நாம் ஆகாய மார்க்கமாய் பயணிக்கும் பொழுது, விமானம் மேலெழும்பும்முன், விமான பணியாளர் பாதுகாப்பு விளக்கம் ஒன்று தருவார். அதில், விமான அறையினுள் அழுத்த குறைவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குவார். பயணிகள் தங்களுக்கு மேலுள்ள பகுதியிலிருந்து கீழே விழும் ஆக்ஸிஜன் கவசத்தை பிறருக்கு உதவுமுன் அணிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவர். ஏனெனில், பிறருக்கு உதவும்முன் உங்களை சரீரப்பிரகாரமாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

பவுல், தீமோத்தேயுவிற்கு எழுதும் போது, பிறருக்கு உதவவும், ஊழியம் செய்வதற்கும் முன்பாக, தன்னுடைய சொந்த ஆவிக்குறிய ஆரோக்கியத்தைக் காத்துகொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றார். ஒரு போதகராக தீமோத்தேயு என்னென்ன பொறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென நினைப்பூட்டுகிறார். கள்ளப் போதனைக்கு எதிர்த்து நிற்க வேண்டும் (1 தீமோ. 4:1-5). தவறான கொள்கைகைளை சீர்திருத்த வேண்டும் (வச. 6-8). கிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாய் இருப்பதற்கு தேவையானதென்னவெனில், உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு. இவைகளில் நிலைகொண்டிரு. (வச. 16). அவன் முதலாவது தனக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவை சரிபண்ணிக் கொண்டால்தான் மற்றவர்களுக்கு உபதேசிக்க முடியும்.

பவுல், தீமோத்தேயுவுக்குத் சொல்வது நமக்கும் பொருந்தும். ஒவ்வொரு நாளும் நாம் தேவனை அறியாத ஜனங்களைச் சந்திக்கின்றோம். தேவனுடைய வார்த்தை, ஜெபம் ஆகியவற்றிற்கு நேரத்தைக் கொடுப்பதிலும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் நம்மை வைத்துக் கொள்ளுவதன் மூலம் ஆவிக்குரிய ஆக்ஸிஜனை நிரப்பிக் கொள்ளலாம். இவ்வாறு நமக்கும் தேவனுக்குமுள்ள உறவை சரிபடுத்திக் கொண்டு ஆவியில் விழிப்பாய் இருந்து  கொண்டால்தான் மற்றவர்களுக்கு உதவ முடியும்.