நம்முடைய குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு அல்லது நமக்கு மிகவும் பிடித்த பழக்கப்பட்ட இடத்திற்கு அல்லது நாம் செய்த வேலைக்கோ, பிழைப்புக்கோ பிரியாவிடை கொடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.

இயேசுவின் சீஷனாய் இருப்பதற்கான கிரையத்தைக் குறித்து அவரே லூக்கா 9: 57-62ல் விவரிக்கிறார். இயேசுவை பின்பற்ற விரும்பிய ஒருவன், அவரை நோக்கி “ஆண்டவரே உம்மைப் பின்பற்றுவேன், ஆனால் அதற்கு முன்பு நான் சென்று என் குடும்பத்திற்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றேன்” என்று கூறினான். அதற்கு இயேசு “கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல” என்று மறுஉத்தரவு கூறினார் (61: 62).

அப்படியானால் இயேசு, எல்லாவற்றையும் விட்டு நாம் விலையேறப்பெற்றதாய் கருதிய உறவுகளையும் விட்டு, அனைத்திற்கும் விடைகொடுத்து விட்டு பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறாரா?

சீன மொழியில் “good bye” என்னும் ஆங்கில வார்த்தைக்கு ஒத்த சமமான வார்த்தைகள் இல்லை. “மறுபடியும் சந்திப்போம்” என்று பொருள்கொள்ளும்படியாக இரண்டு சீன எழுத்துக்களை கொண்டு மொழிபெயர்த்துள்ளனர். இயேசு கிறிஸ்துவின் சீடனானால், சில சமயம் மற்றவர்கள் நம்மை நிராகரிக்கக் கூடும். அதற்காக நம்முடைய எல்லா உறவுகளையும் மறந்து அவைகளுக்கு பிரியாவிடை கொடுக்கவேண்டும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. மாறாக, முழுமனதோடு அவரின் சித்தத்தின்படி நடக்க நாம் ஒப்புக்கொடுத்து அவரைப் பின்பற்ற வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார், அதன் விளைவாக நாம் மனுஷர்களை சரியான விதத்தில் காணும் கண்ணோட்டத்தை பெற்றுக்கொள்வோம்.

தேவன் நமக்குச் சிறந்ததையே விரும்புகிறார், ஆயினும் நம்முடைய எல்லாவற்றிலும் முதன்மையான இடத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும்.