banner image

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும் (வ.16). எபேசியர் 3:14-21

கோடீஸ்வர நிறுவனர்களான பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரால் 2009 இல் உருவாக்கப்பட்ட “தி கிவிங் ப்லெட்ஜ்”, உலகின் பெரும் செல்வந்தர்கள் தங்கள் பணத்தில் பெரும்பகுதியை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுமாறு ஊக்குவிக்கும் ஒரு செயல்திட்டமாகும். பஃபெட், தானே தலைமை தாங்குகிறார். மேலும் அவர் இறக்கும் நேரத்தில் தனது செல்வத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார். இது நம்பமுடியாத தாராளமான செயல்! ஆனால் அவரது தற்போதைய சொத்து மதிப்பு 72.3 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, அதாவது அவர் தனது செல்வத்தில் 99 சதவீதத்தை கொடுத்தால், இன்னும் 700 மில்லியன் டாலர்கள் மீதம் இருக்கும்.

எபேசியர்களுக்காக பவுல் 3-ஆம் அதிகாரத்தில் ஜெபித்தது; ஒருவர் எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும், கிறிஸ்துவில் இருப்பவர்களுக்கு அதைக்காட்டிலும் மிக அதிக செல்வம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தேவனின் “மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே” நாம்,”அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட” (வ.16) அணுகலாம். இந்த பணமில்லாத செல்வங்கள், அதன் பரிமாணங்களை நாம் அரிதாகவே அறிய முடியாத அளவுக்கு மகத்தான அன்பை உள்ளடக்கியது (வ.19). இன்னும் அதிகமாக; இயேசுவானவர் தம்மை விசுவாசிப்பவர்களுக்காக “வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்” (வ.20) கிரியை செய்ய வல்லவர்.

இந்த நிலையில், உண்மையான தியாகம் என்பது நமக்காகவோ அல்லது கிறிஸ்துவிலுள்ள உறவில் ஐசுவரியமுள்ளவர்களுக்காகவோ அல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். எனவே, தியாகத்திற்காக வேதத்தில் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டாலும்; விதவையின் உதாரணம் அல்லது நல்ல சமாரியன் (எதிரியைக் கவனித்துக்கொள்வதற்குத் தனது சொந்த நேரத்தையும் பணத்தையும் கொடுத்த ஒரு மனிதன்) உதாரணம் போல, நாம் எப்போதும் கருத்தில்கொண்டு செய்ய வேண்டும். (மாற்கு 12:41-44, லூக்கா 10:30-37 இல் காணப்படுகிறது).

இவ்வாறு செய்கையில், நாம் இயேசுவில் மிகுந்த ஐசுவரியவான்களாக இருப்பதையும், நமக்கான தியாகம் தியாகமே அல்ல என்பதையும் காண்போம். நாம் தேவனின் “சகல பரிபூரணத்தையும்” பெறுபவர்களாக இருக்கிறோம். இது மற்றவர்களுக்குச் சுதந்திரமாகப் பகிருவதற்கான பரிபூரணம் (எபேசியர் 3:16)!
எழுதியவர்: பீட்டர் சின்

சிந்தனை
அடுத்தது நீங்கள் இயேசுவில் பணக்காரராக உணர்கிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை? கிறிஸ்துவிலுள்ள உங்களின் பெருஞ்செல்வத்தை எவ்வாறு சிறப்பாக நினைவுபடுத்திக் கொள்வீர்கள்?