ஜனவரி, 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜனவரி 2016

அவர் உனக்காகவே வந்தார்

பிரான்ஸ் கஃப்கா (Franz Kafka 1883-1924) தன்னுடைய “சோதனையும், கோட்டை அரண்மனையும்” (The Trial and The Castle) என்னும் நாவலில், மனுக்குலம் தனிமனித அடையாளமோ, மதிப்போ இன்றி வெறும் முகங்களாகவே மாறும் அவல நிலைக்கு அவர்களைத் தள்ளும் மனிதத்தன்மையற்ற ஜீவியமாகவே இவ்வாழ்வை சித்தரித்துள்ளார். மேலும் கஃப்கா (Kafka) “ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டுச் செல்லும் கண்வேயர் பெல்ட்டை (Conveyor Belt) போல இவ்வாழ்க்கை, நம்மை ஒரு உயிரினமாகக் கருதாமல் உயிரற்ற பொருளாகவே கருதி சுமந்து செல்கிறது” என கூறியுள்ளார்.…

அவருடைய நாமத்தை உச்சரிக்கும் பொழுது

ஞாயிறு ஆராதனை வேளையிலே, அந்த பாடகர் பாடத் துவங்கியதும் முழு சபையும் நிசப்தமாயிற்று. கார்டன் ஜென்சன் (Gorden Jensen) என்பவர் ஆத்மார்த்தமான வரிகளைக் கொண்டு இயற்றிய ஒரு பழைய பாடலை கனிந்த அடிக்குரலில் அவர் பாடத் துவங்கியதும், அனைவரின் கவனமும்; அவர் மேலேயேயிருந்தது. “அவருடைய நாமத்தை உச்சரிக்கும் தூரத்தில் அவர் நம் அருகில் இருக்கிறார்” என்கிற அப்பாடல் தலைப்பு வெளிப்படுத்தும் உண்மை, நாம் வயதாக ஆக இன்னும் விலையேறப்பெற்றதாய் மாறிவிடுகிறது.

நமக்கு பிரியமானவர்களின் பிரிவை அநேக முறை நாம் அனுபவித்துள்ளோம். உதாரணத்திற்கு மகனோ, மகளோ…

அவள் தந்தையின் மிருகக்காட்சி சாலை

ஜீன் வில்லியம்ஸ் (June Williams) நான்கு வயதாய் இருந்த பொழுது அவளுடைய தந்தை தடுப்புகளற்ற, மிருககாட்சிசாலை அமைக்கும் படியாய் ஏழு ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை வாங்கினார். ஒரு வரையறைக்கப்பட்ட இடத்தில் காட்டு விலங்குகளை சுதந்திர உணர்வுடன் வாழ திறமையாய் செயல்பட்ட தன் தந்தையை குறித்து நினைவு கூர்ந்தாள். இன்று 110 ஏக்கர் பரப்பளவில் 11000 விலங்குகளுக்கு புகலிடமாக விளங்கும் செஸ்டர் மிருகக்காட்சிசாலை (Chester Zoo) இங்கிலாந்து நாட்டின் மிக பிரபலமான மிருகக்காட்சி சாலையாகும். விலங்குகள் மேம்பாடு, அதைக்குறித்தான கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றை குறித்து…

பிறரை அழைப்பதற்கு முன்பாக

சிறு பிள்ளைகளுக்குத் தாயாக இருப்பதால், சில நேரங்களில் எளிதாகப் பயந்துவிடுகிறேன். என்னுடைய மகனுக்க ஒவ்வாமை என்றாலோ அல்லது மகளுக்கு இருமல் என்றாலோ உடனடியாக என் தாயாரைத் தொலைபேசியில் அழைத்து நான் செய்ய வேண்டியதைக் குறித்துக் கேட்பேன்.

என் தாயார் எனக்கு பெரிய ஆதாரம், ஆனால் சங்கீதங்களைப் படித்தபோது, அநேகந்தரம் மனுஷனால் செய்யக்கூடாத உதவிகளை எதிர்பார்த்திருக்கிறோம் என்பதை நினைவுகூர்ந்தேன். தாவீது மகாப்பெரிய ஆபத்தின் மத்தியில் இருப்பதை சங்கீதம் 18 ஆம் அதிகாரத்தில் காணலாம். பயத்தின் மத்தியில், மரணத்தின் விளிம்பில், வேதனையின் மத்தியில் அவன் தேவனை நோக்கிக்…

இது என்ன?

பல ஆண்டுகளாக என் தாயார் ஞாயிறு வேதாகமப் பள்ளியில் பாடம் நடத்தியுள்ளார். ஒரு வாரம், தேவன் இஸ்ரவேலரை வனாந்தரத்திலே போஷித்ததை குறித்து விளக்க நினைத்தார். அக்குழந்தைகளுக்கு அக்கதை தத்ரூபமாய் இருக்க, “மன்னாவை” குறிக்கும்படியாய் ரொட்டியை சிறு துண்டுகளாக நறுக்கி, அதன் மேல் தேனைத் தடவினார். வேதத்தில், “அதன் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (யாத் 16: 31) என்று மன்னாவைக் குறித்து குறிப்பிட்டிருந்தபடியால் அவர் அவ்வாறு செய்தார்.

வானத்திலிருந்து வந்த மன்னாவை இஸ்ரவேலர் முதன்முதலில் தங்கள் கூடாரங்களுக்கு வெளியே பனியைப்போல தரையிலே படர்ந்திருக்க கண்டனர்.…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இயேசுவைப் போல் நேசித்தல்

ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் ஒரு ரயில் நிலையத்தில் நேர்த்தியாய் உடையணிந்த ஒரு இளைஞன்,  ஒரு இருக்கையில் அமர்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தான். அவன் டை கட்டுவதில் சிரமப்பட்டபோது, ஒரு வயதான பெண்மணி தன் கணவரிடம் அவனுக்கு உதவிசெய்யும்படிக்கு கேட்டுக்கொண்டார். அந்த முதியவர் குனிந்து அந்த இளைஞனுக்கு டை முடிச்சு போடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்க ஆரம்பித்தபோது, யாரோ ஒருவன் மூவரையும் புகைப்படம் எடுத்தான். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானபோது, அதைப் பார்த்த பலர் பலன் எதிர்பாராமல் உதவிசெய்வதின் முக்கியத்துவத்தைக் குறித்த தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டனர்.  
மற்றவர்களுக்கு இரக்கம் காண்பித்தல் என்பது கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், இயேசு நமக்கு செய்த தியாகமான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இது தேவனுடைய அன்பின் பிரதிபலிப்பு. மேலும் “நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே” இயேசு சீஷர்களிடம் விரும்பிய ஒரு காரியம். சகோதரனையோ சகோதரியையோ வெறுப்பதை கொலைபாதகத்திற்கு யோவான் சமமாக்குகிறார் (வச. 15). பின்பு இயேசுவையே அன்பின் கிரியைகளுக்கு அவர் மாதிரியாக்குகிறார் (வச. 16).  
தன்னலமற்ற அன்பை நிரூபிக்க அதிகப்படியான தியாகத்தை செய்திருக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, தேவ சாயலில் படைக்கப்பட்ட சக மனிதனுடைய தேவையை நம்முடைய தேவைக்கு மேலாக வைப்பதே தன்னலமற்ற அன்பாகும். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யும் வாய்ப்பு கிட்டும் சில முக்கியமான தருணங்களில் தன்னலமற்ற அன்பை பிரதிபலிக்கக்கூடும். நம்முடைய சுகமான சுயநல வட்டத்தை விட்டு வெளியேறி, நாம் செய்ய வேண்டிய அவசியமாய் தெரியாத உதவிகளையும் மற்றவர்களுக்கு செய்யும்போது, நாம் அவர்களை இயேசு நேசிப்பதுபோல் நேசிக்கத் துவங்குகிறோம் என்று அர்த்தம்.  

மன்னிப்பின் வல்லமை

ஒரு நாசக்கார கும்பலால் கடத்தப்பட்ட பதினேழு மிஷனரிகளைப் பற்றி 2021ஆம் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அவர்களுடைய மீட்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அந்தக் குழுவை (குழந்தைகள் உட்பட) கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டியது. ஆனால் ஆச்சரியமான வகையில், பிணையக் கைதிகளாய் சிக்கியிருந்த அனைத்து மிஷனரிகளும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தை வந்து சேர்ந்த மாத்திரத்தில், அவர்களை சிறைபிடித்தவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினர்: “அன்பின் மன்னிக்கும் சக்தியானது, வன்முறையின் வெறுப்பின் சக்தியைக் காட்டிலும் வலிமைவாய்ந்தது என்பதை இயேசு வார்த்தையின் மூலமாகவும் அவருடைய வாழ்க்கையின் மூலமாகவும் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். எனவே, நாங்கள் உங்களை மனப்பூர்வமாய் மன்னிக்கிறோம்” என்பதே அந்த செய்தி.  
மன்னிப்பு சக்தி வாய்ந்தது என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். அவர் “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்” (மத்தேயு 6:14) என்று கூறுகிறார். பின்பாக, எத்தனை முறை மன்னிக்கவேண்டும் என்னும் பேதுருவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கும்போது, “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” (18:22) என்று இயேசு சொல்லுகிறார். மேலும் சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று தெய்வீக மன்னிப்பை இயேசு வெளிப்படுத்திக் காண்பித்தார்.  
இருதரப்பினரும் மனப்பூர்வமாய் காயமாற்றப்பட்டு, ஒப்புரவாகும்போதே மன்னிப்பானது முழுமையடைகிறது. நம்மை பாதிப்படையச் செய்த செயல்களை நினைவிலிருந்து அகற்றி, மற்றவர்களை காயப்படுத்தாமல் உறவுகளை எவ்விதம் பேணவேண்டும் என்பதைக் குறித்த பகுத்தறிவை பெறுவது என்பது தேவனுடைய அன்பையும் வல்லமையையும் பிரதிபலிக்கும் ஆதாரங்களாய் வாழக்;கையை மாற்றும். தேவநாம மகிமைக்காய், மற்றவர்களை மன்னிக்கும் வழிகளை ஆராய்வோம்.

படைப்பைக் கண்டறிதல்

யூரேசிய நாடான ஜார்ஜியாவில் உள்ள க்ருபேரா-வோரோன்ஜா என்ற குகையானது பூமியில் இதுவரை ஆராயப்பட்ட ஆழமான குகைகளில் ஒன்றாகும். ஆய்வாளர்கள் குழுவானது அதின் செங்குத்து குகைகளின் பயமுறுத்தும் ஆழத்தை 2,197 மீட்டர் வரை ஆய்வு செய்துள்ளது. அதாவது, பூமிக்குள் 7,208 அடி வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே போன்று நானூறு குகைகள் நாட்டின் பிற பகுதிகளிலும், உலகம் முழுமையிலும் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, புதிய கண்டெடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  
படைப்பின் ஆச்சரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கண்டெடுக்கப்பட, நாம் வாழும் பூமியைக் குறித்த நம்முடைய புரிதலை வலுவாக்குவதோடு, தேவனுடைய கரத்தின் அற்புதமான கிரியைகளைக் கண்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது (ஆதியாகமம் 1:26-28). சங்கீதக்காரன் நம் அனைவரையும் தேவனின் மகத்துவத்தை “கெம்பீரமாய்ப் பாடி” சங்கீர்த்தனம் பண்ணுவதற்கு அழைப்பு விடுக்கிறார் (வச. 1). நாளை புவி தினத்தை கொண்டாடும் வேளையில், தேவனின் ஆச்சரியமான படைப்பைக் குறித்து தியானிப்போம். படைப்பின் ஆச்சரியங்கள் அனைத்தையும் நாம் கண்டுபிடித்துவிட்டோமோ இல்லையோ, அவைகள் அனைத்தையும் ஆதாரமாய் வைத்து அவருக்கு முன்பாக தலைவணங்கி ஆராதிப்போம் (வச. 6).  
அவர் தனது படைப்பின் பரந்த, பூகோள இடங்களை மட்டும் அறியவில்லை. நம் இருதயத்தின் ஆழத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஜார்ஜியாவின் குகைகளைப் போலல்லாமல், வாழ்க்கையின் இருள் சூழ்ந்த ஆழமான பள்ளத்தாக்குகளை கடந்து செல்வோம். அதுபோன்ற தருணங்களில் தேவன் நம்முடைய பயணத்தை மென்மையாகவும் உறுதியாகவும் பராமரிக்கிறார் என்பதை அறிவோம். சங்கீதக்காரனுடைய வார்த்தைகளின் படி, “நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” (வச. 7) என்பதை மறந்துவிடவேண்டாம்.