banner image

அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும். யாத்திராகமம் 32:21-32

எகிப்து சிறையில் 400 நாட்களைக் கழித்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் விடுதலையானபோது பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். தனது விடுதலைக்கான நிம்மதியை ஒப்புக்கொண்டாலும், தான் பிரிந்து செல்லும் நண்பர்களும் இன்னும் எவ்வளவு காலம் சிறையிலிருப்பார்களென்று தெரியாததால் அவர்களுக்காக ஆழ்ந்த கவலையுடன்தான் தனது சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். தன்னுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சக நிருபர்களிடமிருந்து விடைபெறுவது மிகவும் கடினமாக இருப்பதாக அவர் கூறினார்.

நண்பர்களை விட்டுச் செல்வதை நினைத்து மோசேயும் மிகுந்த கவலையையும் வெளிப்படுத்தினார். சீனாய் மலையில் தேவனைச் சந்திக்கும் போது; பொன் கன்றுக்குட்டியை வணங்கிய சகோதரன், சகோதரி மற்றும் தேசத்தாரை இழந்துபோகக்கூடிய சூழலை எதிர்கொண்டபோது; அவர்களுக்காகப் பரிந்துபேசினான் (யாத். 32:11–14). ” அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும்” (வ. 32) என்று மன்றாடினான்.

அப்போஸ்தலனாகிய பவுலும் பிற்பாடு குடும்பம், நண்பர்கள் மற்றும் தேசத்தின் மீது இதேபோன்ற அக்கறையை வெளிப்படுத்தினார். அவர்களுக்கு இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையின்மையால் வருந்தி, அப்படிப்பட்ட அன்பினால் தன் சகோதர சகோதரிகளைக் காப்பாற்ற முடிந்தால், கிறிஸ்துவுடனான தனது சொந்த உறவைக் கைவிடத் தயாராக இருப்பதாக பவுல் கூறினார் (ரோமர் 9:3).

திரும்பிப் பார்க்கையில், மோசேயும் பவுலும் கிறிஸ்துவின் உள்ளத்தை வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். ஆனாலும், அவர்களால் மட்டுமே உணர முடிந்த அன்பையும், அவர்களால் மட்டுமே செய்யக் கூடிய தியாகத்தையும், இயேசு நிறைவேற்றினார்; என்றென்றும் நம்மோடு இருக்க.
எழுதியவர்: மார்ட் டிஹான்

சிந்தனை
பரலோக பிதாவே, நீர் உமது அன்பைப் புரியாதவர்களை நேசிக்கவும், வாழவும், மரிக்கவும் நீர் எவ்வளவு ஆயத்தமாய் இருப்பதை எனக்கு நினைவூட்டியதற்காக நன்றி.
பிறருக்காகக் கரிசனை கொள்ளுதல், நம்மீதான இயேசுவின் அன்பைக் கனப்படுத்துகிறது.