நம்மில் உள்ள ஐந்து உணர்வுகளில் எந்த உணர்வு மிகவும் கூர்மையான ஞாபகசக்தியை நமக்கு உணர்த்துகிறது? என்னைப் பொறுத்தவரையில் மோப்பம் என்னும் உணர்வுதான் என்று நான் நிச்சயமாகக் கூறமுடியும். ஒரு வகையான சூரிய எண்ணையின் மணம் என்னை உடனே பிரெஞ்சுக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுவிடும். “கோழிக்கறி கூட்டு” என் சிறு பிராயத்தில் பாட்டி வீட்டிற்குச் சென்றதை நினைவூட்டும். “பைன்” பற்றிய ஓர் வார்த்தை “கிறிஸ்மஸிற்கும்” முகச்சவரம் செய்தபின் பயன்படுத்தும் ஒருவித வாசைன திரவியம் என் மகளின் பதின் வயதை ஞாபகத்திற்கு கொண்டு வரும்.

கொரிந்தியர் கிறிஸ்துவுக்கு நற்கந்தமாயிருக்கிறார்கள் என்று பவுல் கூறுகிறார்; “நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்” (2 கொரி 2:15). அவர் ஒருவேளை ரோமர்களின் வெற்றி ஊர்வலத்தை குறிப்பிடலாம். ரோமர்கள் தாங்கள் பெற்ற வெற்றியை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் நகர் முழுவதிலும் உள்ள பலிபீடங்களில் வாசனைத் திரவியங்களை எரிப்பார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு அந்த வாசைன மகிழ்ச்சியைக் கொடுக்கும்; ஆனால் போர்கைதிகளுக்கு அடிமைத் தனத்தையே நினைப்பூட்டும். எனவே விசுவாசிகளாகிய நாம் வெற்றிவீரர்கள். கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கப்படும் பொழுது அது தேவனுக்கு மகிழ்ச்சியூட்டும் சுகந்த வாசனையான நற்கந்தம்.

கிறிஸ்துவின் நற்கந்தங்களாக கிறிஸ்தவர்கள் ஓர் அறைக்குள் கடந்து செல்லும் பொழுது, எவ்வித சுகந்த வாசனையை பரப்புகிறார்கள்? ஓர் குப்பியிலோ அல்லது ஓர் ஜாடியிலோ கொண்டு வரக்கூடிய வாசனைத் திரவியமல்ல. நாம் ஒருவரோடு அதிக நேரம் செலவழித்தால், நாம் அந்த நபரைப் போலவே சிந்திக்கவும், செயல்படவும் துவங்கிவிடுவோம். இயேசுவோடு நம் காலத்தைச் செலவழித்தால், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சுகந்த வாசனையை நாம் பரப்ப முடியும்.