banner image

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். 1 யோவான் 3:16

ஒரு கோடைக்கால ஆய்வு நிகழ்ச்சியின் போது, சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்பைன் மலையில் ஏற விரும்பிய ஒரு சிறுவனைப் பற்றிய புத்தகத்தை என் மகன் படித்தான். இந்த இலக்குக்கான பயிற்சியே அவனது பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமித்தது. இறுதியாக அவன் மலையேறப் புறப்பட்டபோது, திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கவில்லை. மலை சாய்வின் மேலே, அவனது ஒருவர் அணி வீரர் நோய்வாய்ப்பட்டார். சிறுவன் தனது இலக்கை அடைவதற்குப் பதிலாக, அவருக்கு உதவி செய்ய அவருடன் தங்க முடிவு செய்தான்.

வகுப்பறையில், என் மகனின் ஆசிரியர் கேட்டார், “மலை ஏறாததால் அச்சிறுவன் தோற்றுவிட்டானா?” என்று. அதற்கு ஒரு மாணவன் “ஆம், அவன் தோற்க வேண்டுமென்பது அவன் தலைவிதி” என்று. ஆனால் மற்றொரு சிறுவன் அக்கருத்தை ஏற்கவில்லை. மலையேறிய சிறுவன் தோற்கவில்லை, ஏனெனில் அவன் வேறொருவருக்கு உதவ தனக்கு முக்கியமான ஒன்றை விட்டுக்கொடுத்தான் என்று நியாயப்படுத்தினான்.

நாம் நமது திட்டங்களை மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து அக்கறை காட்டும்போது, நாம் இயேசுவைப் போலச் செயல்படுகிறோம். சொந்த குடும்பம், நம்பகமான வருமானம், சுற்றித்திரிந்து தேவனின் சத்தியத்தை அறிவிப்பதற்குத் தேவையான சமுதாய அங்கீகாரமென்று எல்லாவற்றையும் தியாகம் செய்தார். இறுதியில், பாவத்திலிருந்து நம்மை விடுவித்து, நமக்குத் தேவனின் அன்பைக் காட்ட அவர் தனது ஜீவனையே கொடுத்தார் (1 யோவான் 3:16).

உலகத்திற்கான வெற்றி என்பது தேவனின் பார்வையிலுள்ள வெற்றியிலிருந்து மிகவும் வித்தியாசமானது. பின்தங்கிய மற்றும் புண்பட்ட மக்களை மீட்க நம்மைத் தூண்டும் இரக்கத்தை அவர் மதிக்கிறார் (வச. 17). ஜனங்களைப் பாதுகாக்கும் தீர்மானங்களை அவர் அங்கீகரிக்கிறார். தேவனின் உதவியால், நமது முக்கியத்துவங்களை அவருடையவற்றோடு இணைத்து, அவரையும் மற்றவர்களையும் நேசிப்பதில் நம்மை அர்ப்பணிக்கலாம், இதுவே மிக முக்கியமான சாதனையாகும்.
எழுதியவர்: ஜெனிபர் பென்சன் ஷுல்ட்

சிந்தனை
வெற்றிக்கான வேட்கை உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது? ஏன் சில சமயங்களில் நமது முக்கியத்துவங்களைத் தேவனுக்கு முக்கியமானவற்றுடன் ஒன்றச்செய்வது கடினமாக இருக்கிறது?
பரலோகத் தந்தையே, உமது பார்வையில் நான் வெற்றிபெற விரும்புகிறேன். நீர் என்னை நேசிப்பது போல் மற்றவர்களை எப்படி நேசிக்க வேண்டும் என்று எனக்குக் கற்று தாரும்.