வகை  |  odb

கிருபையினால் ஆச்சரியப்படுதல்

மிச்சிகனில் உள்ள கிராண்ட் ராப்பிட்ஸில் வாழ்ந்து வந்த ஒரு பெண், அவளது கணவர் உறங்குவதற்காகப் படுக்கை அறைக்குச் சென்றபின். ஓய்வெடுக்கும் இருக்கையிலேயே உறங்கி விட்டாள். அந்த தம்பதியினர், அறையில் இருந்த நழுவும் கதவினைப் பூட்ட மறந்துவிட்டனர். அதன் வழியாக அழையா விருந்தாளியாக ஒரு மனிதர் திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைந்து விட்டான். கணவர் உறங்கிக் கொண்டிருந்த படுக்கை அறைக்குச் சென்று அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கினான். உறங்கிக் கொண்டிருந்த அந்த மனிதன் விழித்துக் கொண்டான். அங்கு நின்று கொண்டிருந்த ஓர் உருவத்தைப் பார்த்து, “அன்பே படுக்கைக்கு…

என் பெலனாகிய தேவன்

பண்டைய பாபிலோனிய வீரர்கள் நன்னடைத்தை உடையவர்கள் அல்ல. அவர்கள் இரக்கமற்றவர்களும் முரடர்களும், வீம்புக்காரராயும் இருந்தார்கள். பிறருக்கு கேடுண்டாக்கும் தன்மையுடையவர்கள். கழுகானது அதன் இரையைப் பாய்ந்து பிடிப்பது போல, அவர்கள் மற்ற நாடுகளின் மேல் தாக்குதல் நடத்துவார்கள். அவர்கள் வல்லமையுடையவர்கள் மட்டுமில்லாது மிகவும் கர்வமும்; உடையவர்கள். உண்மையில் அவர்களது போராடும் திறமையையே கடவுளாக ஆராதிப்பார்கள். அவர்களது தேவனே அவர்களது பெலன் என்று கூறினார்களென்று வேதாகமம் கூறுகிறது (ஆபகூக் 1:11).

இஸ்ரவேல் மக்கள், மீதியானியருக்கு எதிராகப் போராட ஆயத்தமான பொழுது இப்படிப்பட்ட சுயம் சார்ந்த தன்மை இஸ்ரவேலைப்…

ஆச்சரியப்படுதல்

மைக்கல் ஏஞ்சலோ மெரிசி டா காரவாகியோ (1571-1610) என்ற இத்தாலியக் கலைஞர், ஆத்திரத்துடன் செயல்படும் குணத்தையும், வழக்கத்திற்கு மாறாக செயல்படும் திறனுக்கும் பெயர் பெற்றவர். அவர் தமது ஓவியத்தில் வரையும் புனிதர்களுக்கு மாதிரியாக மிகவும் சாதாரண மக்களை மாதிரியாக வைப்பதும், அவரது வண்ண ஓவியத்தைப் பார்ப்பவர்கள், அவரது ஓவியத்தில் வரையப்பட்டுள்ள கதாபாத்திரங்களில் ஒருவனாக தங்களைக்காணக் கூடிய முறையிலும் அவரது ஓவியங்கள் இருக்கும். “எம்மாவூரில் இரவு உணவு” என்ற ஓவியத்தில் சத்திரத்தின் உரிமையாளர் நிற்பதாகவும், இயேசுவும், அவருடைய இரண்டு சீஷர்களும் உணவருந்த உட்கார்ந்திருப்பது போலவும் அந்த…

ஈஸ்டர் ஆரம்பம்

ஈஸ்டர் பற்றிய கதையில் ஒரு குறிப்பு எப்பொழுதும் என் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. சிலுவையில் அறையப்பட்டதினால் ஏற்பட்ட தழும்புகளை இயேசு ஏன் வைத்திருந்தார்? உயிர்த்தெழுந்த பின் அவர் விரும்பிய எந்தவிதமான சரீரத்தையும் அவர் உடையவராக இருந்திருக்கலாம். எளிதில் யாவரும் அடையாளம் கண்டு கொள்வதற்காக அவர் தழும்புகளுள்ள சரீரத்தைக் தெரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏன் அப்படி?

இயேசுவுடைய கைகளில் கால்களில் அவருடைய விலாவில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் இல்லாவிட்டால், ஈஸ்டரைப் பற்றிய விவரங்கள் முழுமை பெற்றவைகளாக இருக்க இயலாது (யோவான் 20:27). மனிதர்கள் முத்துப் போன்ற…

ஒருக்காலும் கைவிடப்படவில்லை

ஃபையோடர் டோஸ்டோவிஸ்கி என்ற ரஷ்ய எழுத்தாளர் “ஒரு சமுதாயத்துடைய நாகரீகத்தின் முன்னேற்றத்தின் அளவை அங்குள்ள சிறைச்சாலைகளுக்குச் சென்று பார்ப்பதின் மூலம் தீர்மானிக்கலாம்” என்று கூறினார். அந்த விளக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு, “உலகில் உள்ள சிறைகளில் மிகவும் பயங்கரமான 8 சிறைகள்” பற்றி கணிப் பொறியில் இணைக்கப்பட்டு வெளியான செய்தி ஒன்றை வாசித்தேன். இந்த 8 சிறைகளில் குறிப்பிட்ட ஒரு சிறையில் ஒவ்வொரு கைதியும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

நாம் ஒரு சமுதாயமாக, ஒருவரோடொருவர் உறவு கொண்டு வாழ உருவாக்கப்பட்டுள்ளோமே ஒழிய, தனிமையில் வாழ…

மூன்று வார்த்தை மரண அறிவிப்பு

ஸ்டிக் கெர்னல் மரிக்கும் முன்பு, உள்ளுரில் உள்ள இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தின் பொறுப்பாளரிடம், தான் இறந்தபின்பு, தன்னைப் பற்றிய வழக்கமான இறப்பு செய்தியை அவர் விரும்பவில்லை என்று கூறினார். அதற்குப் பதிலாக அவர் இறந்த செய்தியை அறிவிக்கும்பொழுது, “நான் மரித்து விட்டேன்” என்ற மூன்றே வார்த்தைகளில் அறிவிக்க வேண்டும் என்று சுவீடன் நாட்டைச் சேர்ந்த கெர்னல் கேட்டுக் கொண்டார். கெர்னல் அவரது 92வது வயதில் மரித்த பொழுது செய்தித் தாள்களில் அவரது இறப்பு பற்றி மேலே கூறப்பட்ட மூன்றே வார்த்தைகளே வெளிவந்தன. வழக்கத்திற்கு…

ஒலிவ எண்ணெய்க் செக்கு

கலிலேயாக் கடலில் அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு நீங்கள் சென்றால், பழங்காலத்து ஒலிவச் செக்குகள் பலவற்றை நீங்கள் பார்க்கலாம். அவைகள் எரிமலைகளிலிருந்து கிடைக்க கூடிய கரும்பாறைகளால் செய்யப்பட்டிருக்கும். அதில் ஒரு குழியுடன் கூடிய வட்டவடிவமான பெரிய அடிப்பாகமும், ஒலிவக் காய்களை அரைக்கக் கூடிய அரைக்கும் சக்கரமும் காணப்படும். அந்த குழிக்குள்ளாக ஒலிவக் காய்கள் போடப்பட்டு கடினமான கல்லினால் செய்யப்பட்டுள்ள அரவைச் சக்கரங்களால் அரைக்கப்படும். அவ்வாறு அரைக்கப்படும்பொழுது காய்களிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.

இயேசு மரணமடைந்த நாளிற்கு முந்தினநாள், எருசலேமிற்கு அருகில் இருந்த ஒலிவமலைக்கு போனார். அங்கு கெத்சமனே…

மரக்குடிசையில் கூறும் கதைகள்

அந்தப் பழைய மரக்குடிசை கைகளினால் இழைக்கப்பட்ட மரக்கட்டைகளால் கட்டப்பட்டு இருந்தது. மாதந்திரப் பத்திரிக்கைகளில் முன்பக்க அட்டையில் போடக் கூடியது போன்ற மிகவும் அழகான குடிசையாக இருந்தது. அதன் வெளிப்புறம் அதனுடைய உண்மையான மதிப்பினை முழுவதுமாக வெளிப்படுத்தவில்லை. அக்குடிசையின் உள்பக்கமாக அதனுடைய சுவரில், தொங்கவிடப் பட்டிருந்த அநேக விலை மதிப்புள்ள பொருட்கள் அக்குடும்பத்திற்கே சொந்தமானவைகளாகும். அவைகள் அனைத்தும் வீட்டில் உள்ளவர்களின் நினைவலைகளைத் தூண்டக் கூடியவைகளாக இருந்தன. மேஜையின் மேல் கைகளினால் பின்னப்பட்ட முட்டை வைக்கும் கூடை, பழங்கால பிஸ்கட் தட்டு, மேலும் ஓர் எண்ணெய் விளக்கு…

மேலும் சிறப்பானது இனிமேல் தான் வரவுள்ளது

எங்களது குடும்பத்தில் மார்ச் மாதம் என்றால் குளிர்காலத்தின் முடிவு என்று அர்த்தமாகும். அத்தோடு கூட கல்லூரியின் கூடைப்பந்தாட்டத்தின் ஆடம்பரமான “மார்ச் மாத பைத்தியம்” என்ற போட்டிகள் வந்துவிட்டது என்று அர்த்தம். ஆர்வமுள்ள ரசிகர்களாக மிகவும் உற்சாகத்துடன் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதோடு எங்களுக்கு விருப்பமான குழு வெற்றி அடைய வேண்டும் என்று ஆதரவுகளையும் அளிப்போம். அதிகாலையில் எங்களது தொலைக் காட்சிப் பெட்டியை இயக்கியவுடன் ஒளிபரப்பாளர்கள் வர இருக்கும் விளையாட்டைப் பற்றி விமர்சிப்பதைக் கேட்கவும், விளையாட்டுக்கு முன் விளையாட்டு வீரர்கள் பந்தை எறிந்து பழகுவதையும், சக விளையாட்டு…