சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றில் தொழில் துறை வடிவமைப்பில் பட்டதாரியான ஒருவருக்கு மிகவும் சாதாரணப் பொருட்களைப் பயன்படுத்தி ஒரு பொதுவான பிரச்சனைக்கு ஒரு புதிய முறையில் பதில் கண்டுபிடிக்க, ஒரு பயிற்சி அரங்கத்தில் சவால் விடப்பட்டது. பொது இரயில்களிலும், பஸ்களிலும் பயணம் செய்யும் பொழுது கூட்டத்தின் நெருக்கடியில் நசுக்கப்படாமல் இருக்க ஒருவருக்கு உரிய இடத்தில் பிறருடைய தாக்கம் இல்லாமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு மேல் சட்டையை அவள் கண்டுபிடித்தாள். பொதுவாகப் பறவைகளும், பூனைகளும் தாவரங்களை தாக்காமல் இருக்க தாவரங்களிலுள்ள முட்கள் போல எளிதில் வளைந்து கொடுக்கக் கூடிய, பிளாஸ்டிக்கினாலான அநேக நீண்ட கூர்முனைகள் அந்த மேல் சட்டை முழுவதிலும் இருந்தன.

இயேசுவைக் காணவும், அவரைத் தொடவும் விரும்பும் மக்கள் அவரை நெருக்கும் பொழுது அவருக்கு உரிய இடத்தை இழப்பது எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி இயேசு நன்கு அறிந்திருந்தார். 12 ஆண்டுகளாக உதிரப்போக்கினால் கஷ்டப்பட்டும், ஒருவராலும் சொஸ்தமாக்கப்பட இயலாத ஒரு பெண் இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளது உதிரத்தின் ஊறல் நின்று போயிற்று (லூக் 8:43-44).

“என்னைத் தொட்டது யார்?” (வச.45) என்று இயேசு கேட்டது வேடிக்கையான கேள்வியாக உள்ளது அல்லவா? அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டதை அவர் உணர்ந்தார் (வச.46). அந்தப் பெண்ணின் தொடுதல், கூட்டத்தின் நெரிசலால் மக்கள் சாதாரணமாக தொடும் தொடுவதிலிருந்து வேறுபட்டு இருந்தது. நாம் நமக்கே உரிய இடத்தை, நம்முடைய அந்தரங்க காரியங்களை நமக்குள்ளாக வைத்துக்கொள்ள சில நேரங்களில் நாம் விரும்புவோம் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். உலகில் துன்பப்படும் மக்களுக்கு உதவி செய்யக் கூடிய ஓரே வழி, நமது ஊக்கத்தினால், ஆறுதலினால், நம்மிலுள்ள கிறிஸ்துவின் கிருபையினால் அவர்கள் தொடப்படும் அளவிற்கு அவர்கள் நம்மை நெருங்கி வர அனுமதிப்பதே ஆகும்.