நான் சிறுவனாயிருந்த பொழுது மரம் ஏறுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிக உயரம் ஏறும் பொழுது என்னால் அதிகமான காட்சிகளைப் பார்க்க முடியும். சில சமயங்களில் இன்னும் சற்று சிறந்த காட்சிகளைப் பார்ப்பதற்காக அங்குலம், அங்குலமாக மரக் கிளைகளைக் பற்றி ஏறி, என் எடை தாங்காமல் கிளை வளையும் அளவிற்கு ஏறிச் செல்வேன். காலப் போக்கில் மரம் ஏறும் பழக்கம் போய் விட்டது. அது பாதுகாப்பற்றது என்றோ, என் அந்தஸ்திற்கு அது உகந்ததல்ல என்றோ எண்ணி விட்டுவிட்டேன்.

சகேயு என்னும் ஐசுவரியவான் தன்னுடைய மதிப்பு, மரியாதை எல்லாவற்றையும் புறம்பே தள்ளி விட்டு (ஒருவேளை தன் பாதுகாப்பையும் கூட மனதில் கொண்டிருக்காமல்) எரிகோவில் ஓர் மரத்தில் ஓர் நாள் ஏறினான். இயேசு அந்த வழியாக பயணம் செய்ததினால் சகேயு அவரைக் காண வேண்டும் என வாஞ்சித்தான். அவன் குள்ளனாயிருந்த படியினால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காண முடியவில்லை (லூக்கா 19: 3). ஆனால், அப்படிப்பட்ட இயலாமை அவன் இயேசுவைப் பார்ப்பதையோ, அவருடன் பேசுவதையோ தடை செய்யவில்லை. சகேயுவின் திட்டம் நடந்தேறியது! அவன் இயேசுவைச் சந்தித்த பொழுது, அவன் வாழ்க்கை முற்றிலும் மாறி விட்டது. “இன்றைக்கு இந்த வீட்டிற்கு ரட்சிப்பு வந்தது” என்று இயேசு கூறினார் (வச 9).

இயேசுவைக் காணக் கூடாதபடிக்கு நாமும் தடை பண்ணப்படலாம். பெருமை நம் கண்களை மறைத்து, அவர் ஆலோசனையில் ஆச்சரியப்படத்தக்கவர் என்பதை அறிந்து கொள்ளத் தடை செய்யலாம். மனக்கவலைகள் அவர் சமானதான பிரபு என்பதை அறிந்து கொள்ளாமல் தடுக்கலாம் (ஏசாயா 9: 6). அந்தஸ்து, உலகப் பொருட்களின் மீதுள்ள பற்று அவரே திருப்திப்படுத்தக்கூடிய இவரென்பதைக் காணமுடியாதபடி செய்யலாம். ஜீவ அப்பம் நானே (யோவான் 6: 48).

இயேசுவை சிறந்த முறையில் தரிசிப்பதற்கு நீங்கள் செய்ய விரும்புது என்ன? அவரை கிட்டிச் சேர்ந்து நல்ல பலனைப் பெற்றுக் கொள்ள நேர்மையுடன் முயற்சி எடுக்கிறீர்களா? உண்மையாய் அவரைத் தேடுகிறவர்களுக்கு தேவன் பலனளிக்கிறவராய் இருக்கிறார் (எபிரேயர் 11:6).