மார்ச், 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: மார்ச் 2016

என்னைப் பின்பற்று

உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் நிலையங்களில் எடை குறைக்கவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் விரும்புகிறவர்களுக்கு, பல்வேறு செயல்முறைத் திட்டங்களை அறிவிக்கின்றனர். ஓரு உடல் தகுதிக்கான மையத்தில் குறைந்தது 50 பவுண்ட் எடை குறைத்து ஆரோக்கியமாக வாழ விரும்புகிறவர்களையே சேர்த்துக் கொள்கிறது. ஒரு பெண், அவள் சென்ற உடல் தகுதி நிலையத்திற்கு, அவளோடு கூட வந்த எடை குறைவான, நல்ல உடல்வாகுடைய பெண்கள் அவளைப் பார்த்து வடிவற்ற உடல் அமைப்பு உடையவள் என்று அவளைப் பார்த்து கேலி செய்ததினால், அந்த நிலையத்திற்குச் செல்வதை நிறுத்திவிட்டதாகக் கூறினாள். இப்பொழுது…

கிருபையினால் ஆச்சரியப்படுதல்

மிச்சிகனில் உள்ள கிராண்ட் ராப்பிட்ஸில் வாழ்ந்து வந்த ஒரு பெண், அவளது கணவர் உறங்குவதற்காகப் படுக்கை அறைக்குச் சென்றபின். ஓய்வெடுக்கும் இருக்கையிலேயே உறங்கி விட்டாள். அந்த தம்பதியினர், அறையில் இருந்த நழுவும் கதவினைப் பூட்ட மறந்துவிட்டனர். அதன் வழியாக அழையா விருந்தாளியாக ஒரு மனிதர் திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைந்து விட்டான். கணவர் உறங்கிக் கொண்டிருந்த படுக்கை அறைக்குச் சென்று அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கினான். உறங்கிக் கொண்டிருந்த அந்த மனிதன் விழித்துக் கொண்டான். அங்கு நின்று கொண்டிருந்த ஓர் உருவத்தைப் பார்த்து, “அன்பே படுக்கைக்கு…

என் பெலனாகிய தேவன்

பண்டைய பாபிலோனிய வீரர்கள் நன்னடைத்தை உடையவர்கள் அல்ல. அவர்கள் இரக்கமற்றவர்களும் முரடர்களும், வீம்புக்காரராயும் இருந்தார்கள். பிறருக்கு கேடுண்டாக்கும் தன்மையுடையவர்கள். கழுகானது அதன் இரையைப் பாய்ந்து பிடிப்பது போல, அவர்கள் மற்ற நாடுகளின் மேல் தாக்குதல் நடத்துவார்கள். அவர்கள் வல்லமையுடையவர்கள் மட்டுமில்லாது மிகவும் கர்வமும்; உடையவர்கள். உண்மையில் அவர்களது போராடும் திறமையையே கடவுளாக ஆராதிப்பார்கள். அவர்களது தேவனே அவர்களது பெலன் என்று கூறினார்களென்று வேதாகமம் கூறுகிறது (ஆபகூக் 1:11).

இஸ்ரவேல் மக்கள், மீதியானியருக்கு எதிராகப் போராட ஆயத்தமான பொழுது இப்படிப்பட்ட சுயம் சார்ந்த தன்மை இஸ்ரவேலைப்…

ஆச்சரியப்படுதல்

மைக்கல் ஏஞ்சலோ மெரிசி டா காரவாகியோ (1571-1610) என்ற இத்தாலியக் கலைஞர், ஆத்திரத்துடன் செயல்படும் குணத்தையும், வழக்கத்திற்கு மாறாக செயல்படும் திறனுக்கும் பெயர் பெற்றவர். அவர் தமது ஓவியத்தில் வரையும் புனிதர்களுக்கு மாதிரியாக மிகவும் சாதாரண மக்களை மாதிரியாக வைப்பதும், அவரது வண்ண ஓவியத்தைப் பார்ப்பவர்கள், அவரது ஓவியத்தில் வரையப்பட்டுள்ள கதாபாத்திரங்களில் ஒருவனாக தங்களைக்காணக் கூடிய முறையிலும் அவரது ஓவியங்கள் இருக்கும். “எம்மாவூரில் இரவு உணவு” என்ற ஓவியத்தில் சத்திரத்தின் உரிமையாளர் நிற்பதாகவும், இயேசுவும், அவருடைய இரண்டு சீஷர்களும் உணவருந்த உட்கார்ந்திருப்பது போலவும் அந்த…

ஈஸ்டர் ஆரம்பம்

ஈஸ்டர் பற்றிய கதையில் ஒரு குறிப்பு எப்பொழுதும் என் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. சிலுவையில் அறையப்பட்டதினால் ஏற்பட்ட தழும்புகளை இயேசு ஏன் வைத்திருந்தார்? உயிர்த்தெழுந்த பின் அவர் விரும்பிய எந்தவிதமான சரீரத்தையும் அவர் உடையவராக இருந்திருக்கலாம். எளிதில் யாவரும் அடையாளம் கண்டு கொள்வதற்காக அவர் தழும்புகளுள்ள சரீரத்தைக் தெரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏன் அப்படி?

இயேசுவுடைய கைகளில் கால்களில் அவருடைய விலாவில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் இல்லாவிட்டால், ஈஸ்டரைப் பற்றிய விவரங்கள் முழுமை பெற்றவைகளாக இருக்க இயலாது (யோவான் 20:27). மனிதர்கள் முத்துப் போன்ற…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

களைகளுக்கு நீர்ப்பாசனம்

இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள்.  
களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம். 
பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார்.  
பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).   

உறுதியும் நன்மையுமான

அந்த இளம் கேம்பஸ் அலுவலர் என்னுடைய கேள்வியைக் கண்டு கலக்கமடைந்தார். “தேவனுடைய நடத்துதலுக்கும் உதவிக்காகவும் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?” என்று நான் கேட்டதற்கு அவர் முகநாடி வேறுபட்டது. “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று பவுல் வலியுறுத்துகிறார். என் கேள்விக்கு பதிலாக, அந்த இளைஞன், “எனக்கு ஜெபத்தில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை” என்று கூறினான். “தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்றும் எனக்கு தோன்றவில்லை” என்று தன் முகத்தை சுருக்கினான். அந்த இளம் அலுவலர் தன்னுடைய சுயபெலத்தில் ஒரு துறைசார்ந்த சாதனையை நிகழ்த்த முற்பட்டு தோற்றுப் போனார். ஏன்? அவர் தேவனை மறுதலித்ததால்.  
சபையின் மூலைக்கல்லாகிய கிறிஸ்து தன் சொந்த ஜனத்தினாலேயே எப்போதும் புறக்கணிக்கப்படுகிறவராய் இருக்கிறார் (யோவான் 1:11). பலர் இன்றும் அவரை நிராகரிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை, வேலைகளை, உறுதியாய் ஸ்தாபிக்கப்படாத தேவாலயங்களின் மூலமாகவும், தங்கள் சொந்த திட்டங்கள், கனவுகள் மற்றும் பிற நம்பகத்தன்மையற்ற தளங்களில் தங்களுடைய ஜீவியத்தைக் கட்டியெழுப்ப போராடுகிறார்கள். ஆனாலும், நம்முடைய நல்ல இரட்சகர் ஒருவரே நம்முடைய “பெலனும், என் கீதமுமானவர்” (சங்கீதம் 118:14). நிஜத்தில், “வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று” (வச. 22).  
நம்முடைய வாழ்க்கையின் மூலையில், அவரை விசுவாசிப்பவர்கள் எவ்விதம் வனையப்படவேண்டும் என்ற திசையை தேவன் தீர்மானிக்கிறார். எனவே அவரை நோக்கி “கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்” (வச. 25) என்று நாம் ஜெபிக்கிறோம். அதின் விளைவு? “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (வச. 26). அவர் உறுதியான மற்றும் நல்ல தேவனாய் இருப்பதால் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.  

போகட்டும் விடு

புனித அகஸ்டினின் “அறிக்கைகள்” என்று வெளியிடப்பட்ட அவருடைய சுயசரிதையானது இயேசுவுடனான அவருடைய நீண்ட பயணத்தை பிரதிபலிக்கிறது. ஒரு சமயம், பேரரசரை புகழ்ந்து பேசுவதற்காக அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் அரசரைப் பார்த்து புகழ்ந்து பேசும்போது, அவருடைய அந்த முகஸ்துதி வரிகளை கேட்டு குடிபோதையில் இருந்த ஒரு பிச்சைக்காரன் கைதட்டி கேலிசெய்வதைப் பார்த்தார். அந்த குடிபோதையில் இருந்த மனிதன் இப்படிப்பட்ட முகஸ்துதிகள் மூலம் வரும் மேன்மைகளை தன்னுடைய வாழ்க்கையில் பார்த்து பழக்கப்பட்டவன் என்பதை உணர்ந்து, அன்றிலிருந்து உலக வெற்றிகளுக்காகவும் மேன்மைகளுக்காகவும் பிரயாசப்படுவதை நிறுத்திக்கொண்டார்.  
ஆகிலும் அவர் இச்சைக்கு அடிமையாயிருந்தார். பாவத்திற்கு அடிமையாயிருக்கும் வரையில் இயேசுவிடத்தில் திரும்பமுடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தாலும், விபச்சார பாவத்தில் அவர் தரித்திருந்தார். ஆகையால் அவர் “எனக்கு இச்சையடக்கம் தாரும்... ஆனால் உடனே வேண்டாம்” என்று ஜெபிக்க ஆரம்பித்தாராம்.  
அகஸ்டின், போதுமான அளவிற்கு பாவத்திற்கும் இரட்சிப்பிற்கும் இடையில் சிக்கித் தவித்தார். மற்றவர்களுடைய வாழ்க்கையினால் உந்தப்பட்டவராய், ரோமர் 13:13-14ஐ எடுத்து வாசித்தார். “களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும்… உள்ளவர்களாய் நடவாமல்... துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.” 
அவருடைய வாழ்க்கையில் மாற்றம் வந்தது. தேவன் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அகஸ்டினுடைய வாழ்க்கையில் இருந்த இச்சையின் சங்கிலிகளிலிருந்து அவரை விடுவித்து, “தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு…” கொண்டுவந்தார். “அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (கொலோசெயர் 1:13-14). அகஸ்டின் ஒரு போதகரானார். ஆனாலும் அவர் இச்சையினால் சோதிக்கப்பட்டார். ஆகிலும் அவ்வாறு சோதிக்கப்படும்போது யாரை நோக்கவேண்டும் என்பதை தற்போது நன்கு அறிந்திருந்தார். அவர் இயேசுவிடம் தஞ்சமடைந்தார். நீங்கள் தஞ்சமடைய ஆயத்தமா?