புகைப்படக் கலைஞர் ரான் முர்ரே குளிர் காலநிலையை விரும்புகிறார். "குளிர் என்றால் தெளிவான வானம், அது பிரமிப்பிற்கான ஒரு ஜன்னலைத் திறக்கும்!" என்று அவர் விளக்குகிறார்.
அலாஸ்கா பகுதியில் பூமியின் மிகவும் கண்கவர் ஒளி நிகழ்ச்சியான அரோரா பொரியாலிஸ் (வடக்கு விளக்குகள்)-ஐ பிரேத்யேகமாக படம்பிடிக்க வழிகாட்டும் சுற்றுலா சேவையை ரான் வழங்குகிறார். முர்ரே, இந்த அனுபவத்தை "தெய்வீகமானது" என்று விளக்குகிறார். நீங்கள் எப்போதாவது வானத்தில் வெவ்வேறு ஒளிகளிலும் வெவ்வேறாகத் தோன்றும் முனைப்பான பல வண்ணங்களை வெளிப்படுத்துகிற இந்த மாறுபட்ட காட்சியைப் பார்த்திருந்தால், அது ஏன் தெய்வீகமானது என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
ஆனால் இந்த ஒளிவிளக்கு தோற்றங்கள் வடக்கு பகுதியில் மட்டுமல்ல. அதே வகையான ஒளிவிளக்குகளான அரோரா ஆஸ்ட்ராலிஸ், ஏறக்குறைய பொரியாலிஸைப் போன்றவை, தெற்கில் அதே நேரத்தில் நிகழ்கிறது.
கிறிஸ்துமஸ் நிகழ்வைப் பற்றி சீஷன் யோவான் கூறுவதில், அவர் தொழுவத்தையும் மேய்ப்பர்களையும் தவிர்த்துவிட்டு, நேரடியாக "மனுஷருக்கு ஒளியாயிருந்(த)தது" (யோவான் 1:4) ஒருவரைக் குறிப்பிடுகிறார். யோவான் பின்னர் ஒரு பரலோக நகரத்தைப் பற்றி எழுதுகையில், அதன் ஒளியின் ஆதாரத்தை விவரிக்கிறார். இந்த "நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு" (வெளிப்படுத்துதல் 21:23). இந்த ஒளியின் ஆதாரம் இயேசு; யோவான் 1ல் குறிப்பிடப்பட்ட அதே ஆதாரம். மேலும் இந்த வருங்கால இருப்பிடத்தில் வசிப்பவர்களுக்கு, “இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார்” (22: 5).
அரோரா பொரியாலிஸ் மற்றும் ஆஸ்ட்ராலிஸை உருவாக்கிய உலகின் ஒளியானவரை வாழ்க்கை பிரதிபலிக்கும் போது, உண்மையிலேயே ஒரு பிரமிப்பான வாசலைத் திறக்கிறோம்.