மைக்கல் ஏஞ்சலோ மெரிசி டா காரவாகியோ (1571-1610) என்ற இத்தாலியக் கலைஞர், ஆத்திரத்துடன் செயல்படும் குணத்தையும், வழக்கத்திற்கு மாறாக செயல்படும் திறனுக்கும் பெயர் பெற்றவர். அவர் தமது ஓவியத்தில் வரையும் புனிதர்களுக்கு மாதிரியாக மிகவும் சாதாரண மக்களை மாதிரியாக வைப்பதும், அவரது வண்ண ஓவியத்தைப் பார்ப்பவர்கள், அவரது ஓவியத்தில் வரையப்பட்டுள்ள கதாபாத்திரங்களில் ஒருவனாக தங்களைக்காணக் கூடிய முறையிலும் அவரது ஓவியங்கள் இருக்கும். “எம்மாவூரில் இரவு உணவு” என்ற ஓவியத்தில் சத்திரத்தின் உரிமையாளர் நிற்பதாகவும், இயேசுவும், அவருடைய இரண்டு சீஷர்களும் உணவருந்த உட்கார்ந்திருப்பது போலவும் அந்த வேளையில், அவர்கள் இருவரும் அவரை உயிர்த்தெழுந்த ஆண்டவராக அடையாளம் கண்டு கொண்டதையும் (லூக்கா 24:31) சித்ததரிப்பதாக உள்ளது. ஒருவன் எழும்புவது போலவும், மற்றவனது இருகைகளும் ஆச்சரியத்தால் நீட்டப்பட்டிருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளை எழுதியுள்ள லூக்கா அவரது சுவிசேஷத்தில் அந்த இரண்டு சீஷர்களும், உடனே எருசலேமிற்கு திரும்பிப் போவதாகவும், அங்கு பதினொரு சீஷர்களும், மற்றவர்களும் ஒரு அறையில் கூடி வந்திருந்ததையும், “ஆம் மெய்யாகவே இயேசு உயிர்த்தெழுந்தார், சீமோனுக்குக் காணப்பட்டார்” என்று கூறினதையும் கேட்டார்கள். பின்பு அவர்கள் இருவரும் வழியில் ஏற்பட்டவைகளை, அவர்களுக்கு விவரித்துக் கூறினார்கள். இயேசு அப்பத்தை பிட்ட பொழுது தாங்கள் அவரை அறிந்து கொண்ட விதத்தையும் அவர்களுக்கு விளக்கினார்கள் (வச.33-35).

நாம் எதிர் பார்க்கும் இடங்களில் இயேசு வருவது அரிதானதாகும். அவரை எதிர்பார்க்காத இடத்தில் அவர் தோன்றுகிறார். அதுவும் காரண காரியங்களால் விளக்கப்பட இயலாத முறையில்தான் அவர் எப்பொழுதும் தோன்றுவார். ஒரு ஊழியன் தேவனுக்கு உண்மையாக தொடர்ந்து இருப்பதற்கு, கர்த்தருடைய எதிர்பாராத வரவிற்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பதேயாகும் என்று ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் கூறியுள்ளார்.

இன்று நாம் எந்தப் பாதையில் நடந்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படத்தக்க புதிய வழிகளில் கிறிஸ்து அவரை நமக்கு வெளிப்படுத்துவதை ஏற்று கொள்ள நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.