எங்களது குடும்பத்தில் மார்ச் மாதம் என்றால் குளிர்காலத்தின் முடிவு என்று அர்த்தமாகும். அத்தோடு கூட கல்லூரியின் கூடைப்பந்தாட்டத்தின் ஆடம்பரமான “மார்ச் மாத பைத்தியம்” என்ற போட்டிகள் வந்துவிட்டது என்று அர்த்தம். ஆர்வமுள்ள ரசிகர்களாக மிகவும் உற்சாகத்துடன் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதோடு எங்களுக்கு விருப்பமான குழு வெற்றி அடைய வேண்டும் என்று ஆதரவுகளையும் அளிப்போம். அதிகாலையில் எங்களது தொலைக் காட்சிப் பெட்டியை இயக்கியவுடன் ஒளிபரப்பாளர்கள் வர இருக்கும் விளையாட்டைப் பற்றி விமர்சிப்பதைக் கேட்கவும், விளையாட்டுக்கு முன் விளையாட்டு வீரர்கள் பந்தை எறிந்து பழகுவதையும், சக விளையாட்டு வீரர்களுடன் இணைந்து செய்யும் உடற்பயிற்சியையும் காணச்சந்தர்ப்பம் கிடைக்கும்.

இவ்வுலகில் நமது வாழ்க்கையும் உண்மையான கூடைப்பந்து விளையாட்டிற்கு முன்பு எடுக்கும் பயிற்சி விளையாட்டைப் போன்றதேயாகும். வாழ்க்கை மிக ஆர்வமுடையதாகவும், நம்பிக்கையூட்டக் கூடியதாகவும் உள்ளது. ஆனால் இது இனிவரப்போகும் வாழ்க்கையோடு ஒப்பிடத்தக்கதல்ல. வாழ்க்கை இனிமையானதாக இருந்தாலும், இன்னும் மேன்மையானது இனிமேல் வருவதுதான். அல்லது தேவையில் உள்ளவர்களுக்கு மனமுவந்து கொடுத்து உதவும் பொழுது பரலோகத்தில் பொக்கிஷங்களை முதலீடு செய்வதாகும், என்பதை அறிந்து கொள்வதும் மகிழ்ச்சியூட்டும் காரியமாகும். கஷ்டங்களிலும், துன்பங்களிலும், இருக்கும் பொழுது வேதனை இல்லாத, கண்ணீரில்லாத, நித்தியமான வாழ்க்கை நமக்காக காத்திருக்கிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ளும் பொழுது, நமக்கு நம்பிக்கை உண்டாகிறது. ஆகவே “மேலானவைகளை நாடுங்கள் (கொலோ 3:2) என்று பவுல் ஊக்குவிப்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.

வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கு நமக்கு உதவி செய்வதாக எதிர்காலத்தை நன்கு அறிந்துள்ள தேவன் நமக்கு வாக்குப் பண்ணியுள்ளார். இவ்வுலக வாழ்க்கை மிகவும் சிறந்ததாக இருந்தாலும், அதைவிடச் சிறந்த வாழ்க்கை இனிமேல் தான் வர இருக்கிறது. பரலோகத்தின் ஒளியில் பூலோகத்தில் வாழ்வது மிகப்பெரிய சிலாக்கியமாகும்.