முன் நோக்கும் பார்வை
புகழ்மிக்க டச்சு ஓவியக் கலைஞர் ரெம்ப்ராண்ட் தன் 63ம் வயதில் எதிர்பாராத விதத்தில் மரித்த பொழுது அவர் படம் வறையும் திரையில் முற்றுப்பெறாத ஓர் ஓவியம் இருந்தது. இயேசு பிறந்த 40 நாட்களில் அவர் எருசலேம் தேவாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பொழுது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சிமியோன் அக்குழந்தையை ஏந்தியிருந்ததை மையமாகக் கொண்டு அவரது ஓவியம் அமைந்திருந்தது. சிமியோனைப் போல ரெம்ப்ராண்ட் தன் இறுதி காலம் நெருங்கி விட்டது என்று அறிந்து, இவ்வுலகைக் கடந்து செல்ல ஆயத்தமாக இருந்தார் என்று சில கலை வல்லுநர்கள்…
ஓர் சிறந்த காட்சி
நான் சிறுவனாயிருந்த பொழுது மரம் ஏறுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிக உயரம் ஏறும் பொழுது என்னால் அதிகமான காட்சிகளைப் பார்க்க முடியும். சில சமயங்களில் இன்னும் சற்று சிறந்த காட்சிகளைப் பார்ப்பதற்காக அங்குலம், அங்குலமாக மரக் கிளைகளைக் பற்றி ஏறி, என் எடை தாங்காமல் கிளை வளையும் அளவிற்கு ஏறிச் செல்வேன். காலப் போக்கில் மரம் ஏறும் பழக்கம் போய் விட்டது. அது பாதுகாப்பற்றது என்றோ, என் அந்தஸ்திற்கு அது உகந்ததல்ல என்றோ எண்ணி விட்டுவிட்டேன்.
சகேயு என்னும் ஐசுவரியவான் தன்னுடைய…
அமர்ந்திரு
சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு வரும் கடிதங்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் கொடுப்பேன். இவ்வாறு கடிதத் தொடர்பு இனிதே நடந்து வந்தது. பின் ஃபாக்ஸ் இயந்திரம் வந்ததால் பதில் இரண்டு நாட்களுக்குள் வந்துவிடும். அதுவும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டது. இன்று மின்னஞ்சல், குறுஞ்செய்தி (SMS), கைபேசி போன்றவற்றால் பதில் அதே நாளில் எதிர்பார்க்கப்படுகிறது!
“அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்.” சங்கீதம் 46ல் காணப்படும் நாம் நன்கு அறிந்த இந்த வசனத்தில் ஒர் முக்கியத்துவத்தை உடைய இரண்டு கட்டளைகளை நான் வாசித்தேன். முதலாவது நாம் அமர்ந்திருக்க…
மலையிலிருந்து தோன்றும் காட்சி
எங்கள் இடமோ பள்ளத்தாக்கு. குளிர்காலத்தில் மிகவும் குளிராக இருக்கும். மேகமும், மூடுபனியும் பரவி தரையில் உஷ்ணமான பகுதிக்கு கீழ் குளிர்காற்று இருக்கும்படி செய்யும். ஆனால் நீங்கள் இந்த குளிர்காற்றுக்கு மேலே வந்துவிடலாம். எங்கள் பள்ளத்தாக்கிலிருந்து 7500 அடி உயரமுள்ள ஷாஃபர் பூட் மலையின் பக்கவாட்டில் சுற்றிச் சுற்றிச் செல்லும் ஓர் சாலை அருகாமையில் உள்ளது. சில நிமிடங்கள் காரில் பயணித்தால் மூடு பனியிலிருந்து வெளியேறி, பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரிய ஒளிக்கு வந்து இதமான சூட்டை உணரலாம். மலைமேலிருந்து குனிந்து கீழே பள்ளத்தாக்கை மூடியிருக்கும் மேகத்தின்…
நான்கு விதத்தில் பார்க்க வேண்டும்
ஜோன் ஆராதனைக் கூட்டத்தில் உட்கார்ந்திருந்த பொழுது தன் பிள்ளைகளின் சில பிரச்சனைகளைப் பற்றிய காரியங்களைக் குறித்துப் போராடிக் கொண்டிருந்தாள். சோர்வுற்றவளாய் தன் தாய்மைப் பொறுப்பிலிருந்து விலகிவிட விரும்பினாள். விட்டுச் செல்ல வேண்டுமென்று எண்ணுபவர்களுக்கு உற்சாகமும், ஊக்கத்தைக் கொடுக்க கூடிய செய்தியை, அன்று செய்தி கொடுத்தவர் பகிர்ந்து கொண்டார். அன்று காலை ஜோன் கேட்ட செய்தியில் அடங்கிய நான்கு சாராம்சங்கள் அவள் தொடர்ந்து தன் தாயின் ஸ்தானத்தில் தொடர்ந்து செல்ல உதவியது.
மேல் நோக்கி பார்த்து ஜெபி: ஆசாப் இரவு முழுவதும் ஜெபித்து, தேவன் இரக்கஞ்…
விசுவாசத்தின் குரல்
கேட்ட செய்தி மரத்துப்போகச் செய்தது. கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. பல கேள்விகள் எழுந்தன. பயம் அவளை ஆட்கொண்டு அச்சுறுத்தியது. இதுவரை வாழ்க்கை சுமுகமாகப் போய் கொண்டேயிருந்தது. ஆனால், திடீரென கஷ்டம் ஏற்பட்ட பொழுது எந்தவித அறிவிப்புமின்றி நிரந்தர மாற்றம் ஏற்பட்டது.
சோகமான காரியங்கள் பலவிதங்களில் நம்மைத் தாக்குகிறது - நாம் நேசிக்கும் ஒருவரின் இழப்பு, வியாதி – செல்வத்தை இழத்தல், அல்லது நமது வாழ்வாதாரத்தை இழத்தல் போன்றவை. இது யாருக்கும், எந்த சமயத்திலும் நேரிடலாம்.
ஆபத்து வரப்போவதை ஆபகூக்…
தனிமையும் சேவையும்
புகழ் மிக்க மனிதன் என்பவன் தன் வாழ்நாள் முழுவதும் தான் புகழ் அடைவதற்காக கடினமாக உழைத்து, பின் பிறர் தன்னை கண்டுபிடிப்பதைத் தவிர்க்க கருப்புக் கண்ணாடியை அணிந்து கொள்பவன் என்று நகைச் சுவை நடிகர் ஃப்ரெட் ஆலன் கூறியுள்ளார். புகழ் பெற்றவர்கள் மீது ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வதால் தனிமையை அவர்கள் இழந்து போகிறார்கள்.
பொது இடங்களில் இயேசு போதிக்கும், குணமாக்கும் தம் ஊழியத்தைத் துவங்கிய பொழுது, பொது மக்கள் அவரையே சூழ்ந்து கொண்டு அவரின் உதவியை நாடி நின்றார்கள். எங்கு சென்றாலும் ஒரு…
கதவுகளைத் திறத்தல்
அமெரிக்க விளையாட்டுகளில் சார்லி சிஃபோர்ட் ஓர் முக்கியமான நபர். ப்ரஃபஸனல் கோல்ஃப் அசோசியேஷனில் கோல்ஃப் விளையாடும் உறுப்பினராகக் சேர்ந்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்கராவார். இவர் 1961ம் ஆண்டு வரை “வெள்ளையர் மாத்திரம்” என்ற விதிமுறை உள்ள உட்பிரிவில் கூறப்பட்ட விதிமுறையின்படி இன வேறுபாட்டினால் ஏற்பட்ட அநீதி அச்சுறுதல் ஆகியவற்றைக் சகித்துக் கடந்து சென்றார். அவர் 2004 ஆம் ஆண்டில் “உலக கோல்ஃப் புகழ் ஹால் அரங்கத்தில்” சேர்க்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கரும் ஆவார். விளையாட்டையே தம் தொழிலாகக் கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அங்கு…
நம் இருதயங்களில் எழுதப்பட்டுள்ளது
என் வீட்டிற்கு அருகில் பலகைகளிலும், சுவர்களிலும், கதவு நிலைகளிலும், வணிக வாகனங்களிலும், பதிவு செய்யப்பட்ட வியாபார ஸ்தலங்களிலும் கூட சமய சார்பான வசனங்கள் எழுதப்பட்டவையாக அபரிவிதமாகக் காணப்பட்டது. ஓர் சிற்றுந்தில் “தேவனுடைய கிருபையால்” என்று எழுதப்பட்டிருந்தது. ஓர் வர்த்தகப் பெயர் பலகையில் “தேவனின் தெய்வீக அனுகிரகம் பெற்ற புத்தகக்கடை” என்று எழுதப்பட்டிருந்தது. “விலகிச் செல்லுங்கள் - தேவதூதர்கள் காவல் காக்கிறார்கள்” என்று ஓர் மெர்சிடெஸ் பென்ஸ் காரில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து என்னால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.
இப்படிப்பட்ட சமய சம்பந்தமான வார்த்தைகள் சுவரில் மாட்டப்பட்ட…