிநேகித்தேன்…

தொடுவானத்தில் புயல்

அலாஸ்காவில் உள்ள கோடியாக்கில் எங்கள் மகன் ஜோஷ், சால்மன் மீன்களைப் பிடிக்கும் தொழில் செய்யும் ஓர் மீனவ வணிகர்; சில காலத்திற்கு முன்பு எங்கள் மகன் எனக்கு ஓர் புகைப்படத்தை அனுப்பியிருந்தான். அதில் அவன் படகிற்கு சில நூறு அடிகளுக்கு முன்னால் ஓர் சிறிய படகு ஓர் குறுகிய கணவாயின் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தொடுவானத்தில் கேடுகளை விளைவிக்கக் கூடிய புயல் மேகங்கள் சூழ்ந்து கொண்டது. ஆனால், தேவனுடைய தெய்வீகத் தன்மையையும், கரிசனையையும் வெளிப்படுத்துவதற்கு அடையாளமாக கணவாயின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கமாக அந்த…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இதை ஏன் செய்ய வேண்டும்?

எனது ஆறாம் வகுப்பு பேரன் மோகனுக்கு சில கடினமான கணக்கு வீட்டுப்பாடங்களில் நான் உதவி செய்து கொண்டிருந்தபோது, பொறியியலாளராக வேண்டும் என்ற தனது கனவை என்னிடம் கூறினான். அவனது பாடத்தில் உள்ள அச்சு ரேகைகளை உபயோகிக்கக் கற்றுக்கொண்ட பின்னர் அவன், "நான் எப்போது இந்த பொருட்களைப் பயன்படுத்தப் போகிறேன்?" என்றான்.

என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை, "சரி, மோகன் நீ ஒரு பொறியியலாளராக மாறினால், நீ பயன்படுத்தப் போகும் பொருட்கள் இவைதான்" என்றேன். கணிதத்திற்கும் அவன் எதிர்பார்க்கும் எதிர்காலத்திற்கும் உள்ள தொடர்பை அவன் உணரவில்லை.

சில சமயங்களில் நாம் வேதத்தை அப்படித்தான் பார்க்கிறோம். நாம் பிரசங்கங்களைக் கேட்கும்போதும், வேதத்தின் சில பகுதிகளைப் படிக்கும்போதும், “இதெல்லாம் எனக்குத் தேவையா?” என்று நாம் நினைக்கலாம். சங்கீதக்காரன் தாவீதிடம் சில பதில்கள் உண்டு. வேதாகமத்தில் காணப்படும் தேவனின் சத்தியங்கள் "ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதும்", "பேதையை ஞானியாக்குகிறதும்" மற்றும் "இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதும்" (சங்கீதம் 19:7-8) போன்ற ஆற்றலுள்ளவை என்றார். சங்கீதம் 19ல் குறிப்பிடப்பட்டுள்ள வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களில் (மேலும் வேதாகமத்தின் அனைத்து பகுதிகளிலும்) காணப்படும் வேதத்தின் ஞானம், நம்மை ஆவியானவரின் வழிநடத்துதலை அனுதினமும் நம்பியிருக்க நமக்கு உதவுகிறது (நீதிமொழிகள் 2:6).

மேலும் வேதவசனங்கள் இல்லாவிடில் அவரை அனுபவிக்கவும், அவருடைய அன்பையும் வழிகளையும் நன்றாக அறிந்துகொள்ளவும் தேவன் நமக்கு அளித்திருக்கும் இன்றியமையாத வழியை நாம் இழந்துவிடுவோம். வேதத்தை ஏன் படிக்க வேண்டும்? ஏனென்றால், "கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது." (சங்கீதம் 19:8).

ஓய்வெடுக்க அனுமதி

சில கடற்கரை பாறைகளின் மேல் அமர்ந்தோம், நானும் என் நண்பன் சூசியும், பொங்கும் நுரைகளின் வழியே, கடல் நீர் சுருளையாகப் பொங்குவதைப் பார்த்தோம். பாறைகளில் ஒன்றன் பின் ஒன்றாக மோதும் அலைகளைப் பார்த்து சூசி, “எனக்குக் கடல் பிடிக்கும். அது ஓடிக்கொண்டே இருப்பதால், நான் நின்று பார்க்கலாம்" என்றார்.

நம் வேலையை இடைநிறுத்தி ஓய்வெடுக்க "அனுமதி" தேவை என்று நம்மில் சிலர் நினைக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமானது அல்லவா? சரி, அதைத்தான் நம் நல்ல தேவன் நமக்கு வழங்குகிறார்! ஆறு நாட்களுக்குத் தேவன், சுழலும் பூமி, ஒளி, நிலம், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை உருவாக்கினார். ஏழாவது நாளில், தேவன் ஓய்வெடுத்தார் (ஆதியாகமம் 1:31-2:2). பத்து கட்டளைகளில், அவரை கனப்படுத்தக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கான விதிகளைத் தேவன் பட்டியலிட்டார் (யாத்திராகமம் 20:3-17), ஓய்வுநாளை ஓய்வுநாளாக நினைவுகூர வேண்டும் (வவ. 8-11) என்பது அதிலொன்று. புதிய ஏற்பாட்டில், இயேசு ஊரில் உள்ள அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்துவதைக் காண்கிறோம் (மாற்கு 1:29-34). பின்னர் மறுநாள் அதிகாலையில் ஜெபிக்க ஒரு தனியான இடத்திற்குச் செல்கிறார் (வச. 35). நம் தேவன் நோக்கத்துடன் வேலை செய்தார் மற்றும் ஓய்வெடுத்தார்.

வேலையில் தேவனுடைய உதவி, ஓய்விற்கான அவரது அழைப்பு என இரண்டுமே நம்மைச் சுற்றி ரீங்காரமாக இசைக்கிறது. வசந்த காலத்தில் நட்டால், கோடையில் வளர்ச்சியும், இலையுதிர்காலத்தில் அறுவடையும், குளிர்காலத்தில் ஓய்வும் உண்டாகும். காலை, நன்பகல், மதியம், மாலை, இரவு. தேவன் நம் வாழ்க்கையில் வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டையுமே ஏற்படுத்தியுள்ளார்,  இரண்டையும் செய்ய அனுமதியும் வழங்குகிறார்.

ஆவிக்குரிய புதுப்பிப்பு

சீன மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முத்து துகள்களைச் சருமத்தில் தேய்ப்பது நடைமுறையில் உள்ளது, தோலின் மேற்புறத்தில் தங்கியிருக்கும் இறந்த திசுக்களை தேய்த்தெடுக்க தரையின் முத்துகளைப் பயன்படுத்துகிறார்கள். ருமேனியாவில், புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சைக்கு சேற்றைப் பிரபலமாகப் பயன்படுத்துகிறார்கள். சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் மாற்றும் வகையில் பரவலாகச் சேறை தேய்த்துக்கொள்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள மக்கள் உடல் பராமரிப்பு நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றனர், இது மிகவும் மந்தமான சருமத்தையும் புதுப்பிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

எவ்வாறாயினும், நமது உடல்களைப் பராமரிக்க நாம் உருவாக்கிய கருவிகள் நமக்குத் தற்காலிக திருப்தியை மட்டுமே தர முடியும். முக்கியமானது என்னவென்றால், நாம் ஆவிக்குரிய ரீதியில் ஆரோக்கியமாகவும் வலிமையோடும் இருப்பதே. இயேசுவை விசுவாசிக்கும் நாம், அவர் மூலமாக ஆவிக்குரிய புத்துணர்வாகிய ஈவையும் பெற்றுள்ளோம். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார், "எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது" (2 கொரிந்தியர் 4:16). பயம், காயம் மற்றும் பதட்டம் போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளும்போது நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மைச் சோர்வடையச் செய்யலாம். நாம் "காணப்படுகிறவை அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்." (வச. 18) என்று நோக்கும்போது ஆவிக்குரிய புத்துணர்வு வருகிறது. நமது அன்றாட கவலைகளை தேவனிடம் ஒப்படைத்துவிட்டு, பரிசுத்த ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி மற்றும் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22-23 நம் வாழ்வில் புதிதாக வெளிப்பட வேண்டும் என்று ஜெபிப்பதின் மூலமாக இதை அடைகிறோம். நாம் நமது பிரச்சனைகளைத் தேவனிடம் விட்டுவிட்டு, அவருடைய ஆவியானவர் ஒவ்வொரு நாளும் நம் மூலம் பிரகாசிக்க அனுமதிக்கும்போது, அவர் நம் ஆத்துமாக்களை மறுசீரமைக்கிறார்.