அலாஸ்காவில் உள்ள கோடியாக்கில் எங்கள் மகன் ஜோஷ், சால்மன் மீன்களைப் பிடிக்கும் தொழில் செய்யும் ஓர் மீனவ வணிகர்; சில காலத்திற்கு முன்பு எங்கள் மகன் எனக்கு ஓர் புகைப்படத்தை அனுப்பியிருந்தான். அதில் அவன் படகிற்கு சில நூறு அடிகளுக்கு முன்னால் ஓர் சிறிய படகு ஓர் குறுகிய கணவாயின் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தொடுவானத்தில் கேடுகளை விளைவிக்கக் கூடிய புயல் மேகங்கள் சூழ்ந்து கொண்டது. ஆனால், தேவனுடைய தெய்வீகத் தன்மையையும், கரிசனையையும் வெளிப்படுத்துவதற்கு அடையாளமாக கணவாயின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கமாக அந்த சிறிய படகைச் சூழ வானவில் சூழ்ந்து காணப்பட்டது.

அந்த புகைப்படம் நமது இவ்வுலக வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது: நிச்சயமற்ற ஓர் எதிர்காலத்தை நோக்கி நாம் பயணம் செய்கிறோம். ஆனால், தேவனுடைய உண்மைத் தன்மையினால் சூழப்பட்டிருக்கிறோம்!

இயேசுவின் சீஷர்கள் புயலில் அகப்பட்டுக் கொண்டார்கள் இந்த அனுபவத்தைப் பயன்படுத்தி தேவனுடைய வல்லமையையும், அவருடைய உண்மைத் தன்மையையும் அவர்களுக்குப் போதித்தார் (மத் 8:23-27). நிச்சயமற்ற வாழ்க்கைக்கு பதில் காண விழைகிறோம். வருங்காலம் நம்மை நெருங்கிவருவதை உணர்ந்து நமக்கு என்ன நேரிடுமோ என்ற ஓர் அச்சம் ஏற்படுகிறது. பரிசுத்தனாகிய கவிஞர் ஜான் கெபிள் இக்கருத்தைத் தன் கவிதையில் “எதிர்காலம் நெருங்கி வரவர அதைக் கவிஞன் உற்றுக் கவனிக்கிறார். அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, தேவன் என்ன செய்வார் என்பதற்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார்” என்று விவரிக்கிறார்.

இளம் வாலிபரோ? முதியவர்களோ யாராயிருந்தாலும் நாம் அனைவரும் நிச்சயமற்ற ஓர் எதிர்காலத்தையே சந்திக்கிறோம். நம் எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் நம்மைச் சூழ தேவனுடைய அன்பும், அவருடைய அரவணைப்பும் காத்துக் கொள்கிறது. தேவன் என்ன செய்வார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! பரலோகம் பதிலளிக்கிறது.